பதினாறு வயதினிலே

by - 3/29/2012 03:50:00 பிற்பகல்

தலைப்பை பாத்தவுடனே பதினாறுவயசு ஸ்ரிதேவிதானே உங்க கண்முன்னாடி வெள்ளைப்  பாவாடை தாவணில "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" எண்டு பாடிக்கொண்டு ஓடிவருவா இல்லையா? ஆனா நாம கொஞ்சம் புதுசா யோசிச்சு திரிஷாவ கொண்டுவந்து போட்டிருக்கிறம். அது எப்படின்னு பாக்கிறத்துக்கு முதல்லை... நாமெல்லாம் பதினாறு வயதிலை என்னத்தை கிழிச்சிட்டிருந்தம் எண்டு கொஞ்சம் rewind பண்ணிப் பாப்பமா..?

இற்றைக்கு சுமார் பதினைந்து வருடங்களின் முன்பு ஒரு நாள்.. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்பெல்லாம் வாரம் ஒருமுறை உடல் பயிற்சி பாடம் இருக்கும். பக்கத்திலை இருக்கிற சர்ச் முன்றலில் (இப்போ Laughs இருக்கிற இடம் என்று நினைக்கிறேன்) தான் செய்வோம். அப்போதான் தாவணிக் கனவுகள் மாதிரி நம்ம "sweet sixteen" பற்றி பேச்சு வந்தது. நாம அப்பெல்லாம் பெரிதாய் கதைக்க மாட்டோம் (இப்பவும் தான். நம்புங்க ப்ளீஸ்..) ஆனாலும் அன்னிக்குத்தான் புதிதாய் இந்த சொற்பதத்தைக் கேள்விப்பட்டதால் கொஞ்சம் ஊன்றி அவர்களின் உரையாடல்களை கவனிக்கத் தொடங்கினேன்.

ஒவ்வொருவரும் இளமை, கனவுகள், பசங்க அப்பிடி இப்படி எண்டு அந்த வயசுக்கே உரிய மாதிரி கதைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று பேச்சு காதல் பற்றி வந்தது. அப்பெல்லாம் நமக்கு காதல் எண்ட சொல்லைக் கேட்டாலே கை கால் எல்லாம் பதறும். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்ற ரீதியில் தான்  எனக்கு "MR.LOVE" அறிமுகமாகியிருந்தார். அதனால் டீச்சர் கேட்டால் எங்கை அடிவிழுமோ என்ற ஒருவித பயத்துடனேயே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்களோ மிகவும் சகஜமாகவே யாரார் எவரைக் காதலிக்கினம் என்னேனவேல்லாம் பரிமாரியிருக்கினம் என்பது போன்ற தகவல்களை வெகு தாராளமாகவே பரிமாரிக்கொண்டிருந்தனர். எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம், மறுபக்கம் நாமும் காதலித்துப் பார்க்கலாமோ என்ற ஒரு ஆசையும் வந்துவிட்டிருந்தது. ஆனா எங்கை போய் யாரைப் பிடிப்பது? கொஞ்சம் அழகாக இருந்தாலே நல்லாப் பழகிட்டு பிறகு ஏமாத்திட்டுப் போய்டுவாங்க என்று வேறை கேள்விப் பட்டதால எதுக்கு வம்பு என்று அப்போது கொஞ்சம் ஒத்திப் போட்டு விட்டேன். என்னிக்காவது ஒரு நாள் அந்தக் கலியுகக் கண்ணன் தன் ராதையைத் தேடி வரமாட்டானா என்ன?

சரி சரி.. இப்ப நம்ம விசயத்துக்கு வருவம். காதலுக்கு வயசில்லை எண்டு சொல்லுவினம். ஆனா  பருவ வயதில் வரும் காதல் "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பதுபோல் பெரும்பாலும் கண்களிலேயே தொடங்கி இருக்கும். நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக வெறுமனே பார்வைகளை  மட்டுமே பரிமாறிக் கொண்டிருப்பார்கள். யாரேனும் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற சுரணை கூட இருக்காது. தங்கள் காதல் மட்டும் தான் உலகத்திலையே ஏதோ மகா புனிதமான விஷயம் என்ற நினைப்பு இருக்கும். அப்பிடிப்பட்ட ஒரு இனிமையான வயதில் அப்பிடிப்பட்ட புனிதமான ஒரு காதலை நம்ம ஹீரோ இங்கை பண்ணியிருக்கிறாராம். அதாலை அவரு நம்ம heroineக்கு தனது காதல் பரிசா ஒரு இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டார். ஆனா பிறகு என்ன நினைத்தாரோ தூக்கி ஒரு மூலையில போட்டிட்டார். இத்தினி வருசத்திலை அதை தூசிதட்டி எடுத்து youtubeல போடுறத்துக்கு சிங்கப்பூர்ல இருந்து ஒருத்தி வர வேண்டியதாப் போச்சுது.

நமக்குத்தான் இசையப் பத்தி ஒண்டும் தெரியாதே.. ஆனா அதிலை இருக்கிற பீலிங்க்ஸ் மட்டும் புரியும். நாம என்ன பாஹவதரா இசையையும் மெட்டையும் பத்தி அலசி ஆராயிறத்துக்கு? வெறும் ரசிகை மட்டும் தானே.. அதால எடுத்துப் போட்டுப் பாத்தன். யாரார் என்னென்ன சொன்னவையோ இல்லை சொல்லினமோ எனக்கு பிடிச்சிருந்துது. அதிலும் "காதல் சொல்ல ஓடிவந்தேன்" என்ற பாடலைக் கேட்டபோது ஏனோ விண்ணைத் தாண்டி வருவாயாவிலிருந்து "மன்னிப்பாயா" என்ற பாடலின் காட்சியமைப்பு தான் கண் முன்னே வந்து நின்றது. அதால சும்மா ஒரு சின்ன கலக்கு கலக்கிட்டம். யாரும் சிம்புவுக்கு சொல்லிடாதேங்கப்பா. கொலைவெறி போட்டு தனுஷ்க்கு டென்ஷன் குடுத்த மாதிரி அந்தாளுக்கு வேறை BP ஏறிடப் போகுது...

"உன்னை சுமக்க எந்தன் நெஞ்சில், பதினாறு வருடமாய்த் தவமிருந்தேன்""நீயும் காதல் சொன்ன பின்பு மௌனம் தான் கொல்வதேனோ"

என்னதான் இருந்தாலும் காதலிக்கோ/காதலுக்கோ பாட்டெழுதி மெட்டுப்போட்டு ஒரு ஆல்பம் செய்து ஸ்கூல் teachersஐ வைத்தே வெளியிடும் அளவுக்கு பதினாறு வயதிலை யாருக்காச்சும் தில் இருந்திருக்குமா என்ன? சத்தியமா எனக்கிருக்கலைப்பா..


You May Also Like

6 comments