இடுகைகள்

Himalaya Creations லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Y.Ananthan (Quad CCIE #28365)

படம்
உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம்.  இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு மங்கள நாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவதாக பத்தாவது முறையாக முடிவெடுத்திருந்தனர். ஆனாலும் முந்தைய ஒன்பது முடிவுகளின் பின்னர் போல் இல்லாமல் இம்முறை கம்பஸ் முடிந்து விட்ட காரணத்தினால் இனிமேல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அரிது என்பதனால் சற்று அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் அவளுக்கு என்ன தோன்றியதோ திடீரென்று கேட்டாள். அவனின் வாழ்க்கையின் கனவு/லட்சியம் என்னன்னு.. இதற்க்கு முன்பும் பல தடவை கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஒவ்வோர் முறையும் ஒவ்வோர் பதிலை சொல்லியிருக்கிறான். ஆனால் எந்தப் பதிலும் அவளுக்கு திருப்பதி தரவில்லை. அதாவது அவனது ஆழ்மனது ஆசையாக அவளுக்குப் படவில்லை. ஏதோ வாழ்க்கையை சுமூகமாய் ஒட்டி கரை சேர்ப்பதற்குத் தேவையான வரையறைக்குள் மட்டுப்பட்டிருந்தது. இம்முறை அவள் இரண்டாவது, மூன்றாவது முறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்காமல் அசிரத்தையாக ஏதோ ஆழ்ந்த யோசனையில்...

தபாலகங்கள்

படம்
அன்புள்ள நண்பி நிஷாவுக்கு, நலம். நலமறிய ஆவல். உனது கடிதம் நேற்றுத்தான் கிடைத்தது. வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி. நீ எமது பாடசாலையில் கேம்ஸ் கேப்டன் ஆக தெரிவாகியிருப்பதாக சொல்லியிருந்தாய். சந்தோசம். எமது பாடசாலை நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக வகுப்பறைக்கு போகாமல் இருப்பதற்காகவே சேர்ந்துகொள்ளும் விளையாட்டுப் பயிற்ச்சிகள்.. ஒருமுறை நீ, நான், தாமரா மூவரும் விளையாட்டுப் பயிற்சி இருக்கெண்டு நினைத்து நிற உடுப்பில் போய், இல்லையென்று அறிந்ததும் களவாக சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடும் சமயம் அதிபரிடம் மாட்டினோம். அவர் தீர விசாரித்த பின்னர் மன்னித்து வகுப்புக்குப் போகச்சொன்னர். ஆனால் அதன் பின்னர் புதிதாய் வந்திருந்த வகுப்பாசிரியை அனைவரின் முன்னாலும் வைத்து திட்டித் தீர்த்தார். தவிர அன்று தான் நாம் அவவின் வகுப்பு என்றே தெரியும் என்று கூறினார். (எமக்கு மட்டும் என்னவாம்?) தாமரா வழமைபோல சிரித்துக்கொண்டிருந்தாள். தொட்டாச்சிணுங்கி நானோ கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருக்க, நீ எல்லோருக்குமாய்ச் சேர்த்து அழுது தீர்த்தாய். ஞாபகமிருக்கிறதா? ........

"a journey through a century" Documentary Film

படம்
"சிங்கம் சிங்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தரம் டிவியில அலறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலை, ஒரு ஆவணப் படத்துக்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியது இவங்களாத்தான் இருக்கும். குறுந்தட்டு வெளியீட்டிற்கு  இந்திய சினிமா ஆடியோ ரிலீஸ் போலவே ஐந்தடி உயரத்தில் கவர் மாதிரியுரு செய்திருந்தனர்.  Trailer பற்றி சொல்லவே தேவையில்லை. வழமைபோல் Music இல் சுகன்யன் பிரித்து மேய்ந்திருக்கிறார். இந்த ஆவணப் படமானது வடக்கின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான Himalaya Creations (Pvt) Ltd இனால் மிகவும் குறுகியகாலப்பகுதியில் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்க்கான இசையினை Thunderknight Music இனுடைய டைரக்டர் S sukanyan அமைத்துள்ளதோடு, யாழில் முதன் முறையாகபிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் College Hymn இற்கான Mastering இனை ஹாலிவுட்டின் பிரபல "Universal Mastering Studio" செய்திருக்கிறது.  உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள திறமையான வல்லுனர்களையும், தரமான நிறுவனங்களையும் ஈடு படுத்தியதநூடாக Himalaya Creations (Pvt) Ltd மிகத்தரமான படைப்பினை வழங்கியிருக...

