கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XF1YQD4
பெரும்பாலும் எனது பதிவுகளில் பாத்திங்கன்ன எப்பிடியும் ஒரு பாட்டாச்சும் இருக்கும். ஆனா அதன் வரிகளைப் பத்தியோ இசையமைப்பப் பத்தியோ எதுவுமே கிலாகிச்சுச் சொல்லியிருக்க மாட்டன். அதை வாசகர்களின் பார்வைக்கே விட்டிருப்பன். (அப்பிடியே சொல்லிட்டாலும் இவ பெரிய சுப்புடு சிஷ்யை பாருங்கோ?)
இண்டைக்கு ஒரு கேள்வி வந்திச்சுதா..
"இசையை பாடல்களை ரசிக்கிரன் என்று சொல்லுறியே.. ஆனா ஏன் அதைப்பத்தி அதன் அழகான வரிகளைப் பத்தியெல்லாம் எழுதிறதில்லை.." என்று.
விட்டமா இண்டைக்கு எப்படியாச்சும் ஒரு பாட்டை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக ஆக்கிடனும் எண்டு போட்டு, iTuneல அதிகமா கேட்ட ஒரு பாட்டிலையே விநாயகர் சுழி போட்டு தொடங்கலாம் எண்டு தேடினா.. வந்தது Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் பிருந்தாவனி ராகத்திலமைந்த இந்தத் தில்லானா.. என்னமா ரெண்டெரிங் பண்ணியிருப்பார் பாருங்கோ.. ஏதாச்சும் புரியுதுங்களா..?
dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdiri dhIm nAdiri
dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdru dhIm nAdiri
dhIm nanA dhIm nanA tadingiNatOm takiTa jham tajham tajhanta tajhantarijham tarita jham tarita nAdiri
sogasulUra hOyalu kOri nIdari jEritini nIra kSIra nyAyamai maimaraci sakala carAcaramella pulakince tIyani hyani pincu ciru ravaLi nI muraLI mAdhurI nAdhiri
ஆனா ஒன்னு, இத்தினை வருசமா எத்தினை வாட்டி கேட்டும் சத்தியமா ஒரு வரி கூட எனக்கு விளங்கேல்லை. விளங்க வேணும் எண்டும் நினைக்கேல்லை.
இண்டைக்குத் தான் நம்ம ஈகோவை கிளறி விட்டச்செல்லே.. எப்படியாச்சும் கண்டு பிடிச்சே ஆகணும் எண்டுசொல்லி கூகிள் பண்ணினா.. கிடைக்கவேயில்லை. விட்டிடுவமா? விக்கிரமாதித்தனின் வேதாளமில்லை? கடைசியா ஒரு வழியா பல விதத்திலை எழுத்துகளை மாத்திமாத்தி (உயர்தரத்தது கணிதத்திலை வரிசைமாற்றம் மற்றும்.. என்னமோ எண்டு சொல்லுவாங்களே? அதை) ட்ரை பண்ணினதில்லை, நம்மப் போல ஒரு ரசிகாஸ்ல கண்டு பிடிச்சம்.
'nI (un/your/Ap kE) dAri (vazhi/path/rAh par) jEritini/cEritini (SErvEn/will join/milUngA)'.
'sogasulUra hoyalu kOri' 'Seeking (kOri) your beauty-soaked (sogasulUra) charm (hoyalu), I have come to your path'.....
என்ன தலை சுத்திற மாதிரி இருக்கா? அதான் சொல்றது இசைய ரசிக்க வேணும் சும்மா சும்மா ஆராச்சிஎல்லாம் பண்ணப்படாது எண்டு..
ஆனாலும் பாருங்கோ இவ்வளவு கஷ்டமான வரிகளை கூட இந்தப் பிஞ்சுகளுக்கு அவரின் சிஷ்யன் திருவன்கூர் இளவரசர் ராமவர்மா அவர்கள் எவ்வளவு எளிமையா சொல்லிக்குடுக்கிறார் எண்டு. He is really Great!
ஹ்ம்ம் நமக்கும் இப்படியொரு குரு வாய்ச்சிருந்தா..? 'கிழிச்ச்சிருப்ப.. கூரையேறி சேவல் பிடிச்சனி எண்டதுக்காட்ன்டி வானமேறி வைகுந்தம் போக ஆசைப்படக்கூடாது சரியோ?'
நிற்க, கவிதை/பாட்டு வரிகள் எண்டு வந்திட்டா நாம அணுவணுவாய் ரசித்துக் கேட்டது பாரதியை மட்டும் தான். ஒவ்வொரு வரிக்குள்ளும் அவர் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்கள் சிலசமயம் ஈட்டியாய் குத்திச் செல்லும். பல சமயம் பூவாய் தென்றலாய் மயிலிறகாய் வருடிச் செல்லும். அதுவும் இசையுடன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? அந்தவகையில் பாரதியின் பாட்டுகளுக்கு மெருகு கூட்டி, என்னை மயக்கிச் சென்றது சுதா ரகுநாதனின் குரல்தான்.
மிக்க நலமுடைய மரங்கள்,-பல விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள்,
பெரும்பாலுமே எல்லோரும் எல்லாவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறாங்க. ஆனா காட்டைப்பத்தி இவ்வளவு அழகாய் அணுவணுவாய் ரசித்து சொல்லியது என்றால் எனக்குத் தெரிஞ்சு பாரதி மட்டும் தான்.
