Elevator என்கிற "லிப்ட்"

by - 10/28/2011 02:25:00 பிற்பகல்

Luxury Passenger Elevator

 இந்த "Escalator" இருக்கே.. பொறுங்க.. பொறுங்க.. Elevatorக்கும் Escalatorக்கும் ஒரு சின்ன குழப்பம். அதனால இனி லிப்ட் எண்டே சொல்லிடறேன். சரியா..?

தினம் பஸ் பிடிக்கிறமோ இல்லாட்டி டாக்ஸி பிடிக்கிறமோ குறைந்தது ஒரு தடவையாச்சும் இதைப்  பிடிச்சே ஆகணும். நிமிசத்துக்கு ரெண்டு தரம் வந்து போற லிப்டுக்கு என்னமோ அஞ்சு நிமிசத்துக்கொருக்கா வாற MRT ஐ பிடிக்கிற மாதிரி ஓடுவாங்க. இருக்கிறதே கொஞ்ச இடம். அதில வேற சுத்திவர கண்ணாடி.  வீட்ல கண்ணாடியே பாக்காதவங்க மாதிரி, அப்பத்தான் முன்ன பின்ன திரும்பிப் பாக்கிறது. யாராச்சும் HDBட சொல்லி உந்தக் கண்ணாடிய கழட்டிப் போட்டு இப்படி ஏதாச்சும் Artwork போடச்சொல்லுங்கோவன். பாக்கிறமாதிரியாச்சும் இருக்கும். டக்கெண்டு பாத்திங்கன்னா  Reflectionல் ஒரு "stretching room" effectம் இருக்கும். என்ன ரசனையப்பா!

சரி, ஒரு பத்திருபது படி தானே அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி போய்டலாம் எண்டு பாத்தா, மாங்கு மாங்குன்னு ஜிம்ல ஒருமணி நேரம் Treadmill பண்ணுறவங்க கூட படில ஏறாம லிப்ட்க்கு வரிசைல நிப்பானுங்க. நாம மேல ஏறி முடிக்கவும் லிப்ட் திறக்கவும் சரியா இருக்கும்.  உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என்பது போல நம்மளை ஒருமாதிரியாப் பாப்பானுங்க. 

ச்சே.. யார்ரா இவன் இந்த லிப்ட்ட காண்டுபிடிச்சதுன்னு கடுப்பாகி கூகிள் பண்ணினா, விக்கில ஒரு பெரிய பாரதம் வருது. டென்ஷன்ஆகி  howstuffworks இல பாத்தா, Cable சிஸ்டம் கொஞ்சம் நல்லா விளக்கமாத்தான்  இருக்கு. ஆனா புதுசா சொல்லிக்கிற மாதிரி எதையும் காணேல்ல. நாங்க படிக்கிறப்போ இதெல்லாம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே என்று தோன்றியது. ஆனா இதே பல்லவியைத்தான் நான் படிக்கிறப்ப என்ரை அப்பா பாடினவர். அதனால விட்டிடுவம்.

கடைசில ஒருவழியா youtube தான் கைகொடுத்துச்சு..  இப்படித்தான் ஒருதடவை எங்கட flatsல ரொம்ப நேரமா லிப்ட்ட காணோமேன்னு பாத்தா, "lift under maintenance" எண்டு வருது. இது சரிப்பட்டு வராதுன்னு படில இறங்கிப் போனா ஒரு ஆன்டி லிப்டையே சோகமாப் பாத்திண்டு நிக்கிறா. அவக்கிட்ட இது வேலை செய்யாதுன்னு சொல்லப் போனா, அடக்கடவுளே லிப்ட்க்குள்ள ஒரு அங்கிள் தனிய மாட்டிண்டார். ஆன்டி வெளிய, அங்கிள் உள்ள. என்ன கொடுமை சார் இது. பிறகு fire service வந்து மீட்டெடுத்தாங்க.

ஆனா என்னதான் இருந்தாலும் இப்பத்தை பசங்களுக்கு காதல் எண்டு வரும் போது தனிய காதலியுடன் இப்படி லிப்ட்ல  மாட்டிட்டா சொல்லவா வேணும்? பிரிச்சு மேஞ்சிருவான்கள்ல..

தமிழ் எண்டதாலோ என்னவோ நம்ம இளைய தளபதி சீன் தான் எனக்கு பிடிச்சுது..
"அந்தப் பரதேசிமட்டும் கைல கிடைச்சான்.."
...................

சுய விமர்சனம்: மசாலா மசாலான்னு.. கொஞ்சம் ஓவரா போட்டுதோ..? உருப்படியா எதுவும் இருக்கிறாப்போல தெரியலையே?

"சாச்சா..  நா ஒன்னும் ஓவரா மேக்கப் போடல.. ஜஸ்ட் face வாஷ் பண்ணி, கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருக்கு.. அவ்ளோ தான்.."

You May Also Like

0 comments