முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

யாழ் Hackathon

"என்ரை app Angry birdsஐ விட பிரமாதமா reach ஆகப்போகுது பாரு.." சேந்தன் சொல்ல 
"எனக்கு முதல் fundingலயே பத்து லட்சம் கிடைக்கும் பாரு.." என்றாள் ஆர்த்திகா வேடிக்கையாக.
"என்னை choose பண்ணுங்க உங்க பேரு யாழ் சிலிக்கன் வாலி வரலாற்றில் எழுதப்படும்" என்று சிரித்துவிட்டு திரும்பி பக்கத்திலிருந்த மைலோவை ஒருவாய் உறிஞ்சிவிட்டு மீண்டும் தன் முன்னால் இருந்த கணணிக்குள் மூழ்கிவிட்ட அருளைப் பார்க்கையில் சயந்தனுக்கு பெருமையாக இருந்தது.

இது எங்கையோ ஒரு கம்பஸ்ல மரத்துக்குக் கீழையிருந்து கடலை போட்டுக்கொண்டிருக்கும் இளவட்டங்களின் பேச்சுக்களல்ல. வரும் ஜூன் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் Hackathonல் நிகழப்போகும் சம்பாசனைகள் தான் இவை. 

நிற்க, யாழில் தான் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் ஒரு கணணி கருத்தரங்கு நடக்குதே இதிலென்ன வித்தியாசம் இருக்கமுடியும் என்று கேட்டால் இது வெறும் மண்டைக்காய்களின் மந்திராலோசனையல்ல. இவர்கள் தான் நாளைய மார்க் மற்றும் ஸ்டீவ்களாக நம் யாழ் மண்ணில் வலம்வர இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர் என நம்புவீர்களேயானால் இப்போதே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

சரி இப்ப நம்ம நிகழ்ச்சிக்கு வருவோம். "Hackathon" என்று சுருக்கமாக அழைக்கப்படும் Hacking Marathon இனது சிறப்பம்சம் என்னவென்றால் மிகவும் குறுகிய நேரத்தில் பிரமாதமான மென்பொருட்களை வடிவமைத்து ஏன் உருவாக்கியே விடமுடியும். உதாரணத்துக்கு சமீபத்தில் skypeஇனால் 85 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட GroupeMe என்ற மென்பொருளுக்கான சிந்தனையுருவாக்கம் இத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உருவானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு சிலிகான் வாலி உருவாக்கத்தில் கணணி / மென்பொருள் கருத்தரங்குகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதைவிடப் பலமடங்கு முக்கியத்துவம் ஒவ்வொரு Hackathonக்கும் உண்டு.

இவ்வாறாக ஜூன் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் Yarl IT Hub இனால் நடாத்தப்படவிருக்கும் இத்தகையதொரு நிகழ்வில் developers, programmers, designers, project managers, students என்று கிட்டத்தட்ட நற்பது பேர் அவர்களின் திறமை மற்றும் விருப்பம் அடிப்படையில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து நாள் முழுக்க இருந்து மண்டையைப் போட்டுடைத்து புதிதாய் எதையோ உருவாக்கப் போகிறார்கள் / ஏற்கனவே இருக்கும் ஒன்றை மெருகூட்டப் போகிறார்கள் / எப்படி உருவாக்குவது என்றாவது அறிந்துகொள்ள இருக்கிறார்கள்.

இறுதியில் வெற்றிபெறும் அணிக்கு Dialog இனால் வழங்கப்படும் பல்லாயிரம்ரூபா பெறுமதியான android devices பரிசாகக் கிடைக்கவிருக்கிறது. அது மட்டுமல்லாது, பல்வேறு ஆறுதல் பரிசுகள் மற்றும் இத்துறையில் பலவருட அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுவுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல் / அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்று பங்குபெறும் அனைவரும் ஏதோவொரு வகையில் நன்மையடையவிருக்கிறார்கள். தற்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலான வெற்றிடங்களே எஞ்சியுள்ளதனால் பங்குபற்றும் ஆர்வமுள்ளவர்கள் சீக்கிரமே தங்களை இங்கே பதிவுசெய்து கொள்ளும்வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




Theme: Mobile Applications
Date: 1st and 2nd of June 2013
Time: 8 AM to 5 PM
Place: Lecture hall at the Computer Science Department, 
Faculty of Science, University of Jaffna.
Register Here

கருத்துகள்

Sqiar இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks a lot for sharing this with all folks you really recognise what you are talking about! In this complex environment business need to present there company data in meaningful way.So user easily understand it .Sqiar (http://www.sqiar.com/) which is in UK,provide services like Tableau and Data Warehousing etc .In these services sqiar experts convert company data into meaningful way.

பிரபலமான இடுகைகள்