வில்லாடிய களமெங்கே?

படம்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒருநாள். St. Johns' கல்லூரி மைதானத்தின் நடுவே உச்சி வெயில் மண்டையப் பிளக்க ஆண்கள், பெண்கள் என்று பல நூற்றுக்கணக்கான இளையோர் வேர்க்க விறுவிறுக்க ஆள் மாறி ஆள் அணி மாறி அணிகள் என்று பல்வேறு வீர சகாசச் செயல்களை அரங்கில் நடாத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். தீமூட்டிய வளையங்களுக்குகூடாகப் பாய்தல், ஹிட்லர் மார்ச்சிங் (நாம் வைத்த பெயர்) என்று ஆண்கள் ஒருபக்கத்தில் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பெண்கள் அணிகளும் (தீமூட்டாத) வளையங்களுக்கூடாகப் பாய்தல், tiger மார்ச்சிங் என்று தாமும் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருந்தனர். ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஆறு ஏழு அணிகளின் சாகாச நிகழ்வுகளை நடத்தக் கூடியளவுக்கு அந்த மைதானம் சற்று விஸ்தீரணமாகவே இருந்தது.   நம்மளை கண்டுபிடியுங்க பாக்கலாம்? அங்கு தான் அனன்சியா  அக்காவின் தலைமையில் களமிறங்கிய எமது அணி மிகச்சிறப்பாகவே களமாடி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை தட்டிச் சென்றது. முதலாமிடத்தை வழமை போலவே வேம்படி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டது. அதற்க்கு அடுத்த ...

அக்க்ஷய திருதியை

படம்
ஐஸ்வர்யம் தேடிவரும் அக்க்ஷய திருதியை நன்னாளில்.. வரும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதிகளில் உங்களுக்காக.. ஸ்ரீ நதியா நகை மாளிகையில் மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.. அக்க்ஷய திருதியைக்கான விளம்பரம் நாற்பதாவது செக்கனில் தொடங்குகிறது. இதன் சிந்தனை உருவாக்கம் மட்டுமன்றி set-properties ஒழுங்கு செய்ததிலிருந்து மீன்களை நடிக்கவைத்தது வரை இந்த விளம்பரத்தின் முற்று முழுதான creditsம் எமது Creative Director பிருந்தாவனையே சாரும். தனது முதலாவது படைப்பை வெகுசிரத்தையெடுத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்குள் திருப்திகரமாய் கொடுத்திருக்கிறார்.  தங்கக் கழுத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, தங்க மீன்கள் மத்தியில் ஜொலிக்கும் தங்கம் அழகாயிருக்கிறது. யார் கண்டார்? இதைப் பார்த்துவிட்டு இனி பணக்கார வீட்டு மீன்தொட்டிகளில் கற்களுக்குப் பதில் தங்கத்தைப் போட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.  அக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை.  2006 சித்திரைக் கடைசி. "ஒன்ப...

கரிகணன் ஒளிவீச்சு

படம்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரில் வருடாவருடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நிகழ்வு மேதின ஊர்வலம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாய் புதுசாய் பிரமாண்டமாய் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். ஒளிவீச்சுக்கள் பார்க்கையில் மெய்சிலிர்க்க வைக்கும். நம்மவர்க்குள் இத்தனை திறமைகளா என்று பலதடவை வியந்திருக்கிறேன். வண்ணங்கள், அமைப்புகள், அலங்காரங்கள், இசை என்று ஒவ்வொன்றிலுமே தனி அக்கறை காட்டியிருப்பார்கள். அனைத்திலும் ஒருவித ஒழுங்கு, நேர்த்தி இருக்கும்.  எத்தனை சவால்கள் பலரின் நிகரற்ற உழைப்பு தசாப்தகால உழைப்பின் சாதனை பிரமிக்கவைக்கும் படைப்புகள் ஓர் சாதனைப் பயணம்  போராட்டத்தில் நாம் இழந்தது எத்தனையோ. அவை என்றுமே ஆறாத வடுக்களாய் பதிந்திருக்கும். ஆனால் அவை எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் வேறெந்த கல்விக்கூடங்களாலும் கற்றுத் தரமுடியாதவை. மண்ணெண்ணெய்யில் ஓடும் வண்டிகள், சிக்கன அடுப்பு, குப்பி விளக்கு என்பன தொடங்கி நீர்மூழ்கிக் கப்பல், அதிவேக படகுகள், ஆகாய விமானங்கள் வரை பொருளாதாரத் தடை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டிருந்த போராட்ட காலத்தில் கூட நாம் ச...

