முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

காடு பாலைவனமாகிறது

படித்ததும் (பிடித்ததும் ?!) அறிவுக்கெட்டியதும்.. 
முதல்ல இதைப் படிங்க..
காடு பாலைவனமாகிறது திறந்து கிடக்கிறது By JK.

முதன் முதலாக ஒரு விஷப் பரீட்சை.. அட நீ எழுதத் தொடங்கினதே அதுதானே என்பவர்கள் மட்டும் தைரியமாக மேலே வாசிக்கலாம்.. மற்றவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல..
“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”
சாதாரணமாகப் பார்த்தால் ஒரு மேலோட்டமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி. எங்கே தொடங்கியது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னும் எங்கே போய் முடியும் என்றெல்லாம் அறியமுடியாத கேள்வி இது. மேலும் மேலும் சிந்திதுகொண்டு போனால் 'சே நாம இத்தின்னாள் வரை பண்ணின்டிருன்தது காதலேயில்லை' என்றும் கூடத் தோன்றும். பின்பு காதல் பொய் என்று பேசவைக்கும். பின்பு திரும்ப 'அது காதலாய் இருக்ககூடாதா' என்று திடீரென அடிமனசில் ஓர் ஆசை கிளம்பும். சூடுகண்ட பூனை சற்றே யோசிக்கும். அடுப்பங்கரை கதகதப்பு சுகமாய் மீண்டும் ஓர் ஆனந்த சயனம், பின்பு திரும்பியும் சூடு வாங்கி.. வாங்கி.. சக்கரம் திரும்பவும் சுற்றுகையில்.. உணர்வுகள் படிப்படியாக அடங்கி இப்போ புத்தியின் கையில் செங்கோலேறும். புத்தி எதையுமே நம்பாது. 
“காடா? … காட்டுக்கெதுக்கு நாட்டிலிருந்து நட்பு?… காட்டில் கிடைக்காததா? இந்த தேனியிடம் பேசினாயா? பூக்கள் பூக்களாய் திரிகிறது பார் .. தறி கெட்ட கழுதை .. அந்த தேனியிடம் பேசு .. கருகிய மரங்களை விட்டுவிட்டு வசந்தகால குருத்துகள் மத்தியில் கூடு கட்டி கொண்டாடுகிறதே குருவிகள். அதனுடன் பேசு. நீ எரியும்போது நாட்டுக்குள் ஓடிவிட்டு துளிர்த்த பின் அடைக்கலம் தேடிய மிருகங்களிடம் பேசு. இதை தானே துணை என்று நினைத்து தனித்து கிடக்கிறாய். தற்குறி. பேசு .. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு என்ன வீண் பேச்சு? நான் யார் உனக்கு? நான் யார் எனக்கென்றே தெரியாதவன் நான். என்னை ஏன் வீணாக வம்புக்கிழுக்கிறாய்?”
என்று ஆயிரம் கேள்வி கேட்கும். என்னதான் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தடுமாற்றம் இருந்துகொண்டுதானிருக்கும். 
'கோபமாய் கேட்டாலும் குரலில் ஒரு ஏக்கத்தை காட்டிவிட்டேனோ? தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும்? போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம்? ச்சே விவஸ்தை கெட்டவன் நான்.'
ஆனால் காதல்/காடு எதிரே விடாப்பிடியாய் நிற்கும்..
“நாட்டிலிருந்து நீ என்னைத்தேடி வந்தாயே? நான் கேட்டேனா? இது நியதி. அதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய்? இங்கே நானும் நீயும் தான். இருவருமே தனித்திருக்கும் பனித்திருக்கும் பரம ஏழைகள். காடாய் இருந்து ஒருமுறை பார். எல்லாமே சுத்தி சத்தம்போடும்போது கிறீச்சிட்டுகொண்டு ஒரு மௌனம் கிழிக்கும். அது என்னை கொல்கிறது. நல்ல காலம் நீ வந்துவிட்டாய்." 
