முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

மரண வாசலில் மலர்ந்த காதல்

மரண வாசலில்
மலர்ந்த காதல்
மறுஜென்மம் வேண்டாம்
முடித்துவிடு இங்கேயே..!முதல் பார்வையிலே
மூச்சை நிறுத்தியவன்
முகவரி அறிந்ததும்
முகம் திருப்பினான்

அவளுக்குக் கோபம் வரவில்லை

நம்பியிருந்தாள்
முன்வந்து நின்றான்
முகம் பார்த்தான்
முத்தம் கொடுத்தான்

முதல் காதல்
முதல் முத்தம்
மூன்றே நிமிடங்கள்
முதல் பிரிவு

அவளுக்குக் கோபம் வரவில்லை

மறுபடி வந்தவன்
முகம் காட்டாது
முகவரியும் சொல்லாது
மறந்துவிடென்று

மறைமுகமாய்ச் சொல்லியனுப்பி
மண்வாசம் போதையேற்ற
முல்லை மயக்கியிளுக்க
முரசம் கொட்டினான்

அவளுக்குக் கோபம் வரவில்லை

வேறிடம் செல்கிறான்
விரைவில் சொல்கிறோம்
வந்துபார் என்றவர்கள்
வழிமாறினார்கள்

மூச்சுள்ளவரை போராடினான்
மரண வாசலில் நின்றும்கூட
மறந்தும் கேட்க்கவில்லை
மங்கையவள் எங்கேயென்று

அவளுக்குக் கோபம் வரவில்லை

இத்தனை வருடங்களில்
எத்தனை காதல்
எத்தனை காமம்
எத்தனை ஏமாற்றம்

அத்தனை வலிகளையும்
தாங்கித் தாங்கியின்று
இதயம் எரிமலையாய்க்
கொதிக்கின்ற போதிலுமே

அவளுக்குக் கோபம் வரவில்லை

அமைதியாயிருந்தான் அவனன்று
கொள்கை கலைந்துவிடுமென்று 
அழாதிருக்கிறாள் அவளின்று
முகப்பூச்சு கலைந்துவிடுமென்று

மற்றபடி அன்று மட்டுமல்ல
இன்றும்.. ஏன் என்றுமே 
அவளுக்குக் கோபம் வராது  
யார்மீதுமே..!

கருத்துகள்

மன்மதகுஞ்சு இவ்வாறு கூறியுள்ளார்…
காத்திருப்புக்களுக்கு காரணம் சொல்லமுடியாது
காரணங்களுக்காக காத்திருப்பும் வீணாகிடும்

பிரபலமான இடுகைகள்