முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

மெமரி லீக்


வியாழமாற்றம் 03-01-2013 இந்தமுறை augmented reality சம்பந்தமானது. இப்பெல்லாம் நமக்கு கமெண்ட் போட்டு அலுத்துவிட்டது. எத்தனை நாளைக்குத் தான் நல்லா இருக்கு எண்டு போடுவது. அதனால் வெறும் like உடன் நிறுத்திவிடுவேன். ஆனால் அதையும் மீறி ரொம்பவே நன்றாக இருக்கிறது, கமெண்ட் போடுவம் எண்டு வெளிக்கிட்டால் நீண்டு நீண்டு பிறகு அதுவே ஒரு பதிவாகிவிடுகிறது.

இம்முறை வியாழமாற்றம் வாசித்தபோது, முதலாவதாகத் தோன்றியது என்னய்யா ப்ரோக்ராம் பண்ணியிருக்கிறீங்க/றாங்க எண்டு தான். பலருக்கு இது ஒரு அர்த்தமில்லாத கேள்வியாகத் தோன்றும். ஆனால் நெட்வொர்க் அல்லது சிஸ்டம் சைடில் இருப்பவர்களுக்குத்தான் அதன் வலி புரியும். 

ஐந்து வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மேஜர் ப்ரொஜெக்டில் மாட்டுப்பட்டிருந்தபோது என்னதான் திருகுதாளம் பண்ணியும் அந்த சிங்கப்பூரின் முதலாவது சர்ச் என்ஜின் வெப்சைட் லோட் ஆவதற்கு 30s எடுத்தது. ஒரே query யை கூட சிறிது நேரத்தின் பின் இரண்டாவது முறை கொடுக்கும்போதும் கூட அதே நிலைமை தான். உடனே ப்ரோக்ராமேர்ஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்தாப்பல நெட்வொர்கில் தான் பிழைஎன்றார்கள். switches, routers, enclosure switches, load balancers, firewall எண்டு எல்லாத்திலையும் என்னதான் troubleshoot பண்ணிப் பார்த்தும் ஒண்டுமே கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாமே GB/fiber port.. லூப் எங்காவது மாட்டினால் தான் உண்டு. கடைசியா வேறை வழியில்லாம ஒவ்வொரு Application ஆக ஆராயப்போனா அதை develop பண்ணினவங்கல்லாம் ஒரேமாதிரி சிம்பிள் ஆக சொன்ன ஒரே பதில் "my application wont take more than 5sec". processing delay க்கு காரணம் சிஸ்டம்.

இப்போ நெட்வொர்கில் பிழை இல்லையென்றானதும் அவர்கள் தாவியது சிஸ்டத்க்குத் தான். ஸ்பீட்/storage காணாது. எவ்ளோ allocate பண்ணினாலுமே இன்னும் இன்னும் வேணும் எண்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட G3/4/5 Servers மற்றும் SAN storage, டைரக்ட் attached storages இல் grid, cloud என அந்த நேரம் நமக்குத் தெரிந்த அனைத்தையும் முயன்று களைத்த பின்பு ஒருநாள் application சைடு project manager வந்து சொல்கிறார்.. "சில applications இல் நிறைய memory leak இருந்தது. fix பண்ணியாச்சு. இப்ப ஒருக்கா ட்ரை பண்ணி பாப்பமா?" எண்டு.. உடனே எனது வாயில் வந்து சொல்லாமல் விட்டது "what the heck is that?".

இங்கு பிரச்சினை என்னவென்றால் "nobody is seeing the big picture". ஒரு search க்கு results கொண்டு வாறத்துக்கு குறைந்தது இத்தகைய ஐந்து/ஆறு complex applications run பண்ண வேண்டியிருக்கும். அந்நியன் பாணியில் சொன்னால் "ஒவ்வொருத்தரும் ஐந்தைந்து செக்கன்களாக மொத்தம் 25-30sec களை ஒவ்வொரு search processing இலும் கொள்ளையடிக்கிறார்கள்." ஆனால் end user கம்ப்ளைன் பண்ணுவது. network slow. இத சொன்னா யாருமே புரிஞ்சுக்க மாட்டாங்க. பாவமைய்யா நாங்க.. எவ்ளோ நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்