முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

கொலைவெறி!

தனுஷ் 'கொலைவெறிடி'ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு தன்றை மனுசிட்டை சொல்லப்போய் (?), 
அவ அதைப் பிடிச்சு பாட்டாக்கசொல்ல (சிம்புவைக் கடுப்பேத்தவோ?), 
மூணு பேர் சேர்ந்து சும்மா முசுப்பாத்திக்கு அடிச்ச மெட்டு youtubeல பிக்கப்பாக (அட நாம Campus Trip போறப்போ அடிப்பாங்களே அது மாதிரித் தானுங்கோ), 
அதை தமிழ் பாட்டுக்கு முதலிடம் என்று BBC முதல் ஒபாமா வரை வாழ்த்துப் பாட (தமிழ் பாட்டு??? அட இங்கைதான் போய்ண்டே),
இந்தியப் பிரதமர் தன் பங்குக்கு விருந்து வைக்க (என்னமா அரசியல் பண்ணுறாங்க.. மாமனுக்கு தூது விட்டிருப்பாங்களோ), 
நம்ம பெடியள் சும்மா சிவனே எண்டு பாத்திட்டுப் போகாம தம்பங்குக்கு செம்மொழி பெருமை பேச (ரெண்டு நாளைக்கு முதல் தான் நம்ம எழுத்தாளரும்  தெரியாத்தனமா இங்கிலிஷ்ல ஒரு ஈமெயில் பண்ணிட்டார்.. விட்டுடுங்க ப்ளீஸ்..), 
நானும் தூக்கியதை Facebookல "தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்… Danush" என்று பகிர (விதி யாரை விட்டுது? பதக்கமெண்ட உடன புகை கிளம்புதில்லை..?), 
அதப்பாத்திட்டு நம்ம பாஸ் தன்ர படலைல சிங்கை எழுத்தாளர் (ஒருவழி பண்ணுறதா இருக்கிறீங்க?)  கருத்தெண்டு கலாய்க்க, 
வேறை வழியில்லாம நானும் இண்டைக்கு கொலைவெறிக்கு ஆளாக வேண்டியதாப்போச்சுது.

ஷ்ஹ்ஹ்ப.. கொஞ்சம் இருங்க வாறன்.. கண்ணைக்கட்டுமாப் போல கிடக்கு..
ஓகே ரெடி.. 
start camera action .. (தமிழ் படம் எடுக்கும் போதும் இப்படித்தானே சொல்லுறவங்க..? சரிசரி விடுங்கப்பா..)


எழுத்தாளர் பன்னிசாமி: சிங்கர் எழுத்தாளர் கௌரியா?  யாரடா அது சைக்கிள் காப்ல சிங்கர் எல்லாம் எழுத்தாளர் ஆனது?
ரசிகை: அடடே நம்மையும் சிங்கர் எண்டு சொல்லுறத்துக்கு ஊர்ல ஆளுங்க இருக்காங்களா.. உச்சி குளிர்ந்து போச்சு போங்க..

எழுத்தாளர் பன்னிசாமி: ஏண்டா நாட்டு பெயரை எல்லாம் ஷார்ட்டா எழுதுறீங்க? அப்ப இந்தியாவ இந்தி எண்டு எழுதுவீங்களா? அப்புறமா இந்தி எதிர்ப்பு போராட்டம் எல்லாம் தனிநாடு போராட்டமா?
ரசிகை: நா கேட்டனா? இதுக்குபோயி போராட்டம் அதிதேண்டு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு .. எல்லாம் இந்த மன்மதக்குஞ்சு செய்த வேலை. நாம பாட்டுக்கு ரசிகைன்னு சொல்லி தானே கிறுக்கிட்டிருந்தம். சும்மா விருது குடுக்கிறன் பேர்வழி எண்டு இப்ப பாருங்க உலக மகா எழுத்தாளர்களிடமேல்லாம் கடி வாங்க வேண்டி இருக்குது. 

எழுத்தாளர் பன்னிசாமி: "இற்றைக்கு பல்லாயிரம் வருடங்களின் முன்பு தோன்றிய ஒரு மொழியை, நேத்து வந்த அஞ்சு நிமிச சினிமாப்பாட்டு என்ன செய்துவிடும்?" 

ரசிகை: என்னைக் கேட்டால் இதொண்டும் பெருசா தமிழால் வந்த வினையாய் தெரியவில்லை, தமிழ் மனங்களால் வந்த வினை. அன்று AR ஆஸ்கார் விருது வாங்கியபோது தமிழில் ரெண்டு வார்த்தை பேசியதால் தமிழ் மனங்கள் குளிர்ந்து போனது. ஆனால் அதே சமயத்திலை ஈழத்துப் பிரச்சினையைப் பற்றியும் ஏதாவது இருவார்த்தை சொல்லியிருக்ககூடாதா என்று ஏங்கிய மனங்களும் இல்லாமலில்லை.