அட.. இந்த வரிகளைப் பாருங்க.. எனக்கென்னவோ இது எங்கடை நாட்டிலை, காட்டுக்கு வெளில நடக்கிறதை சொல்ற மாதிரிக்கிடக்குது.
சே.. எவ்ளோ உயிர்த்தன்மை நிறைந்த ஒரு இடத்தைப் போய் இன்று எவ்வளவு அசிங்கப்படுத்தி வைச்சிருக்கிறம். ஆனாலும் என்னமோ இன்னிக்கிருக்கிற நாடு நகரத்தை விட உயிர் பறித்தாலும் அடர் பெருங் காட்டினடுவே அதன் அழகை ரசித்துக்கொண்டே போய்ச் சேந்திடலாம் போல கிடக்குது.
ரொம்பவே அறுக்கிறேனோ? கவலைப் படாதேங்கோ, நிறுத்திடலாம்.. ஆனா ஒண்டு இனிமே யாரும் இசை/பாடல்/கவிதை வரிகளைப் பத்தி என்கிட்ட அபிப்பிராயம்/விளக்கம் கேக்கப்படாது விளங்கிச்சுதோ? ஆனாலும் பாருங்கோ, இந்த சரஸ்வதி ரங்கநாதன் அவங்க இருக்கிறாங்களே.. என்னமா வீணையிலை தில்லானா வாசிக்கிறாங்க.. சரி சரி. நா மூடிட்டு போரம்பா..
அக்காவை நடனம் பழக கூட்டிப்போய் வரும்போது தில்லானாவை சாந்தினி பாடும்போது கேட்டிருக்கிறேன் ஆனால் இந்தளவுக்கு சிந்தித்ததில்லை..( கொய்யால சிந்திக்கிற நேரமா அது மான்விழியும் மயில் போல் வளையும் பெண்கள் ஆடுகையில்)அதுசரி என்னங்க இது "dhIm na na na tillillana "
யூ மீன் தீம் நாந நநனா தில்லானா வா.. அம்மா தாயே ஏன் இந்த கொலைவெறீ,, ( சிலவேளை கெளரி பிரபல பதிவர் என்கிறதால எமி ஜாக்சன் எல்லாரும் வாசிப்பினம் எண்ட நோக்கத்தில ஆங்கிலிஸ் இல அப்பிடியே சிலாகிச்சு எழுதியிருப்பாங்களோ) .. தில்லானாவை நேசிப்பவர்களுக்கு உங்கள் பதிவு அருமையான் ஒரு முகவரி ( அவ்வ்வ்வ்வ்வ்)
ஆனால் பாரதியின் வரிகளுக்கான உங்கள் உணர்வுகள் என்னவோ நம்ம நாட்டு நடப்பை போகும் வழியில் வாரியிருப்பது புரிகிறது..
நீங்க வேறை.. எமி ஜாக்சன் பாத்து நமக்கு என்னாகப்போகிறது? நம்ம டார்கெட் எல்லாம் Ricky Martin தானுங்கோ.. நிற்க, தில்லானாவை ஆங்கிலத்தில் எழுதும் போது அழுத்தம் கொடுக்க வேண்டிய எழுத்துக்களை தெளிவாக, இலகுவில் அடையாளம் காண முடிகிறது. அதனாலேயோழிய வேறொன்றுமில்லை. இன்னொரு கொலைவெறி ரேஞ்சுக்கு கொண்டு போய்டாதீங்க ப்ளீஸ்.. :)
கருத்துகள்
Dodge Charger AC Compressor
யூ மீன் தீம் நாந நநனா தில்லானா வா.. அம்மா தாயே ஏன் இந்த கொலைவெறீ,, ( சிலவேளை கெளரி பிரபல பதிவர் என்கிறதால எமி ஜாக்சன் எல்லாரும் வாசிப்பினம் எண்ட நோக்கத்தில ஆங்கிலிஸ் இல அப்பிடியே சிலாகிச்சு எழுதியிருப்பாங்களோ) .. தில்லானாவை நேசிப்பவர்களுக்கு உங்கள் பதிவு அருமையான் ஒரு முகவரி ( அவ்வ்வ்வ்வ்வ்)
ஆனால் பாரதியின் வரிகளுக்கான உங்கள் உணர்வுகள் என்னவோ நம்ம நாட்டு நடப்பை போகும் வழியில் வாரியிருப்பது புரிகிறது..
நீங்க வேறை.. எமி ஜாக்சன் பாத்து நமக்கு என்னாகப்போகிறது? நம்ம டார்கெட் எல்லாம் Ricky Martin தானுங்கோ.. நிற்க, தில்லானாவை ஆங்கிலத்தில் எழுதும் போது அழுத்தம் கொடுக்க வேண்டிய எழுத்துக்களை தெளிவாக, இலகுவில் அடையாளம் காண முடிகிறது. அதனாலேயோழிய வேறொன்றுமில்லை. இன்னொரு கொலைவெறி ரேஞ்சுக்கு கொண்டு போய்டாதீங்க ப்ளீஸ்.. :)