முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"மெளன வலிகளின் வாக்குமூலம்" சொல்லும் கதைகள்



பயணியின் பார்வையில்  - அங்கம் 07

   வடமாகாண சபை நிழல் யுத்தம் நடந்தவேளையில்,  நீடித்த ஆயுத யுத்தத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் "மெளன வலிகளின் வாக்குமூலம்" சொல்லும் கதைகள் வெளியானது 

                                         -      முருகபூபதி

மொத்தம் 21 உண்மைக்கதைகளின் தொகுப்பு. இதில் ஆயுதம் ஏந்திய எவரும் விட்டுவைக்கப்படவில்லை. இலங்கை, இந்திய அரசுகள் மட்டுமன்றி சில உலக நாடுகளும் இக்கதைகளின் ஊடாக விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. பல போர்க்கால செய்திகளை இந்த நூலில் பார்க்க முடியும். இலங்கை, இந்திய இராணுவத்தினால் மட்டுமல்ல, புலிகள் உட்பட ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் இயக்கங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களால் மனந்திறந்து பேசப்பட்ட கதைகள்.
மற்றும் ஒரு முறிந்த பனையை ( Broken Palmyra ) இதில் காணமுடியும்.
"இந்தக்கதைகளில் வரும் சம்பவங்களும் கதை மாந்தர்களும் நிஜத்தை பிரதிபலிப்பவை. எனினும் எந்த ஒரு தனிநபரையோ, இயக்கத்தையோ அல்லது வேறு எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தொகுப்பு வெளியிடப்படவில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் உண்மைக் கதாபாத்திரங்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே எமது இளையோரினால் இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பதினெட்டு தமிழ் மூலக்கதைகளும் மூன்று சிங்கள கதைகளின் மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன. இந்த இருபத்தியொரு கதைகளுக்குள்ளும், இலங்கை வரலாற்றின் முக்கிய சில பக்கங்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்களின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பது மேலதிக சிறப்பை பெறுகிறது" என்று நூலின் தொகுப்பாசிரியர் கௌரி அனந்தன் தமது உரையில் பதிவுசெய்துள்ளார். 
நன்றி முருகபூபதி ஐயா
( தேனீ இணையதளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து)

Testimonies of Silent Pain:  Edited by Gowri Ananthan and Radika Gunaratne.
Twenty youth from Anuradhapura, Ampara, Killinochi and Jaffna have written either their personal stories or identified an individual in their own close circles, whose personal narratives are important to be shared with a wider audience. The Social Architects(TSA) are pleased to make these personal narratives available to a wider audience and hope the Policy Makers of Reconciliation and Transitional Justice will take note of the youth perspectives. 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்