தேவதாசி: இறைவணக்கமும் தன்னிலைவிளக்கமும்

by - 1/08/2012 05:38:00 பிற்பகல்


இறைவணக்கம்
சிறு மனக்கும்பி தனிகரோளிந்து
வன்கூடி யான் கலை விழித்தெழுது
கண்ட சோதியாம் கார்மேக
வண்ண நிழலிலாம் வேறிலா சாந்த
கோடி பதும நின் பாதம் தொழுதே

தன்னிலைவிளக்கம்
நின்பொருள் தேடி வந்திலோம்
நாளை எங்கென்றும் அறிகிலோம்
வழி ஏதுமறியா வெறுமையுடன்
விதிவழி செல்லும் கால்கள்


சூடியபின் மனம்சலித்து
சாக்கடைதனிலே வீசிடினும்
வலிகளைமறைத்தே புன்சிரிப்புடன்
விலகிடுவாள் இந்தத்தேவதாசி


உமையவள் கட்டளை
உரைப்பதென் கடன்
உவப்பிடின் நலம்
உவர்த்திடினும் குறையிலா***** 
தொடரும்..

You May Also Like

0 comments