முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

யோகநாதன் அனந்தன்

இரண்டாவது பதிவு : Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

இன்று(01.06.2006) திருமண நாள். யாருக்கு? அனந்தன்.. அனந்தன்.. எண்டு (கவனியுங்க ஒருத்தர் தான்) வரியப்புலத்தைச் சேர்ந்த திரு திருமதி யோகநாதன் அவர்களின் செல்வப் புதல்வனுக்கும் ஏழாலையைச் சேர்ந்த திரு திருமதி நித்தியானந்தம் அவர்களின் ஏக புத்திரிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு (நிசமாத் தானுங்கோ, நம்பாட்டிப் போங்கோ) வைகாசித் திங்கள் சுப முகூர்த்ததில கலியாணம் நடந்தது. அவங்க சீரும் சிறப்புமா பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தாங்கன்னு Social Networks (Facebook, Youtube, etc..) சொல்லுது..

நிற்க, இப்ப எதுக்கு இந்த சுயபுராணம் எண்டு கேட்டிங்கன்னா.. சமீபத்திலை "திரு. யோகநாதன் அனந்தன் அவர்கள் சிஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கணணி வலை வல்லுநர்(இரட்டை) ஆனதை முன்னிட்டு நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா" ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வாழ்த்துரை வாசிப்பதற்கு எழுத்தாளர்(?) என்ற முறையில என்னைக் இழுத்து விட்டிடாங்க. அதில வேறை நாம எல்லாரைப் பத்தியும் எழுதுறம் ஆனா நம்ம ஆத்துக்காறரைப் பத்தி எதுவுமே சொல்றதில்லை எண்டு ஒரு முறைப்பாடு வந்தது. அதால வேறை வழியில்லாம இந்தப் பதிவு போடும் படியாய் ஆகிவிட்டது. 


இன்றைக்கு சுமார் பத்து வருடங்களின் முன்பு ஒருநாள் Campusல் முதன் முதலாய் திருவாளர் யோகநாதன் அனந்தன் அவர்களைப் பார்த்தபோதே எனக்கு பேதி போடாத குறை. எப்ப எப்படி கடித்து குதறுவாங்கன்னே தெரியாது. இப்பிடி இருக்க ஒரு பூனைக்கும் எலிக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பதையெல்லாம் இங்க சொல்லப் போனால் "அவள்" ஒரு தொடர்கதை மாதிரி ஆகிவிடும். அதால அதெயெல்லாம் விட்டிட்டு திருவாளர் அனந்தன் எப்படி சிஸ்கோவின் இரட்டை கணணி வலை வல்லுநர் (Double CCIE) ஆனார் என்பதை மட்டும் இங்கே சொல்லுவதாய் இருக்கிறோம்.

அது 2004 ஜனவரி என்று நினைக்கிறேன், இருவரும் CCNAக்கு (CCIE இனது முதல்படி)  படித்துக்கொண்டிருந்தோம். நமக்கு தியரி எண்டா ஆகவே ஆகாது. ஆனா MCQ இன்னா அப்பிடியே படம் பிடித்தது போல எடுத்திண்டு போயி கீறீட்டு வருவம். Visual மெமரி எண்டு ஏதோ சொல்லுவாங்களே அதான். அதால dumpsஐ மட்டுமே நம்பி படிச்சிட்டுப் போய் ஏதோ கீறிப் பாசாயிட்டம். ஆனா இவரு சிஸ்கோ சைட்ல பரிந்துரைக்கப் பட்டிருந்த அத்தனை புத்தகத்தையுமே தேடித் தேடித் படிச்சு... fail ஆயினப்போ விதி routerக்கு மேல ஏறி நின்னு கெக்கட்டம் விட்டுச் சிரிச்சுது. (சத்தியமா நானில்லைங்கோ). நம்ம சாரு விக்கிரமாதித்த மன்னனில்ல? வேதாளத்தைப் பிடிச்சே ஆகணும்னு முழு மூச்சா நின்னு மூணாவது தடவை ஒருமாதிரிப் பாசாயிட்டார். இது இதுவரை எனக்கும் பிரசாந்துக்குமே மட்டும் தெரிந்த இரகசியம் எண்டு நினைக்கிறன். இவற்றையெல்லாம் இங்கே சொல்லுவது யாரையும் சங்கடப் படுத்தும் நோக்கிலல்ல.. மாறாக தனது லட்சியத்தில் ஒருவர் எவ்வாறு திடமாக இருந்தார் என்று காட்டுவதற்கு மட்டுமே.

முதலாவது படி தாண்டியதுமே நமக்கு மேனேஜர் போஸ்ட் வந்திட்டுதா.. சிவனே எண்டு செட்டில் ஆயிட்டம். ஆனா இவரு மூச்சைப் பிடிச்சிண்டு படிச்சாரு. சிங்கபோரே போனபோது CCNP யில் (ரெண்டாவது படி) ஒரு பாடம் எழுதி முடிச்சிருந்தார். இருந்தும் தோதான வேலை வாய்க்கவில்லை. சிஸ்கோவோட partnership வைத்திருப்பதக்காக வேண்டி CCNP/CCIE முடித்தவங்களையே பெரும்பாலும் அங்கு எதிர்பார்த்தனர். 

கிட்டத்தட்ட ஒருவருட கடும் போராட்டத்தின் பின் ஒருநாள் கடவுள் (அனந்தன்ட) கேட்டார் "உமக்கு knowladge நல்லா இருக்குது. ஆனா எங்களுக்கு certification வேணும். CCNP முடிக்க உமக்கு இன்னும் எத்தினை நாள் ஆகும்?". "நீங்க வேலை தந்தீங்கன்ன ஒரு ஏழெட்டு மாசத்திலை முடிச்சிடுவன்" எண்டார். கடவுள் சிரிச்சார். 'தம்பி, நீர் சொல்றது நீங்க வேலைக்கு சேர்ந்து நான் ஆபீஸ்ல வேலை தராம இருந்தாத்தான் நடக்கும்' எண்டு நினைச்சிருப்பார் போல.