தம்மிலோருவன் உயர்ந்து நிற்க்கும் போது, அவனது தனித்தன்மையைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் தமது பிரதிநிதித்துவத்தை தேடுகின்றனர். அது சரியா தவறா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக தவறென்று சொல்லும் எந்த சினிமாக் கலைஞும் துண்டைப் போட்டுக்க வேண்டியதுதான். அதனாலேயே ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாக் கலைஞர்களும் விரும்பியோ விரும்பாமலோ சமுதாய எதிர்பாப்புகளையும் சேர்த்தே சுமக்கத் தொடங்கிவிடுகின்றனர். 

எழுத்தாளர் பன்னிசாமி: ஜேகே வுக்கு சவால் சிறுகதை போட்டில ரண்டாம் இடம் கிடச்சுதே? எவனாவது சீந்தினிங்களாடா? 
ரசிகை: Gapல சொருகிட்டீங்க.. அதானே உங்களுக்கு ஸ்பெஷல் டெலிவரி (பரிசைச் சொன்னன்) வருதாமே? நாமளும் தான் ஸ்கிரிப்ட் எழுதணும் ஸ்க்ரீன்ப்ளே பண்ணனும்னு கேக்கிறன். யாரு கண்டுக்கிறா?

எழுத்தாளர் பன்னிசாமி: கொலைவெறி பாட்டில தமிழ கொலை செய்து இருக்கிறாங்களாம் .. அவங்க பொங்கிட்டாங்க… பொங்கலுக்கு தான் இன்னும் ரெண்டு வாரம் இருக்கே?
ரசிகை: பொங்கவேல்லாம் இல்ல பாஸ். வெறும் அவியல் தான். இதிலை ஒரு சின்ன துவையல். நம்ம சமையல் அறிவு அவ்ளோதான். ஹிஹி.. :)


நிற்க, ஆங்கிலத்தால் தமிழ் சாகுதெண்டு ஏன் தான் எல்லாரும் சும்மா புலம்புறாங்கன்னு எனக்கும் தெரியேல்லை. நம்ம கதையில கூட கடைசில பாரதியே ஆங்கிலத்தில் தான் காலை வணக்கம்  சொல்லியிருப்பார். (அந்தர் பல்டிங்கிறது இதுதான். தெரிஞ்சுக்கோங்கோ..) 


கடைசியாய் நிஜமான கொலைவெறிங்கிறது என்னவென்றால்..

எனக்கு எதுவும் தெரியாதுப்பா.. நாம வெறும் ரசிகை மட்டும் தான்.. நீங்க நடத்துங்கோ..



கருத்துகள்

Vathees Varunan இவ்வாறு கூறியுள்ளார்…
கொலைவெறிப் பாடலின் மெட்டில் வரிகளை மாற்றி எழுதி யுரியூப்பில் வெளியிடுபவர்கள் இதற்கு செலவளிக்கும் நேரத்தில் புதிதாக ஒரு மெட்டை உருவாக்கி புதிய பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது எனக்கு.

இன்றுதான் உங்கள் வலைப்பதிவு பக்கம் வருகிறேன்... வாழ்த்துக்கள்
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி வதீஸ்..

ஒரிஜினல் கொலைவெறி பாட்டை சுத்த தமிழில் பாடியிருந்தால் இன்று உலகம் முழுதும் பரவியிருக்காது என்று பலர் வாதிடுகின்றபோது இப்படியொரு அழகான முயற்ச்சியை தமது சொந்த இசையில் கொண்டுவந்திருந்தால் (அது எவ்வளவுதான் நன்றாக இருந்திருந்தாலுமே) இந்த அளவுக்கு வரவேற்ப்பு/பப்ளிசிட்டி கிடைத்திருக்குமா? தவிர, அவர்களின் நோக்கம் கொலைவெறி மெட்டிலும் தமிழை கொல்லாமல் இசைக்க முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைப்பதாய்க் கூட இருக்கலாமே?
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
கௌரி ... எழுத்தாளர் சண்டை எல்லாம் ஆரம்பிச்சாச்சு போல .. யாரு இதில சாரு? யாரு ஜெமோ .. நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க மொதல்ல!
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
நா எழுத்தாளரே இல்லைன்குறேன் நீங்க 'எழுத்தாளர் சண்டை' அது இதென்கிறீங்க..? உங்கடை கற்பனை (?) எழுத்தாளர் பன்னிசாமி கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறன். மற்றபடி யார் எதை செய்தா நமக்கென்ன வந்துது? யாரும் யாருக்காகவும் போராட முடியாது. அதற்க்கான ஒற்றுமையும் யாரிடமும் இல்லை. :)

பிரபலமான இடுகைகள்