உழைப்பாளிகள் தினம்

படம்
"ஒரு Documentary செய்வதற்கு எட்டு மாசம் எடுக்குமா?" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் "ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா? " என்று வியந்து இன்னொரு நண்பரிடம் நானும் கூடக் கேட்டிருந்தேன். ஆவணப் படம் எடுப்பதென்பது கிட்டத்தட்ட அவர்களது பயணத்தை அவர்கள் கூடவே நாமும் பயணிப்பது போன்றது. சாதாரணமாக ஒரு விளம்பரம் / குறும்படம் செய்வது போலல்லாமல் இது அவர்கள் கூடவே பயணித்து அவர்களின் வலிகளை சாதனைகளை மிகைப்படுத்தாமல் அதேசமயம் சுவாரசியம் குறையாமலும் கொடுக்கவேண்டும். மிகவும் சிரமமான ஒரு வேலை. சில நிகழ்வுகள் நேரடியாக இருக்கும், ரீ-டேக் போகமுடியாது. ஒருமுறை சரிவர எடுக்கத் தவறினால் தவறினது தான். உதாரணத்துக்கு ஹோர்டிங் ஆரம்பகட்ட வேலைகள். நாமும் ஹோர்டிங்க்ஸ் போடுகிறோம் என்றுவிட்டு வெறுமனே ஒரு shotஇல் இதனைக் காட்டிவிட முடியும். ஆனால் அதன் ஆரம்பகட்ட வேலைகள் தொடக்கம் அதனை மாட்டுவது வரை இரவு பகலாக நின்று அவர்களின் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம். சிலருக்கு இது அர்த்தமில்லாத ஒன்றாகத் தோன்றலாம். எனக்கும் கூட  இதற்க்க...

தலை முடி

"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதை யை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை. இதுதான் நம்ம முடிக்கதை. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது. அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து ...

தங்க மீன்கள்

படம்
பல நாட்களின் பின்பு Mr Romeo படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த  இந்தப்பாடல் ஐ தற்ச்செயலாய் கேட்க நேர்ந்தபோது தோன்றியது, "தங்க மீன்கள் தண்ணீரைக் காதலிக்குமா?" மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒரு சிறிய / அர்த்தமில்லாத கேள்விதான். ஆனால் இதுவே " நான்யார்? " என்ற தேடல் போலவே.. தங்க மீன்கள் என்றால் என்ன? அவை தங்கத்தாலான மீன்களா / தங்கமான குணமுள்ள மீன்களா? என்று நீண்டுகொண்டு போகக்கூடியது போலத் தோன்றியது.  முதலாவது வகை என்றால் விடை ஓரளவு எளிது. அதுவே ரெண்டாவது என்றால்.. உடனே தோன்றுவது மீன்கள் என்றால் அவை எத்தனை..? அவற்றுக்கிடையேயான உறவு என்ன? என்பதுதான். இப்படியான இன்னோரன்ன கேள்விகள் எழும் போதே ஆரம்ப கேள்வியை / அந்த மீனுக்கு  அடிப்படையானது ஆதாரமானது தண்ணீர் தான் என்பதையே மறந்து விடுகிறோம் இல்லையா? அதாவது இன்னோர் மீனைத் தேடும் / தங்கியிருக்கும் / கவரும் முயற்ச்சியில் தான் உயிர் வாழ்வதே தண்ணீரால் தான் என்பதை அதுவும் வெகு இலகுவிலே மறந்துவிடுகிறது. சரி சரி.. இந்த தத்துவ ஆரா...

