பாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்
பாரதி கண்ணம்மா... அடுத்த தொடர் ரெடி.
இது மூன்று நாட்களில் நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை நோக்கியது. முக்கிய பகுதிகள் பல இருவருக்கிடையேயான உரையாடல் பாணியில் அமைந்திருக்கும். இருவரது தேடல்களும் வித்தியாசமானவை. பாதைகள் வேறானவை. ஒருவேளை அவைகள் ஏதோவொரு புள்ளியில் ஒன்று சேர்ந்திருந்தால்.. ஒரு கற்பனை நிகழ்வு.
இதில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, அதில் பாதிக்கப் பட்டவர்களளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளல், அவர்களின் கடைசிநேர ஆசைகள் என்று பலவற்றை எனக்குத் தெரிந்தவரை கூறியிருக்கிறேன். தவறிருந்தால் தயங்காது எடுத்துச் சொல்லுங்கள்.
இதில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, அதில் பாதிக்கப் பட்டவர்களளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளல், அவர்களின் கடைசிநேர ஆசைகள் என்று பலவற்றை எனக்குத் தெரிந்தவரை கூறியிருக்கிறேன். தவறிருந்தால் தயங்காது எடுத்துச் சொல்லுங்கள்.
இதில் பெயர்களை முன்னமே வைத்துவிடுகிறேன். அவன் பெயர் பாரதி. அவள் பெயர் தெரியாது. ஆனால் அவன் அழைப்பது வேறென்ன 'கண்ணம்மா'வேதான். இந்தக் கதைக்கு அத்திவாரமிட்ட ஒருசில சம்பவங்களை விட மற்ற எல்லாமே கற்பனையானவை. எனவே குறைகள் நிறைய இருக்கலாம். தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
ஆ.. பிறகு, பாரதி எண்டு சொல்லிட்டன், பாரதியின் கவிதைகள் இல்லாமலா..? கூடவே கண்ணம்மாவின் கிறுக்கல்களும் இருக்கும் பொறுத்துக்கொள்ளவும்.. :)
ஏதோ ஒருவேகத்திலை எழுதத் தொடங்கிட்டன். பார்க்கலாம். காலம் அவர்களை வெல்லுதா அல்லது காலத்தை அவர்கள் வெல்கிறார்களா என்று..
சரி buildup நிறையக் குடுத்தாச்சு. எழுத நான் ரெடி.. வாசிக்க நீங்க ரெடியா..? அப்புறம் கமெண்ட் பண்ணுவது இன்றிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது.. பிறகுவந்து புரியலை.. அதால கமெண்ட் பண்ணலை எண்டு யாராவது சொன்னீங்கன்ன என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது.
என்றும் அன்புடன்,
கௌரி அனந்தன்
கருத்துகள்