ஹிமாலய சாதனை!

by - 2/26/2012 09:40:00 பிற்பகல்

மேடையில் மூவர்
கைகளில் விருதுடன்
ஹிமாலய சாதனையாம்
அருகினில் இன்னும் நால்வர்

பூஜையின் முன்பு
பலியிடவேண்டுமாம்
தானமாய்க் கொடுத்திருக்கிறோம்
ரத்தத்தை கண்ணீர்த் துளிகளாக

சிறுபிள்ளை வேளான்மையாம் - வலிகளை
அறுவடை செய்து கொடுக்கிறோம்
வாங்கிவந்த வரம் இதுவென்று
வெறுமனே ஒதுங்கிவிடவில்லை

வெற்றி இதுதானென்று
வென்ற பின்பு தோன்றாது
இன்னுமின்னும் சாதிக்கத் துடிக்கும்
இளம் கன்றிவர்கள் பயமறியார்கள்

காலச் சக்கரத்தில் அடிபட்டுப் போகையில்
சுயத்தை நிலை நிறுத்துவதர்க்கான
சமுதாய அக்கறையையும் தாண்டிய
ஒருவித கடமையுணர்ச்சியின் வெளிப்பாடாம்

தூற்றுவதற்கு சேரும் கூட்டம் போலவே
போற்றுவதற்கும் சேரும் கணப்போழுதினிலே
யார்மீதும் குறையில்லை
எவரோடும் பகையில்லை

இனியென்றும் தோற்ப்பில்லை
இமயம் சென்று கொடிநாட்டுவர்
அடர் காட்டில் தேனெடுத்து வருவர்
அவன் ஆலயத்துக்கு!You May Also Like

0 comments