கடல்சேரா மீன்கள்..

by - 12/15/2011 11:12:00 முற்பகல்

என்தேடல் இதுவல்ல
உன்தேடல் நானல்ல
நம்தேடல் எங்கும் 
சேராதே..

நீ சென்ற பாதை 
என் உயிரின் வாதை 
தினம் பார்த்திருந்தேன் 
நீ வரவேயில்லை  

விம்பங்களைத் தாங்கிய 
கண்ணாடி சொல்லும் 
காலத்தால் அழிக்கப்பட்ட 
காதல் கதைகளை 

மூலையில் இருந்த 
முருகனுக்குத் தெரிந்திருக்கும்
முன் நடப்பது வெறும் 
மாயத்தோற்றங்கள் என்று 

பாதி நிறைந்த தேநீர்க் 
கோப்பைக்குத் தெரியும் 
மீதிநிறைத்தது அவள் 
கண்ணீரென்று.. 

மலர்த்தோட்டம் 
நடுவிலொரு மலை 
மலைமேல் நதி 
மறுபக்கம் தொங்குபாலம்

வெறும் கனவுதான் என்று 
நினைத்திருந்தாள்
நல்லூரான் தன்முன் 
நடத்திக்காட்டும் வரை 

இதயம் படபடக்க 
ஓடிச் சென்று
குகையினுள்ளே   
பார்த்தபோது..

"அம்மா, நீ நல்லா 
ஏமாத்திப்போட்டாய்
இங்கை மாயாவியுமில்லை 
முத்திரை மோதிரமுமில்லை"

தொட்டியில் அடைபட்டிருந்த 
மீன்களுக்கு மட்டும் 
அவள் வலி புரிந்திருக்கும் 
மௌனமாய் அழுதன..You May Also Like

0 comments