முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஆதரவுக்கு நன்றி!


இந்தத் தொடரை ஆரம்பித்தது முதலாய் பலதரப்பட்ட இடங்களிலிருந்து பாராட்டுகள் மட்டுமன்றி, சில மனத்தங்கல்களையும் கொண்டுவந்தபோது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. அதற்குப் பதில் எழுதி, அதுவே ஒரு பதிவாயிட்டுது. அவற்றில் சிலதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவது பாராட்டு, நான் மட்டுமல்ல எங்கள் கல்லூரியில் பெரும்பாலானோர் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் Girvani அக்காவிடமிருந்து, 


  • Girvani Manoharan Very nice. You have written it casually which makes it more interesting. What other talents you have Gowri? Keep it up!
    13 hours ago ·  ·  1 person

  • Gowri Ananthan நன்றி அக்கா. உங்களது ஊக்கம் தான் எனக்கு பக்கபலம். "jack of all master of none" எண்டு சொல்லுவாங்கள். அது மாதிரித்தான் நானும். அப்பப்ப என்ன வருதோ அப்படியே கக்கிண்டு போறது. ஆனா இது நெடுநாளா நினைச்சு வைச்சு, அதன் கணம் தாங்காது கொஞ்சம் இறக்கி வைக்கிறன். அவ்வளவுதான். :)



தொடர் ஆதரவளித்துவரும் பார்த்தீபன் அண்ணா,





    • your way of writing on your blog superb. carry on we need such good girl as writter

  • 12 hours ago
    Gowri Ananthan
    • thank u :)
    • naalaiya pathivu konjam urukkamaa irukkum.. enna comment varappokuthendu theriyala :)

    • mm . it does not matter because it is indeed reflection of your mind..




அடுத்து FB லைக் பண்ணின ஒரு முக்கிய எழுத்தாள நண்பர்.
இதன் இரண்டாம் பாகம் எழுதும்போது இவர் ஒருபதிவில் கூறியதுபோல், இடப்பெயர்வில் பல கனமான தருணங்களுடன் கூடவே சில சுகமான தருணங்களும் இருந்ததை மறுக்க முடியாது என்ற வாதம் தான் என்முன் வந்து நின்றது. உண்மைதான். 



தொடர்கதையா? அடி பின்ன போறீங்க எண்டு தெரியுது .. "பெண்களை அழவைத்து ஆனந்தம் காண்பவர்கள். கட்டி வைத்து உதைக்க வேண்டும். அதுக்குத்தானே கராத்தே பழகுகிறாள். ச்சே அதுவும் இந்தப் பாழாப்போன காலால், இப்போதைக்கு முடியாது போலிருக்கு." ..... கதையின் நாதத்தை already create பண்ணீட்டீங்க போல ... I am sure you would have considered this, but just giving my 2 cents .. நான் அவ்வப்போது எழுதும்போது(அதை எழுத்துன்னு யாரு சொன்னா?) உண்மை 40% வீதம் மட்டும் எடுத்துக்கொண்டு மிகுதி 60% கற்பனை சேர்ப்பேன். அப்போது கதையில் ஒரு நல்ல flavor வரலாம். unless our own story is insanely exciting! கலக்குங்க

 ·  · 5 hours ago via naanumorurasikai · 



கடைசியாய் ஒரு சின்ன மனவருத்தம். அட, நம்ம தீபன்.. கனநாளாய்க் காணலியே எண்டு பாத்தன் வந்திட்டீங்க. அப்பிடியே இருந்து முழு தொடரையும் வாசிச்சு அப்பப்ப விமர்சனம் வையுங்க :)


Gowri "http://naanumorurasikai.blogspot.com/" la pala paer kathai santhi sirikka pokuthaa ? :-) :-(

அப்பிடியெல்லாம் இல்லை தீபன். காலச்சக்கரத்தில் எப்பிடியெல்லாம் பல சம்பவங்கள் சேர்ந்து ஒரு தொடர் சங்கிலி போல் கோர்வையாய் வருகிறது என்பதை என்னால் முடிந்தவரை எளிதாகச் சொல்ல  முயன்றிருக்கிறேன். இதில் பெரும்பாலும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொரு தொடரிலும் இருக்கும். சில சமயம் ஒன்றிரண்டு துணை கதாபாத்திரங்களும் இருக்கலாம். எந்த ஒரு சம்பவத்துக்குமே பிரதான பங்காளி எண்டு ஒருவர் இருந்திருப்பார். அவரின் ஆதிக்கம் தான் பெரும்பாலும் அந்த நிகழ்வை இட்டுச் சென்றிருக்கும். மற்றவர்களைப் பொறுத்தவரை எப்படியோ, ஆனால் அவரைப் பொறுத்தவரை அந்த நேரத்தில் அவரின்  முடிவுகள் சரியானவையே. எனவே அப்படி ஒவ்வொரு பிரதான பங்காளிகளின் பார்வைக்கு முக்கியம் கொடுத்துத்தான் சம்பவங்களை எழுத முயன்றிருக்கிறேன். ரசிகை எண்டு முதலே சொல்லிவிட்டதால, இங்கு ரசனைக்கே முதலிடம். அதனால் குற்றச்சாட்டிற்குப் பதிலாய் அழகுணர்ச்சிதான் மேலோங்கி இருக்கும்.  அடடா இதுவே ஒரு பதிவாப் போச்சு போல கிடக்கே. :)

மீண்டுமொருதரம்,

உங்களின் ஆதரவுக்கு நன்றி!
Sparkline 652

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்