முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

நான் யார்?

சிலநேரம் வாழ்க்கை பயணத்தில், "நான் யார்? எனது உண்மையான அடையாளம் என்ன?" என்பது போன்ற கேள்விகள் எமது மனதில் என்றோ ஒரு நாள் ஏற்பட்டிருக்கும். இதுவரை இல்லாதுவிடினும் கூட, இறுதியில் என்றோ ஒருநாள் நிச்சயமாக ஏற்படத்தான் போகிறது.  

பலரைப் போலவே எனக்கும் இத்தகைய தேடல்கள் சிறுவயதிலேயே ஏற்பட்டிருப்பினும் அதற்க்கான தெளிவான பதில் இதுவரை கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தான் எனது profileஇல் கூட 'என்னைப் பற்றி' என்ற இடத்தில் "அடையாளத்தைத் தொலைத்தவள்" என்று போட்டிருந்தேன். பல சமய நூல்களையும், தத்துவ புத்தகங்களையும் படிக்கும் போது சில சமயங்களில் விடை தெரிந்தது போலிருக்கும், ஆனால் ஒருசில நாட்களிலேயே மீண்டும் குழப்பம் ஆரம்பித்துவிடும்.

"நான் யார்?" என்பதற்கு ஒரு சிலர் ஆத்மா என்றார்கள். நாத்திகர்களோ நாம் வெறும் இத்துப்போன சரீரம் மட்டுமே என்றார்கள். அதில்வேறை ஆயிரக்கணக்கான சமயங்கள், தத்துவங்கள் போலவே நாத்திகர்(Theist) என்பதில் கூட "கடவுள் நம்பிக்கை இல்லாதவர்(Atheist)", "கடவுளை என்றுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என நம்புபவர்(Agnostic)" என்று எத்தனை பரிமாணங்கள்?  

சரி, நாம் ஆத்மா என்றே வைத்துக்கொண்டால், எதற்காய் புற்றீசல் போல தினமும் பல கோடிக்கணக்கானோர் இந்த உலகில் புதிதுபுதிதாய்ப் பிறந்து கொண்டிருக்கிறோம்? இவ்வளவு ஆத்மாக்களும் இவ்வளவு காலமும் எங்கே போய்த் தொலைந்தன? வெறுமனே இத்துப்போன சரீரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு அது இயங்குகிறது? அதை இயக்கும் என்ஜின் எங்கிருக்கிறது? எதை வைத்து ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்கிறோம்? எதோ ஒரு சக்தி உடலிலிருந்து நீங்குவதினால் தானே? 

அது மட்டுமல்ல, எனது உணர்வுகள், எண்ணங்கள் எவ்வாறு உடலுடன் தொடர்பு கொள்கின்றது? எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன? அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? மனதின் ஆயிரக்கணக்கான புதிர்களை விடுவிப்பது எப்படி? எவ்வாறு தனிப்பட்ட நடத்தை/பண்பு/பழக்கவழக்கங்கள் உருவாகின்றன? எவ்வாறு நமது வாழ்க்கையை அமைதியானது மற்றும் சந்தோசமானது ஆக்குவது?

இப்படிப் பல கேள்விகள் என் மனதினுள் சிறுவயது முதலே தோன்றி இருப்பினும் தற்போது சற்றே ஆழமாய்க் குடையத் தொடங்கியிருந்த நேரத்தில்தான், ஒரு இனிய அந்திமாலைப் பொழுதின்  ரம்யமான சூரிய அஸ்தமனத்தை பலவருடங்களின் பின்பு முழுமையாக ரசித்துக் கொண்டிருந்த போது "நான் ஓர் அழிவிலாத ஆத்மா என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்" என்றொரு குரல் கணீரென்று ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்கள் சூரியக் கதிர்களை விடவும் சக்திவைந்தவையாக இருந்தன. இருந்தும் அவை "நீ சபிக்கப்பட்டவள்" என்பதைப்போல் எரித்துச் செல்லவில்லை. நிலவின் ஒளியைப்போல குளுமையைத் தந்தன. திடீரென்று பிரபஞ்சங்களின் எல்லைகளுக்கப்பால் தூக்கி எறியப்பட்டது போன்றதொரு உணர்வு...

