இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் விதையாய் ...

படம்
மனிதர்களைத் தொலைத்துவிட்டு மரங்களை நடுகின்றோம் அவைதான் எத்தனை அடிகளையும் தாங்குமே பூக்கும் பருவத்தில் முகர்ந்து பார்ப்பர் காய்ந்த மாடு கம்பில் விழுவது போல் உரசியும் பார்ப்பர் உணர்ச்சிகள் மீறினால் புணர்ந்துவிட்டு புயல் தான் வந்து சிதைத்ததென்று கூசாது பொய்யுரைப்பர் கனிதரும் வயதில் கைதொட விடாவிடின் பசுமைப் புரட்சிச் சட்டத்தின் கீழ் கைது செய்வர் புழுக்கள் உள்நுழையும் பூச்சிகள் சுற்றி மொய்க்கும் அணில் கூட வந்து கடித்துப் பார்க்கும் உன் அழுகை யாருக்கும் கேட்காது காய்த்த மரம்தான் கல்லடிபடும் காய்த்து உன்குற்றம் என்று ஐநாவைக் கூட ஏமாற்றுவர் கமேரூன் வந்து பார்ப்பார் கௌரவம் என நீ நினைப்பாய் கல்லைத் தேடி இவர்கள் கண்கள் செல்லும் மீண்டும் விதையாய் விழுவாய் இந்த மண்ணில் யார் கரங்களில் கதறி அழுவதற்கோ?

உயிரற்ற ஜீவன்கள்

படம்
அக்டோபர் 1990ல் ஒரு நாள். விடுமுறையில் வந்த அப்பா, அப்போது நான்காவது படித்துக்கொண்டிருந்த அவளையும், அம்மாவையும் ஏற்றிக்கொண்டு ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் மடுவுக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் மூவர் இருப்பதற்கே இடமில்லை, அதற்குள் பின்னல் ஒரு மூட்டை வேறு. அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு. அதனால் வாகனங்களின் எஞ்சினில் என்னமோ தில்லுமுல்லு பண்ணி  மணெண்ணெயில் ஓடப் பண்ணியிருந்தார்கள். ஸ்டார்ட் பண்ணுவதற்கு மட்டும் சிறிது பெட்ரோல் விட்டால் போதும். முதலில் கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் போகப் போக சரியாயிடும் என்று அவர் சொன்னதை நம்பி அவர்களும் புறப்பட்டு விட்டனர். வழியில் இரண்டொரு தடவை நின்றபோதே வேண்டாம் திரும்பி போவம் என்று சொன்னாள். யார் கேட்டார்கள்? விடியக் காலமை வெளிக்கிட்டால் பின்னேரதிற்கு முன்பு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் மதியம் தாண்டிய போதே காடுகள் தெரியத் தொடங்கிவிட்டன. மடுவை அண்மித்துவிட்டோம் என்று சந்தோசப்படுகையில் தான் அந்த முற்றிலும் எதிர்பார்த்த சம்பவம் நடந்தே விட்டது. எத்தனை காடுமேட...

தபாலகங்கள்

படம்
அன்புள்ள நண்பி நிஷாவுக்கு, நலம். நலமறிய ஆவல். உனது கடிதம் நேற்றுத்தான் கிடைத்தது. வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி. நீ எமது பாடசாலையில் கேம்ஸ் கேப்டன் ஆக தெரிவாகியிருப்பதாக சொல்லியிருந்தாய். சந்தோசம். எமது பாடசாலை நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக வகுப்பறைக்கு போகாமல் இருப்பதற்காகவே சேர்ந்துகொள்ளும் விளையாட்டுப் பயிற்ச்சிகள்.. ஒருமுறை நீ, நான், தாமரா மூவரும் விளையாட்டுப் பயிற்சி இருக்கெண்டு நினைத்து நிற உடுப்பில் போய், இல்லையென்று அறிந்ததும் களவாக சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடும் சமயம் அதிபரிடம் மாட்டினோம். அவர் தீர விசாரித்த பின்னர் மன்னித்து வகுப்புக்குப் போகச்சொன்னர். ஆனால் அதன் பின்னர் புதிதாய் வந்திருந்த வகுப்பாசிரியை அனைவரின் முன்னாலும் வைத்து திட்டித் தீர்த்தார். தவிர அன்று தான் நாம் அவவின் வகுப்பு என்றே தெரியும் என்று கூறினார். (எமக்கு மட்டும் என்னவாம்?) தாமரா வழமைபோல சிரித்துக்கொண்டிருந்தாள். தொட்டாச்சிணுங்கி நானோ கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருக்க, நீ எல்லோருக்குமாய்ச் சேர்த்து அழுது தீர்த்தாய். ஞாபகமிருக்கிறதா? ........