ஹிமாலயா கிரியேசன்ஸ் 6

by - 1/02/2013 09:45:00 முற்பகல்

ஹிமாலயா கிரியேசன்ஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் நிறுவனமாக உருவாக்கம் பெற்று சில நாட்களே ஆகியிருந்தன. முதலாவது நிகழ்ச்சி, AAA Movies International அனுசரணையில் Himalaya Creations Pvt Ltd நிறுவனத்தினரால்  நடாத்தப்பட்ட "ignite : Empowering the short-filmmakers".. பட்டுத்துணி விரிக்கப்பட்ட வட்டமேசைகள்.. சுற்றிவர அழகிய நாற்காலிகள்.. மேடை விளக்குகள்.. சிறந்த ஒலியமைப்பு.. என்று களைகட்டிய அந்த இடம்.. யாழ்ப்பாணமும் பல வெளியிடங்களைப் போலவே அதி நவீன வசதிகளுடன் கூடிய conference halls உடன் அதிமுக்கிய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துவதற்குத் தயாராக இருக்கிறது என்பதைக் கட்டியம் கூறிற்று. 

பல வளர்ந்துவரும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட Himalaya Creations நிறுவனத்தின் இந்த முதலாவது ignite நிகழ்வில் தான் வடபகுதி திரைப்படக்கலை சார் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சங்கம் ஒன்றை உருவாகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு அதன் தலைவராக ஈழத்தின் புகழ்பூத்த திரைப்பட இயக்குனர் திரு. ந.கேசவராஜன் அவர்களை ஹிமாலயா கிரியேசன்ஸ் தலைவரான திரு. ரெ.துவாரகன் அவர்களால் முன்மொழியப்பட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆனா நிலையில் இத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நடத்திவைத்த இடம்.
"இந்த விளம்பரத்தில் ஒரு சிறுபகுதி இருக்கு. நடிக்க முடியுமா?" என்று கேட்டபோது உடனே "காதல் அணுக்கள்" பாடலில் வரும் ரஜினி கெட்அப்பில் Guitarம் கையுமாக வந்து  நின்ற பிருந்தா முதற்கொண்டு இடையில் வரும் பிறந்தநாள் கொண்டாட்டம், கடைசி frame இல் வரும் விளக்குகள் மாறிமாறி எரியும் காட்சிவரை இந்த விளம்பர ஷூடிங்க்கு பின்னல் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே சுவாரசியமானவை. 

போஸ்ட் புரொடக்சனில் வழமைபோலவே துசிகரனினதும் சுகன்யனினதும் உழைப்பு அபாரமானது. AR ரஹ்மானின் மியூசிக் Academyயில் படிப்பதற்கு செலக்ட் ஆகிவிட்ட மகிழ்ச்சி சுகனியனின் கம்போசிங்கில் தெரிகிறது. :)
இச்சமயத்தில் எமது வளர்ச்சிக்கு ஆதரவு தந்துவரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் ஹிமாலயா கிரியேசன்ஸ் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
You May Also Like

0 comments