முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

பாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று

அதிகாலை  நாலு  மணிக்கே  அலாரம்  வைத்திருந்தாள். இப்படி அலாரம் வைத்து எழுந்து அவளுக்குப் பழக்கமில்லைத்தான். இருந்தாலுமே இங்கை இருக்கிற ஒரு நிமிடம் கூட வீணடிக்கக்கூடாது என்பதில் கவனாமாயிருந்தாள். ஹாட் வாட்டர் போட்டு குளித்துவிட்டு உடை மாற்றி பவுடர்பூசி பொட்டுவைக்க முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது, தன் அழகைப் பற்றி அவளுக்கே கொஞ்சம் கர்வம் வந்தது.
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்

இப்படி அவனுக்குப் பிடித்த கலரில் உடையணிந்து அவனுக்குப் பிடித்த ஒரு பெண் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று முன்னால் போய் நின்றால் எப்படி  ரியாக்ட் பண்ணுவான்? நினைக்கவே மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பூ கொளுத்தியது போல இருந்தது.
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ

கடிகாரத்தைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகியிருந்தது. வார்டன் எட்டு மணிக்குத்தான் வருவார் என்று நேற்று செக்யூரிட்டி சொன்னது. அதுவரை காத்திருக்க முடியாது. அதற்குள் போய்ச்சென்று பார்த்துவிட்டு வந்திடலாமா?

சும்மா இருந்து யோசித்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. பர்சை எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். செக்யூரிட்டி அரைத் தூக்கத்திளிருன்தது. எழுப்பிச் சொல்லிவிட்டுப் போகலமென்று நினைத்தால் ஒருவேளை விடாவிட்டால் என்ன செய்வது? போய் வந்து சொல்லிக்கொள்ளலாம்.

அவசர அவசரமாக படிகளில் இறங்கி வெளியே வந்து பாத்தாள். டாக்ஸி எதையும் காணவில்லை. டாக்ஸியை அழைப்பதற்கு பொத்தானை அழுத்துமாறு சொல்லியிருந்தது. அழுத்திவிட்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும். டாக்ஸி வந்தது. ஏறி "NUH" அவன் கேட்க்கு முன்னமே மூச்சிரைக்க சொன்னவளைத் திரும்பி வினோதமாய்ப் பார்த்தான்.
"are you ok?" என்று அவன் பின்கண்ணாடியப் பார்த்தபடி கேட்டபோது தான் புரிந்தது தான் எவ்வளவு பதட்டமாயிருக்கிறாள் என்று.
"I'm fine. I'm visiting to a patient there"
"At this time?" ஆச்சரியத்தில் அவன் புருவங்கள் உயர்ந்தன.
சே.. என்ன இவங்கள் போ எண்டால் போறதை விட்டிடு சும்மா தொணதொண எண்டு கொண்டு..
"yes" என்று முகத்திலடித்தது போல் சொல்லிவிட்டு வேறு எதையுமே கேட்காதே என்பதுபோல் திரும்பி வெளியே பார்த்தாள்.
சாலையில் மரங்கள் எல்லாமே மெதுவாகவே நகர்வது போல் ஒரு பிரமை.
"can you go little faster?"
"I'm driving max speed already. can't go beyond this speed in singapore." அவனும் முகத்திலடித்தது போல் சொல்லிவிட்டு ரோட்டைப் பார்த்து ஓட்டினான், வெகு கவனமாக.

நேற்றுத்தான் ஆகா ஓகோ என்று புகழ்ந்தவள், இன்று என்னமோ தங்கக் கூட்டில் அடைத்துவைத்த கிளி போல உணர்ந்தாள். அவள் வீட்டிலும் இப்படித்தான்.. உண்டை நல்லதுக்குத் தானே சொல்லுறம் எண்டு தங்கடை விருப்பங்களைச் சொல்லிச்சொல்லியே இதுவரை அவளை தானாகச் சிந்திக்கவே விடவில்லை. சின்னநிலிருந்தே அவளது அப்பா எல்லா நாடுகளின் போராட்ட வரலாறுகளையும் சொல்லிச் சொல்லியே தான்  வளர்த்திருந்தார். ஆனால் அவளாக ஒரு முடிவு எடுத்தபோது அது தவறு என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கும்மியடிச்சவை. அவளாக யோசித்து முடிவு செய்வதுக்கு இன்னும் வயது வரவில்லையாமே. ஒருவேளை அவள் சொல்லாமலே போயிருக்க வேணுமோ?