ஆனா பயபுள்ள எவ்ளோ வேலைகள் கஷ்டங்கள் மத்தியிலும் தான் குடுத்த வாக்கை காப்பாத்திட்டுது. அப்புறமென்ன கடவுளுக்குப் பிடிச்ச குழந்தை ஆயிட்டார். ஆனாலும் அடிக்கடி நிறையவே சோதனைகளும் வைத்தார். நம்மலோடையே இத்தினை வருசமா காலம் தள்ளேக்கை இதெல்லாம் பெரிய சோதனையா என்ன?

அடுத்து உலகத்திலை முதல் முப்பதுனாயிரம் பேர்களிலை ஒருத்தர் ஆயிடனும் எண்டு மாதக் கணக்கிலை சோறு தண்ணி வாயில படாம (pancake உம் கூல் drinks உம் மட்டும் சாப்பிடுவாரு) கண்ணிலை பட்ட புத்தகமெல்லாம் photocopy, printout எடுத்துவைச்சுப் படிச்சுப் படிச்சு கடைசிலை கிழிஞ்சே போய்ட்டுது. (படிச்சது மட்டும்தான் அனந்தன் பிறகு கிழிச்சது ஜனனி) இந்தமுறை கடின உழைப்பு நிறையவே இருந்தாலும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் கைகொடுக்க முதலாவது தரத்திலையே பாஸ் பண்ணிட்டார். 





அத்துடன் விட்டிருக்கலாம்.. ஆனா விதி யாரை விட்டது? அப்பத்தான் இரட்டை CCIE ஆகவேண்டும் என்ற பே...ராசை வந்தது. சரி வந்தது தான் வந்தது நல்லா படிக்க வேணுமா இல்லையா? over confidence கண்ணை மறக்க ஜப்பான், ஆஸ்திரேலியா எண்டு டூர் போய்ட்டு வந்தது தான் மிச்சம். திரும்ப வாழ்க்கை ஒரு வட்டம் கண்ணா.. எண்டு சொல்லிட்டு விதி மீண்டும் சிரிச்சுது (இந்த முறை labக்கு உள்ளயே வந்திட்டுதாம்) ஒருவாறு மூன்றாவது தடவையாக மனத்தைக் கட்டுப்படுத்தி படிச்சு இரட்டை CCIEஉம் ஆகியாச்சு. சிஸ்கோ certificationஇல் உலகின் முதல் முப்பதினாயிரம் பேரிலிருந்து ஒரு சில ஆயிரம் பேர்களில் ஒருவராகவும் வந்தாச்சு.. சரி.. அடுத்து என்ன? முட்டை CCIE ஆகி சில நூறு பேர்களுள் ஒருவராய் வருவதா, யாமறியோம்!



என்ன இருந்தாலும் மனுஷனுக்கு என்னா ஒரு தன்னடக்கம்? மற்றவங்கள் எண்டா இத்தனைக்கு வானம் ஏறி வைகுந்தமே ('சிலிகான் வலி'யை சொல்லவில்லை.) போனன் என்னுவாங்க. (நாமளும்தான் MBAயே ஒழுங்கா முடிக்க வக்கில்லை CEO என்னு பீத்திண்டிருக்கிரம்) ஆனா இவரு தனக்கு கூரையே போதும் எண்டு செட்டில் ஆயிட்டார். 



இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரை பெற்றெடுத்ததுக்கு எமது நாடு பல தவங்கள் செய்திருக்கவேண்டும். வரியப்புலத்து வரலாற்றில் இவரது சாதனைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் எனக்கூறி இந்த வாய்ப்பை வழங்கிய விழா நாயகன் அனந்தனின் நண்பர் வட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறி விடை பெறுகிறேன்.

நன்றி.
வணக்கம்.

கருத்துகள்

மன்மதகுஞ்சு இவ்வாறு கூறியுள்ளார்…
சே அனந்தனோட வாழ்க்கயே ஒரு புத்தகமா போட்டா வரும் தமிழர் சந்ததி படிச்சு பயன் பெற்று ( டேய் JK ஏண்டா பின்னாடி இருந்து " காறித்துப்பும் எண்டு சவுண்டு கொடுக்கிறே) முயற்சிக்கு அண்ணனின் அடிவிழுதாகி வாழ்வின் கல்விக்கரையை காண விழைவார்கள் என்பதில் அடியேனுக்கு ஜயமொன்றில்லை( சே சுத்த தமிழில எழுதவே நாக்கில நுரை தள்ளுதே)
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் நான் எங்கேடா துப்பினன்? கோர்த்து விடாத .. அண்ணன் அழகிரிக்கு எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ...!
ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
:)வாழ்த்துகள்!!! :)
எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
2004 இல் CCNA, 2012 இல் இரட்டை CCIE. Wow; வாழ்த்துக்கள். சிங்கப்பூர் வந்தால் ஆட்டோகிறாப் வாங்க வருகிறேன்.
எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
>இப்பிடி இருக்க ஒரு பூனைக்கும் எலிக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பதையெல்லாம் இங்க சொல்லப் போனால்

ஆனைக்கும் அடி சறுக்குமாம்..ஹீ ஹீ, take it easy.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Congratulation!

Ravi
Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
http://pedestrian-diaries.blogspot.sg/2012/06/blog-post.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
congrats ananthan, great article gowri keep it up, Wish all the best to both of you

பிரபலமான இடுகைகள்