முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

திரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே!

உங்கள் பார்வைக்கு
"செங்கடல் மிக நேரடியாகவே இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களைக் குறித்தும் தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் பேசுகிறது. இப்படத்தில் மீனவர்களும் அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர்கள் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள். அந்த வகையில் செங்கடல் மக்கள் பங்கேற்புச் சினிமா..."லீனா மணிமேகலைகருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த படம் எப்படி?
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இன்னும் பார்க்கவில்லை. இது டோக்கியோ, டர்பன், மொன்றியல், மும்பை, டொரண்டோ, கேன்ஸ் மற்றும் இந்தியன் பனோரமா சார்பாக கோவா பட விழாவிலும் திரையிடப்பட்டது, ஆனால் சென்னை திரைப்படவிழாவில் மட்டும் திரையிடப்படவில்லை. வெளியே பல விருதுகளை அள்ளியிருக்குது. உண்மைக்கதை என்று சொல்கிறார்கள். ஆனால் அடுத்த படம் ஷோபா சக்திதான் திரைக்கதை என்று போட்டிருக்குது. என்ன இ.. தெரியேல்லை. கிடைச்சுதெண்டால் பாத்திட்டு சொல்லுங்க.

நிற்க, புதிதாய் இன்று தொடங்கியிருக்கும் "உங்கள் பார்வைக்கு" என்ற இப்பகுதி, சும்மா நெட்ல அலசிட்டிருக்கிரப்போ கண்ணிலை கொஞ்சம் உறுத்திட்டிருக்கிரத்தை போடுற பகுதி. கிட்டத்தட்ட "தெரிவிப்பது நாங்கள்.. தீர்மானிப்பது நீங்கள்.." மாதிரி.. ஹிஹி.. :)
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
போஸ்டர்ல இருக்கிற படம் கொஞ்சம் touching ஆக இருக்குது. அப்பிடியே முழுப் படமும் நல்லா இருந்தால் எல்லோருக்கும் நல்லதுதான்.
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பிடி எல்லாம் ரிஸ்க் எடுக்க ஏலாது! .. எங்கேயும் எப்போதும் பார்த்தா பிறகு வேற படம் இன்னும் பார்க்க இல்லை... நல்லா இருந்தா பாக்கலாம்...
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு இந்த பிரச்சனையின் அடி நுனி தெரியாது...
//நாங்கள் வெப்-சைட்டில் விளம்பரம் கொடுத்தபோது,எங்களைத்தொடர்பு கொள்ளாதது அவர்கள் தவறு. -- சுகாஸினி //

இதில் கொஞ்சமே அர்த்தம் இருக்கிறதோ. ஏன் செலக்ட் ஆகவில்லை என்று முதலிலேயே கேட்டு, அப்போதும் இல்லை என்று ஆகி இருந்தால் எதிர்ப்பு காட்டி இருக்கலாம். படம் கூட விழாவில் திரையிடப்பட்டு இருக்கும் சந்தர்ப்பம் அதிகம்.

எது எப்படியோ .. இந்த திரைப்பிட விழாவுக்கு எப்படி படம் செலக்ட் பண்ணுகிறார்கள் என்பது மிஸ்ட்ரி தான்.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்பிடி எல்லாம் ரிஸ்க் எடுக்க ஏலாது!//
அப்பிடியா? நானொரு படம் எடுக்கிறதா இருக்கிறன். அதிலை முன் வரிசையில முதல் சீட்ல இருந்து கழுத்துநோக முழுப்படத்தையும் பார்க்கக் கடவது.

//ஏன் செலக்ட் ஆகவில்லை என்று முதலிலேயே கேட்டு, அப்போதும் இல்லை என்று ஆகி இருந்தால் எதிர்ப்பு காட்டி இருக்கலாம்.//
அது சரிதான். ஆனால் தொடர்புகொள்ளாமல் வந்து வெறுமனே கூப்பாடுபோட்டிருப்பார்களா? ஒருவேளை பப்ளிசிட்டியாக்கூட இருக்கலாம்.

//இந்த திரைப்பிட விழாவுக்கு எப்படி படம் செலக்ட் பண்ணுகிறார்கள் என்பது மிஸ்ட்ரி தான்.//
நம்மாக்கள் எப்ப இந்த மூடுமந்திரமேல்லாத்தையும் விடினமோ அன்னிக்குத்தான் உருப்படுவம்.
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.amanushyam.com/2011/12/blog-post_4136.html
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருவழியா சுபம் போட்டாச்சு.. குழுவினருக்கு வாழ்த்துக்கள். :)

பிரபலமான இடுகைகள்