இப்பகூட வெளிக்கிடும்போது "போராட்டம் என்றது சும்மாபோய் எதிரிக்கு முன்னால துவக்கை மட்டும் தூக்கிட்டு நிக்கிறதில்லை. எல்லாவிதத்திலும் வியூகம் வகுக்கவேனும். அதுக்கு நிறைய அறிவாளிகளும்  தேவை.  இப்படி புத்திசாலிகள் எல்லாரையுமே சாகக் குடுத்திட்டு புதிய தேசத்தை எப்படி கட்டிஎழுப்பப் போறம்? அதால உந்த விசர்க்கதையள் எல்லாத்தையும் விட்டிடு போய் ஒழுங்காப்படி" என்றுதான் ஞான உபதேசம் பண்ணி அனுப்பிரிருந்தார்.  எல்லாம் சரிதான் ஆனால் அறிவாளிகள் எண்டிட்டு ஏன் அவளைப் பிடித்து சொல்கிறார். ஒருவேளை பாரதியை மறைமுகமா சொல்லியிருப்பாரோ?

அவளுக்கு எல்லாமே பாரதிதான். பன்னிரண்டு வயசிலை "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்று அவள் காதோரம் ஒலித்துச்சென்ற பாரதியின் வரிகளைக் கேட்டதிலிருந்து எப்போதுமே அவளுக்குள் ஒருபாரதி ஏதாவது ஒரு கவிதை சொல்லிக்கொண்டுதானிருப்பான். இத்தனைக்கும் அவளிடம் பாரதியின் கவிதைத்தொகுப்பே இருக்கவில்லை. வாங்கவேண்டும் என்று பலதடவை எழுந்த ஆசையையும் மீறி அது கொடுக்கப்போகும் வலிதான் அவளுக்குப் பயமாகவிருந்தது. அதனாலேயே பேசாமல் விட்டுவிட்டாள். அதனாலென்ன? அவளது துக்கம், சந்தோசம் எல்லாத்திலயுமே அவன் கூடவேயிருக்கிறானே.. அவனது வரிகளும் தான்.

ஹோச்பிடல் வந்துவிட்டிருந்தது. காசை சரியாக எண்ணி வைத்தாள். தேங்க்ஸ் சொல்லி ரெசிப்ட் வேணுமா எண்டு கேட்டவனுக்கு தேவையில்லை என்றுவிட்டு கீழே இறங்கினாள். சுற்றிப் பார்த்தால் எல்லாக் கட்டிடங்களுமே ஒரேமாதிரி இருக்கவும் தலை சுற்றியது. இதில் எது கான்செர் வார்டு? நல்லகாலம் கீழே படம் போட்டு விரிவாக ஹோச்பிடல் மப் போட்டிருந்தார்கள். துண்டை எடுத்து அவனது ரூம் நம்பர் சரிபார்த்துக்கொண்டாள்.

ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றவளை receptionஇல் இருந்தவர் மறித்து "can I help you?"
'சே என்ன இவங்கள் எங்கை போனாலுமே கண்கொத்திப் பாம்புமாதிரி நிண்டு கொண்டு..'
"yeah.. I want to go K9"
"It's on your right. but visiting hours are from eight to six. so you  need to wait two more hours."
"no mam. I need to see him very urgently. my school starts at 9. so I must leave early. ."
............
............
............
சிலநிமிட வாதப் பிரதிவாதங்களின் பின், அவள் பதட்டத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
"ok i let you go today. but don't disturb patient like this again. alright?"
"thank you. thank you soo much"
"your good name?"
"KANNAMMA"

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா





***** 

கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம்ம் .. நான் முதல் பாகத்தில் சொன்ன கமெண்டை இங்கே நீங்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .. நான் ஒரு அவசரகுடுக்கை!
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//நான் ஒரு அவசரகுடுக்கை!//
ஹஹா.. கண்ணம்மா மாதிரியோ..? :)

பிரபலமான இடுகைகள்