சரி அதையெல்லாம் விடுங்க.. இந்து சமயமும் "நீ ஓர் ஆத்மா" என்றுதானே படித்துப் படித்துச் சொல்கிறது. அப்படியிருக்க இன்று மட்டும் இதில் என்ன புதுமை வந்தது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. எல்லோரும் "நீ ஓர் ஆத்மா" என்று இலகுவாக சொல்லிவிடலாம். ஆனால் அதன் பின்னரான கேள்விகளுக்கு யாராலுமே தெளிவாக விளக்கம் தர முடியாது. முக்கால்வாசிப் பேர் "தியானம் செய். தன்னால் புரியும் என்பார்கள்." (அனந்தன் ஒருமுறை கேட்டபோது, நான் கூட அப்பிடித்தான் சொன்னேன்.) ஆனால் வெகு சிலரே தாமே யோகத்திலிருந்து எமக்கான விடைகளை அருள முடியும். அப்படி ஒரு குரு வாய்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நிறையவே தேடல் இருக்கவேண்டும்.  

சரி இப்ப எங்கடை கேள்விக்கு வருவம்.. நான் யார்? Who am I? The Soul..
Who am I
A precious point of conscious, blissful, light energy, the soul… This is you
Imagine a tiny point located where thoughts come from. That point thinks, remembers and decides.This point is you.
The point where every emotion is born…This is you. A spiritual being interacting through the body… This is you.
The eternal source of life and life’s experiences, the seat of self–esteem and self–respect. This is you.

எதை வெட்டவோ, நெருப்பால் எரிக்க, நீரால் ஈரப்படுத்த அல்லது காற்று உலர்த்த முடியாததோ அதுவே ஆத்மா.. அதுவே நான் (i) 


ஒரு வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும் சாரதிபோல நமது ஆத்மாவும் நெற்றியின் நடுவே இருபுருவ மத்தியில் இருந்து இந்த சரீரத்தினை இயக்கிக்கொண்டு இருக்கின்றது. அதனால் நினைக்கவும் பிரதிபலிக்கவும் முடியும்.

அதன் செயற்ப்பாடுகளை மனம்(Mind), புத்தி(Intellect), சமஸ்காரம்(Resolves) என்பன மந்திரிகளாயிருந்து வழிநடத்திச் செல்கின்றன.

மனமானது எண்ணம், கற்பனை மற்றும் கருத்துக்களை உருவாக்குகின்றது. இதுவே அனைத்து உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. புத்தியானது எண்ணங்களை மதிப்பிட்டு முடிவுகளை எடுக்கிறது. சமஸ்காரம் எனப்படுவது கடந்தகால அனுபவங்கள் மற்றும் நடவடிக்கைகளின் பதிவாகும். இதுவே ஒரு ஆத்மாவின் தனித்துவத்தை நிர்ணயிக்கின்றது.


தொடரும்..




கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன கெளரி .. கவுண்டர் குடுக்கிறீங்க போல இருக்கு ;) ;) .. கவனிச்சீங்களோ தெரியாது (இப்பெல்லாம் நீங்க எங்க படலை பக்கம் வாறீங்க?) ... கடவுள் பற்றி நானும் கிறுக்கி இருக்கிறேன்!!

http://www.padalay.com/2012/04/blog-post.html
எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
Brahma Kumaris என்பது ஒருவித re-batching என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

நானும் பிரம்ப குமாரிகளின் பின்னால் போயுள்ளேன். 1989/90 காலம். ஏதோ 'தியானம்' என்று நண்பன் ஒருவன் (இது எறியல் புகழ் நண்பனல்ல) கூட்டிச் சென்றான். ஒருநாள் ஒரு fax (முர்லி)வாசித்துக் கொண்டிருந்தான். இது யார் அனுப்பியது என்றேன். (Head Quarters) என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். கடவுள் அனுப்பியதுதான் என்றால். அன்றிலிருந்து escape.

பிரபலமான இடுகைகள்