Behind the "BLIND LOVE" (குருட்டுக் காதலின் பின்னால் )

படம்
நேற்று முழுவதும் ஏனோ தூக்கம் வரவில்லை. ஹிமாலயா கிரியேசன்ஸ் இனது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்கள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையிலும் எதுவோ ஒன்று மனதுக்குள்ளிருந்து குடைந்து கொண்டிருந்தது. வெற்றியடைந்ததர்க்கான காரணங்களைவிட தோல்வியடந்ததர்க்கான காரணங்களை அறிந்து வைத்திருப்பது மீண்டும் அந்தப் பிழையை விடாமல் அவதானமாயிருக்க உதவிசெய்யும் அல்லவா? அந்த வகையில் ஹிமாலயாவின் முதலாவது சொந்தப் படைப்பான "Blind Love" அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டினைப் பெற்றிருந்தும் ஏனோ நாம் நினைத்தளவுக்கு பெரும்பாலோனோரை இன்னும் சென்றடையவில்லை. அதற்க்கு முக்கியமாய் நமது Marketing அணுகுமுறை சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்காக SunTV போல மூச்சுக்கு முந்நூறு தடவை விளம்பரம் போட முடியாது. குறைந்தது FB/YouTubeலயாவது pay பண்ணி promote பண்ணலாம். ஆனால் அவை எல்லாவற்றிட்க்கும் மேல் உண்மையான திறமைக்கு (இருந்தால்) கிடைக்கும் அங்கீகாரத்தினை முதலில் அறிந்துகொள்ள விரும்பினோம். அந்தவகையில் மைந்தன் சிவா, கவிஞர் அஸ்மின் போன்றவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவை.  இன்னுமோர் ரசிகர் இவ்வாறு எழுதியிருந்தார்....

அடர்காட்டில் தானே

படம்
இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னர் வந்து சக்கை போடு போட்ட பாடல் கொலைவெறி பாடல். அதற்க்கு யாழிலிருந்து நம்ம பசங்க எதிர்ப்பாட்டு அடிச்சு விட அதுவும் Youtubeல பிச்சிக்கிட்டு போக அப்போ அதுக்கு சில மேதாவிப் பெரியவங்க சொன்னாங்க உங்களுக்கு திறமையிருந்தா நீங்களே சொந்தமா  Compose பண்ணி ஒரு பாட்டு வெளியிடுறது தானே எதுக்காண்டி அதே tuneஐ  copy பண்ணி பதில் பாட்டு கொடுக்கணும்னு.. அதுக்கு நான் சொன்னேன் இதே செந்தமிழ் வரிகளை நாம என்னதான் கடுமையாக உழைச்சு why this kolaiveri original songஐ விடவுமே நன்றாக இசையமைத்து வெளியிட்டாலுமே ஏனெண்டு ஒரு நாதியும் கேட்டிருக்காதெண்டு. காரணம் popularity.. அது தனுஷ்க்கு இருந்தது. ட்வீட் பண்ணிய அமிதாப்புக்கு இருந்தது. அதேபோல் தமிழ் மேல் பற்றுக்கொண்டோருக்கும் அதனை வாழ(?) வைப்போருக்கும் இருந்தது.  இன்று Himalaya Creations இனது தயாரிப்பில் எமது மண்ணிலிருந்து, அவர்கள் கேட்டது போல் எமது சொந்த Composing  இல் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எமது இளைஞர்களின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்...

பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன்

படம்
ஒரு பாடல் நாற்பத்தைந்து வருட காலமாக ஒரு மனிதரை புகழின் உச்சியில் வைத்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் கூட இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அவர் வேறு யாருமல்ல.. சுராங்கனி புகழ் பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன் அவர்களே... கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹிமாலயா கிரியேசன்ஸ் இனால் பொறுப்பேற்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வந்த திருமறைக் கலாமன்றத்தின் ஒளி, ஒலிக் கலைக்கூடத்தினை திறந்து வைப்பதற்காக இவரை அணுகியபோது சற்றும் தாமதிக்காமல் உடனேயே தனது சம்மதத்தினைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது லிப்ட் இல்லாத அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு தனது இயலாமையைக்கூட பொருட்படுத்தாது தனியனாக ஏறி வந்து தனது குரலில் ஓர் பாடலையும் பாடி திறந்து வைத்தார். நேற்று மாலை AE மனோகரன் அவர்கள், வீரகேசரி துணை எடிட்டர் அஷ்வின், ST.JOHNS கல்லூரியின் அதிபர் REV பாதர் NJ ஞான பொன்ராஜா, கார்கில்ஸ் மாவட்ட பொறுப்பதிகாரி, பழைய மாணவர் சங்கத் தலைவர் மற்றும் சில முக்கிய நபர்களுடன் கலந்துரையாடும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று காலையில் தான் தனது வழமையான,...