நந்தகுமார் : அறிமுகம்

by - 12/18/2011 08:49:00 பிற்பகல்


மூன்றாவதுமுறை தொலைபேசி சிணுங்க 
மூட்டே இல்லாமல் புரண்டு படுத்தான் 
அவள் விட்டபாடில்லை  
"ஹலோ.. என்ன?"
"நீ இப்ப இங்கை வாரியா.. இல்லையா?"
"எதுக்கெண்டு சொல்லு"
"ஒ.. சொன்னாத்தான் வருவியா?"

இவளோடை வாதிட்டு 
எதுவும் ஆகிறதில்லை
"டே.. நான் கொஞ்சம் உதிலை போட்டு வாரன்.."
"என்னடா.. நித்தியாவே..?"
கேட்டது குமார்
"ஓமடா.. இண்டைக்கு என்னத்தை வைச்சிருக்கிறாளோ
சண்டை பிடிக்கிறத்துக்கு.."
சலித்துக்கொண்டு 
சட்டையைப் போட்டுக்கொண்டு 
வெளிக்கிட்டான்  நந்து 

அவர்கள் காதலில் 
தொண்ணூறாவதுநாள் தாண்டி 
பலமாதங்களாகியிருந்தன..***** 
தொடரும்..

You May Also Like

0 comments