முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

கமலின் விஸ்வரூபம்


விஸ்வரூபத்தில் ஒருபாடல். துப்பாக்கி எங்கள் தோளிலே.. கேட்கையில் தொண்ணூறுகளுக்கு எம்மையறியாமலே இழுத்துச்செல்கிறது. 
போரை நாம் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தெடுத்துகொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது
அன்று கேட்க்கையில் புல்லரிக்கவைத்த வரிகள். இன்னும் எத்தனை முறை தான் என்று சலிக்க வைக்கிறது இப்போது. 
ஊரைக்காக்கும் போரிற்க்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வு என்று சத்தியம் செய்கின்றோம்.
கண்ணீர் குளம்கட்டவில்லை. வெறுமை மனதை பிசையவில்லை. துக்கம் தொண்டைக்குழிக்குள் நின்று அழுத்தவில்லை. 
துப்பாக்கி எங்கள் தோழனே
தோழ் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்
தேநீர் பருகும் மரணமே 
இதற்குமேல் கேட்டத் தோன்றவில்லை.

சிறுவயதிலிருந்தே நமக்கு என்று இருந்த ஒரே துணை மௌனம். அதீத உணர்வுகள் அலை மோதும்போது மௌனத்துக்குள் முடங்கிக்கொள்வதில் இருக்கும் ஆறுதலே ஒருசுகம் தான். யாரினதும் அணைப்போ ஆறுதல் படுத்துதல்களோ தேவையிருப்பதில்லை, அதனை விரும்புவதுமில்லை. நடுஇரவில் கூரைமேல் மல்லாந்துபடுத்துக்கொண்டு கோடானுகோடி நட்சத்திரங்கள் மத்தியில் இன்னுமொரு நட்ச்சத்திரமாய் இந்த உலகை மறப்பதில் இருக்கும் சுகம் வேறெதிலும் இருப்பதில்லை. 

Silence, Sweet silence, Dead silence என்று  மூன்று வகையான மௌனங்களை குறிப்பிடுகிறார்கள். மதுபனில் இருக்கும்போது என்னவோ திரும்பவும் யாருமேயில்லாத அந்த மௌனவெளிக்குள் மீண்டும் தொலைந்துவிட ஆசை வந்தது. ஆசை என்பதைவிட ஓர் வெறி. இருபத்திருநாள் மௌனவிரதம்.. தபசியா செய்யவேடுமென்று தோன்றியது. தொடங்கி இரண்டுநாள் தான் ஆகிறது.  

நண்பி ஒருத்தி கேட்டாள். How do you find it ?  
யவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் சுயரூபம்
என்று சொல்லாலாமேன்றால்.. உம்ஹும்..

நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய முடியும்.
அணுவிதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுகதிர் தான் 
ஆறடி மண்கூட எமக்காக கேளோம் என்றவர்கள் ஆண்டாண்டுகாலமாய் பல்லாயிரம் மக்களின் மனங்களில் நிரந்தரமாய் சிம்மாசனமிட்டு.. 
கருவறையும் வீடல்ல கடல்சூழ் உலகும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லுமிடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேருமருந்தில்லை.
உண்மைதான். அவர்கள் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள். புரட்சி.. பூகம்பம்.. சுனாமி எல்லாம் வெறும் கட்டுக்கதை. கண்களில் முந்தைய வெறியில்லை, எதையோ தொலைத்துவிட்ட வெறுமை தான் எஞ்சியிருக்கு. மீண்டும் மீண்டும் தட்டித்தட்டி நீங்களே மீண்டும் புதிதாய் உருவாக்கி விடாதீர்கள்.
போர் செல்லும் வீரன் ஒருதாய் மகன்தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒருதாய் அழுவாள்.
வரிகள் வைரமுத்து என்றதும் ஒருகணம் குழம்பிவிட்டேன். இல்லை.. இவை கமலுக்கேயுரிய வரிகள்.. அவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். He is really Great, Vishwaroop..



There is a place faraway 
I wanna go there someday 
I waana be there someday 


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி

பிரபலமான இடுகைகள்