இப்போ காட்டின்மேல் ஒரு கழிவிரக்கம் வரும். அட நம்மள மாதிரித்தான் இதுவும் போல கிடக்கே, சரி போறவழிக்கு பேச்சுத் துணையாகட்டும் என்று மீண்டும் அடுப்பங்கரை கதகதப்பு சுகமாக..  ஆக.. நம்மையறியாமலே காதல் இப்போது சற்றே உரிமைஎடுத்துக்கொள்ளத் தொடங்கும்..
“அப்படி என்ன அவசரம்? எங்கே போகிறாய்?”
“நீர் வீழ்ச்சிக்கு … “
“நீர் வீழ்ச்சியா .. அது எங்கே இருக்கிறது? யார் சொன்னார்கள்?” 
“யாரும் சொல்லவில்லை. எனக்கு நீர் வீழ்ச்சிக்கு போய் அதனோடு சேர்ந்து அழவேண்டும் போல இருக்கிறது. அதன் கண்ணீரில் நனையவேண்டும் போல … அதனோடு சேர்ந்து நானும் குதித்து தற்கொலை செய்யவேண்டும் போல … ஒவ்வொரு பாறைகளிலும் மோதி சிதறி .. ஆங்காங்கே கரையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி .. மீன் வளர்த்து, சுழியோடி.. ஆறுகளுடன் சங்கமித்து .. நீர்வீழ்ச்சியோடு வாழ்வதை விட சாவது சுகம் தெரியுமா?”
மனதிலுள்ளதை அப்படியே கொட்டிப் பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாய் காதலைப் பிடிக்கத் தொடங்கும். ரசனைகள் ஒன்றாக சிந்தனைகள் ஒன்றாக 'ஏன் கடைசிவரை அதனுடனேயே இருக்ககூடாது?' என்று தோன்றும்.
“அப்படி என்றால் நீ என்னோடு இறுதிவரை கூட வருவியா?”
"முதலில் நீ எங்கே போகிறாய்? அதைச்சொல்லு”
“நீர் வீழ்ச்சிக்கு”
“அட அது தானே வேண்டாம் என்று ஆகிவிட்டது.. திரும்பவுமா?”
பலர் இங்கே தான் சொதப்புவார்கள். காதல் முத்திப்போய் பாதையையே மாற்றிவிடும் அளவுக்கு அவர்கள் புத்தி மழுங்கடிக்கப் பட்டிருக்கும். எதைத்தேடி வந்தோம் என்றே மறந்துவிடுவார்கள்.
“ஓ … நீர் வீழ்ச்சி வேண்டாம் ..எத்தனை அழுக்கேறினாலும் ஆகட்டும் .. வீழ்ச்சியே இருக்ககூடாது"
அன்பே.. ஆருயிரே.. தேன்நிலவு (நிஜத்தில இருக்கோ இல்லையோ ஆனா FBல மட்டும் கண்டிப்பா இருக்கும்) எல்லாம் சிறிது காலம் தான். பின்னர் அதுவும் அலுத்துவிடும். பிரியவேண்டும். ஆனால் எப்படி? அதற்க்கான வழியையும் காட்டிடமே கேட்ப்பான். 
“எனக்கொரு வழி சொல்லு? சொந்த வழி எந்த வழி என்று சொல்லு? சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு?”
எங்கு வந்தோம் எதற்காய் வந்தோம் என்றே மறந்துவிட்டிருக்கும். இப்போது காடு தலைக்கு மேல் ஏறி நின்று தத்துவம் பேச ஆரம்பிக்கும்.
“உன் வீடு .. மூடனே .. அது தெரிந்தால் வழி தவறியிருப்பாயா? வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம்? வழி தெரியவேண்டாமா? வழியை அறிந்தால் அது முடியும் இடம் தானே வீடு. புரிகிறதா முட்டாளே?”
“அப்படி என்றால் அந்த வழியையாவது சொல்லேன்”  
பணிந்து போயே ஆகவேண்டிய நிலை.
“அப்படி வா வழிக்கு … கண்டுபிடி .. உன் வழியை கண்டு பிடி. வழியில் எதையும் கண்டு மயங்காமல் .. யார் பேச்சையும் கேட்காமல் உன் வழியை கண்டுபிடி. உன்னை பின்பற்றி செல்லு. ஒருநாள் இல்லை ஒருநாள். வீடு வரும். அந்த வீடு இருக்கும் நாடு வரும். எல்லாமே .. முதலில் பாதையை சமை.. வீட்டை பற்றி இப்போது கவலைப்படாதே” 
காடு எஸ்கேப்..

