முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

Shaolin

"Shaolin". இதைப் பத்தி பல பேர் பலவிதமா படங்கள்ல காட்டியிருக்கிறாங்க. அதையெல்லாம் அப்பிடியே அல்லாக்கா  தூக்கி  சாப்பிடுற மாதிரி இப்ப ஒரு படத்தில, Shaolin உருவாக காரணமே ஒரு தமிழன் எண்டு சொன்னப்போ அப்பிடியே புல்லரிச்சுப் போச்சு.

இதை ஆளாளுக்கு தங்களுக்கு தெரிஞ்ச கோணத்தில விவாதம் செய்து கொண்டிருக்க, தமிழ் பேசினவங்க எல்லாம் தமிழனா? இது தான் இன்றைய முக்கிய வினா. தமிழன்னு சொல்லிக்கிற பலருக்கு தமிழே தெரியாதே, அப்போ அவங்களை எப்படி அழைப்பது?  தமிழன் என்பது இனமா இல்லை மொழி அடையாளமா?

நான் இதை இரு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று தமிழை வளர்த்தவர்கள். ரெண்டு தமிழைக் காத்தவர்கள்.  தமிழை வளர்த்தவர்களில் பலர் வேற்று இனத்தோர் உண்டு. ஆனால் அதை போற்றிப் பாதுகாத்து வருவது தமிழினம் தான். அது எமது கடமையும் கூட. பிறருக்கு நமது மொழிவளம் புரிந்த அளவுக்கு நமக்கு அதன் அருமை புரிந்திருக்கிறதா? பிறர் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு பல படைப்புகளை தந்தனரே ஒழிய அதைக் காக்க வேண்டும் என எண்ணித்தான் செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கில்லை. 

சரி அதை விடுங்க. இதப் பத்தி பேச நிறையப்பேர் இருக்கிறாங்க. நாம ஏன் அவங்க பிழைப்ப கெடுப்பான். இங்க நான் சொல்ல வந்தது என்னெண்டா என்டை சின்ன வயசு Shaolin கனவு பத்தி.

உந்த Martial Arts ல சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு craze இருந்தாலும் ஒருகை பாக்கத் துணிஞ்சப்போ வயசு பதினெட்டு ஆகிவிட்டிருந்தது. வயசுக்கு வந்த பிள்ளையள் வீட்ல அடங்கி ஒடுங்கி இருக்காமல் சும்மா என்ன karate அது இதுன்னு அம்மா முணுமுனுத்தப்போ அப்பா தான் எனக்கு சப்போர்ட் பண்ணினார். பிறகு ஒருவழியா பிரவுன் பெல்ட் எடுக்கவே கிட்டத்தட்ட ஒருவருஷம் ஆகிற்று. அடுத்தது black belt தான், இந்தக் கால் மட்டும் காயப்படாமல் இருந்திருந்தால்... அப்புறம் என்ன ஆறுமாதம் ரெஸ்ட், campus ,  காதல், கத்தரிக்கா, அது இதென்னு, எல்லாம் கோவிந்தா.. இப்ப பாத்தா crash course எண்டு ஆறுமாசத்தில  black belt ஓட வந்து நிக்கிறாங்க.

சரி, இதுக்கும் Shaolin க்கும் என்ன சம்பந்தம்னு கேட்டிங்கன்னா,  அப்பெல்லாம் எங்களுக்கு மாதத்தில ஒருநாள் பிற தற்காப்புக்கலை முறைகளையும் சொல்லித்தருவாங்க. அதில தெரிஞ்சு கொண்டதுதான் இந்த ஜோடோ, குங்க்பு எல்லாம். ஒரு eagle stance சரியா எடுக்கவே பலநாள் பாடுபட வேண்டி இருந்தப்போ இந்த Shaolin monks மட்டும் செங்குத்து பாறைல நின்நிண்டு என்னமா Animal Form stances பண்ணுறாங்க.

Monks in various Animal Form stances.


அப்ப தான் decide பண்ணினான் சீனா போகணும் மேற்கொண்டு பழகணும்ன்னு. ஆனா அதெல்லாம் கனவாயே போச்சு. இப்ப கேட்டா அனந்தன் சொல்லும், நானும் தான் ஹாங் காங் போகணும் குங்க்பு படிக்கனும்ன்னு ஆசைப்பட்டன்னு. எல்லாம் நடக்கிற காரியமா என்ன?

நம்ம தமிழ் படங்கள்ல வாற மாதிரி  வயித்தில கயித்தைக் கட்டிட்டு சும்மா சுத்தி சுத்தி  அடிக்கிறது  தான் குங்க்புன்னு நினைச்சுக்கொண்டு இருந்தா ஒருக்கா இந்த வீடியோவை பாருங்க..


Click here to download this video (13MB)


இதுக்கப்புறமும் எந்த ஹீரோவாவது படத்துக்காக மூணு மாசம் மூச்சை பிடிச்சிண்டு இந்தக் கலையை முழுசா கத்துக்கிட்டன்னு சொன்னா சத்தியமா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..

முக்கிய குறிப்பு:  இந்தப் பதிவுக்கும்  சமீபத்தில் வந்த 7ஆம் அறிவு என்ற படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்