கோழி வந்தாதா முதலில் முட்டை வந்தாதா..?

by - 10/22/2012 10:28:00 பிற்பகல்


சமீபத்தில் "The Big Bang" பற்றிய கட்டுரை ஒன்று வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்த கேள்வி தான் இது..

யதார்த்தமாக பார்த்தால் இந்தக் கேள்விக்கு நான்கு பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன.
A) கோழி  B) முட்டை C) இரண்டுமே D) இரண்டுமேயில்லை.

இதை தர்க்கரீதியாக ஆராய்ந்தால் "இரண்டுமேயில்லை" என்பது மட்டுமே பதிலாக அமைய முடியும். ஏனெனில் நித்தியம் என்பதில் ஆரம்பமோ இறுதியோ இருப்பதில்லை. இது வெறும் தர்க்க ரீதியான பதிலே தவிர கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் சார்ந்ததல்ல. 

இக்கேள்வியை "காரணம் மற்றும் விளைவு" என்பதின் அடிப்படையில் பார்த்தால் எப்போதுமே ஒன்றின் விளைவுக்கு எதுவோ ஒன்று காரணமாக அமையும் போது அதன் உருவாக்கத்திற்க்கு வேறெதுவோ காரணமாக அமைந்திருக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒரு பேச்சுக்கு முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொண்டால், அப்போ முட்டை எங்கிருந்து வருகிறது? கோழியிலிருந்து தானே? இல்லை வேறேதாவது ஒரு உயிரினம் பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமமடைந்து கோழியினது முட்டையை போட்டது என்றால் அது உருவாகிய முட்டையை இன்னோர் உயிரினம் போட எத்தனை மில்லியன் ஆண்டுகள் பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்? ஆக மொத்தத்தில் எதையுமே ஆரம்பம் என்று சொல்ல முடியாது.. ஏனெனில் அதன் உருவாக்கத்திற்கும் ஏதாவதொன்று காரணமாக இருந்திருக்கும். அதாவது ஒவ்வொரு A க்கும் முன்னால் ஒரு B இருந்திருக்க வேண்டும் அதேபோல் ஒவ்வொரு B க்கு முன்னால் ஒரு A இருந்திருக்க வேண்டும். இது மேலைத்தேய நேர்கோட்டு கால (Linear Time) கோட்பாட்டின் அடிப்படையில் சாத்தியமில்லாத ஒன்று.எனவே தான் கீழத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் "காலச்சக்கரம்" (Cycle of Time) இங்கே முக்கியத்துவம் பெறத்தொடங்குகிறது. இக்கொள்கை இந்தியாவில் மட்டுமல்லாதும் பாபிலோனியர்கள், பண்டைய சீன, மாயர் இனங்கள், அமெரிக்க இந்தியர்கள், Incas, Hopis, பண்டைய கிரேக்கர்கள், ஸ்காண்டிநேவிய மற்றும் பல கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது. Cycle of Time இல் காலத்திற்கு ஆரம்பமோ முடிவோ இருப்பதில்லை. கோழியிலிருந்து முட்டை வரும்.. முட்டையிலிருந்து கோழி வரும்.. எனவே இங்கு "எது முதலில்..?" என்று கேட்டால் "இரண்டுமேயில்லை" என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.
சரி இதற்கும் "The Big Bang" தியரிக்கும் என்ன சம்பந்தம்..? அடுத்த பதிவில்..


You May Also Like

0 comments