நம்மாளு மீண்டும் தாடிய வளர்த்திண்டு முடிஞ்சா பக்கத்தில ரெண்டு நாய்க்குட்டியையும் கூட்டிண்டு.. வாழ்வே மாயம் பாடிண்டு போகையில்.. திரும்பவும்,
“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” 
நம்மாளு எஸ்கேப் ஆவான்கிறீங்க..?



கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
"இது ஒத்த மீடிறன் என்றால் பரிவுறும் இல்லை ஒண்டும் செய்ய முடியாது." என்று Uthaya Thayasivam எழுதியிருந்தான். அது தான் நடந்திருக்கு ... வாசிக்கும்போது பலமுறை நீங்கள் தொலைந்துபோயிருப்பது, எழுதியவன் என்ற வகையில் சந்தோசம் என்றாலும், தொலையும் அனுபவம் ஒன்றும் அவ்வளவு சந்தோஷமாக இருந்திராது என்று நினைக்கும்போது பாவமாகவும் இருக்கிறது..... "உலகத்தில் எதுவும் தனிச்சை இல்லையே, குழலில் ராகம், மலரில் வாசம் சேர்ந்தது போல" என்பது போல, எழுத்தின் மூலம் ஒண்டு ரெண்டு நண்பர்களை, அதுவும் ஒத்த பரிவுள்ளவர்களை இனம்காண முடிந்தது சந்தோஷமே ...உங்கட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீங்க .. இதில நன்றி சொல்ல ஒண்டுமே இல்லை! கருவி நன்றி சொல்ல கூடாது! இப்படியான அலசல்கள் தான் நாமளும் ஏதோ கிறுக்கிறோமோ என்ற பயத்தை ஏற்படுத்தி அடுத்த பதிவை எழுதவிடாம செய்யிது .. :)
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
பரிவு பற்றி ஒருமுறை இசை சம்பந்தமான பதிவில் குறிப்பிட்டிருந்தேன். (http://www.rasikai.com/2012/01/blog-post_23.html)
ஆனால் உதயா சொல்லியதுபோல் எழுத்திற்கும் சாத்தியமே என்று இப்போதான் புரிகிறது. எனக்குத் தெரிந்து அப்படியொரு பரிவு இதுவரை ஏற்பட்டதாய் ஞாபகமில்லை. முதன் முதலாய் அர்த்தமுள்ள இந்துமதம் பன்னிரு வயதுகளில் வாசிக்கையில் கிட்டத்தட்ட அப்படியொரு நிலை தோன்றியது. பின்பு ஓஷோ. கல்கி, சாண்டில்யனைக்கூட ரசித்திருக்கிறேன். ஆனால் இவை தவிர இலக்கியம், மாபெரும்படைப்பு எனக் கூறப்படும் பெரும்பாலான எழுத்துக்கள் அயர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. ஒருவேளை அவர்களை விளங்கிக்கொள்ளும் பக்குவம் வரவில்லையோ/ அதற்க்கான பொறுமை இருக்கவில்லையோ தெரியவில்லை.

நிற்க, ஒரு ரசிகனின் (என்னைப்போல) அலசல்கள் தனக்கும் புரிந்திருக்கு என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான சந்தோசத்தில் வந்த பதிவாகக்கூட இருக்கலாம். அது எழுத்தாளனை (ஆப்பு இல்லை :) ) எந்தவிதத்திலும் பாதிக்க கூடாது என்பதே எனது தாழ்மையான கருத்து. எனவே தாங்கள் மேன்மேலும் வளர்ந்து இன்னும் பலநூறு பதிவுகள் எழுத எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இது ஆப்பு தான் ஹிஹி )

பிரபலமான இடுகைகள்