இடுகைகள்

ஏய் பொண்ணு!

படம்
தமிழ்ப் படங்களில் கட்டபஞ்சாயத்து காட்சிகளில் வரும் பண்ணையார்கள் போன்ற உருவத்தில் இரண்டுபேர். முழுவதுமாய் நரைத்த தலையுடனும், வெள்ளை வேட்டி சட்டையிலுமாக  சற்றுத் தொலைவில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர். "ஏய் பொண்ணு, இங்கை வா" நர்சரியின் முன்பு நான்கு வயது குழந்தை ஒன்று, சற்றே தூரத்தில் நின்றிருந்த மற்றைய குழந்தையை அழைத்துக் கொண்டிருந்தது. மற்றையது பாதி புரிந்தும் புரியாமலும் தாயை பரிதாபமாகப் பார்த்தது. +++++++++++++++ அது சற்று முன்புதான் மரணச்சடங்கு நடந்துமுடிந்த வீடு. ஆண்கள் பலரும் சுடலைக்குப் போயிருந்தனர். வயதுபோன சிலர் மட்டும் வெளியே இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பெண்கள் வீடு கழுவுவதிலும் வந்தவர்களுக்கு டீ குடுப்பதிலும் மும்முரமாயிருந்தனர். "ஏய் அக்கா இஞ்சை வா.." சற்றே வளர்ந்த குழந்தையொன்று கிணத்தடியில் நின்ற தனது அக்காவை அழைத்துக்கொண்டிருந்தது. "கோபி, இங்கை வா." முழு நீள காற்சட்டையும் வெள்ளை ஷர்டின் மேலே பெல்ட் அணிந்தபடி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தவர் அந்தக் குழந்தையை அழைத்தார். "என்ன ...

மரக் கொட்டகை

பச்சைப் பசேலென்ற நீர்வெளி. அதன் நடுவே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கொட்டகை. அதனை கரையுடன் இணைக்கும் பாலத்தின் முடிவில் தேவநம்பியதீசன் காலத்து புத்தர்கள் அல்லது அவர்கள் உருவை ஒத்தவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். இப்போதெல்லாம் புத்தரை எங்கே வைப்பது என்றொரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அதனால் விகாரைகளை விட அநேக பார்களில் தான் காணக்கிடைக்கிறார். அங்கெல்லாம் முன்பு பெரிய தொப்பையுடனும் மொட்டந் தலையுடனும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி ஓர் உருவம் இருக்கும். சுற்றிவர நிறைய தங்க நாணயங்கள் இறைந்து கிடக்கும். சிலர் குபேரன் என்பர்.  ஆனால் பொதுவாக அழைக்கப்படுவது 'சிரிக்கும் புத்தர்'  என்று தான். அப்படி அழைக்கும்போதெல்லாம் புத்தரே நேரில் வந்து 'என்னை வைச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே' என்று வடிவேலு பாணியில் கேட்ப்பதுபோலிருக்கும். அதனால் தானோ என்னமோ இப்ப சாந்தமான முகத்துடன் கண்களை பாதி மூடியபடி புன்முறுவலுடன் அமர்ந்திருக்கும் புத்தரையே வைத்துவிட்டார்கள். இல்லாவிட்டால் ஒருவேளை வருபவர்கள் எல்லோருமே குபேரனைப் போலிருப்பதால் ஒரு மாறு...

நூற்றிலொரு வார்த்தை

படம்
எல்லோரும் எதிரபார்த்த ஒன்றே எனினும் கடைசிநிமிட படபடப்பு/பரபரப்புகளின் மத்தியில் சற்றே சலனம் கொள்ள வைத்த தேர்தல் இது. இறுதி முடிவு பற்றி நான் சொல்வதை விட எமது நண்பர்கள்/நண்பர்களின் வட்டம் சொல்லிய/பகிர்ந்த கருத்துகளிலிருந்து ஒரு சில இன்றைய  உங்கள் பார்வைக்கு .. Options Anuraj Sivarajah மலர்ந்தது தமிழர் அரசு Options Aswin Sutharsan  shared  Castro Rahul 's  photo . பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்.. என்னது தமிழீம் கிடைச்சிற்றா?? Options Thivagar Thayaparan வடமாகாணசபை தேர்தலில் இம்முறை அனைத்து தமிழ் மக்களும் காட்டியிருக்கும் வாக்களிக்கும் ஆர்வம் பாராடத்தக்களவு வாக்களிப்பு வீதம் என இவ்வளவுக்கு ஒரு பெருவெற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது...யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் என அனைத்து மக்களின் பங்கும் உண்மையில் பாராட்டத்தக்கது..... தாங்களே 20 வருடங்களுக்கு முன்னர் காணிகளை அபகரித்தது விட்டு 20 வருடங்கள் கழித்து அவற்ற...

Ruhbins Building Constructors Documentary

படம்
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என்றாலே நாத்திகர்கள் தாம் என்று அடையாள படுத்திவரும் நிலையில் கோவில்கள் கட்டுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லது பகுத்தறிவில்லாதவர்கள் என்றொரு கருத்து ஆழமாகப் பதிந்து / பதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தளவுக்கு இவை உதவுகின்றனவோ இல்லையோ எமது  கலாச்சாரத்தின் விழுமியங்களாயிருந்து அதனைப் பேணிப் பாதுகாத்து வரும் இடங்களாயிருக்கின்றன என்பது உண்மை. அல்வை முத்துமாரியம்மன் கோவில் 'தமிழ்நாடு' என்று பெயரிலேயே தமிழை வைத்திருக்கும் ஒரு நாட்டில் (மாநிலத்தில்) சென்னை முதல் கன்னியாகுமரிவரை கிட்டத்தட்ட இருபதுநாள் பயணம் மேட்கொண்டிருந்தபோது கூட  "நான் தமிழன்டா" என்று நினைத்து பெருமைப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகுசிலவே. மதுரை, சிதம்பரம், மலைக்கோவில், ஸ்ரீரங்கம், திருவெண்ணாமலை, தஞ்சாவூர், கேரள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம்,  திருப்பதி போன்ற முப்பதிற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் பெரியகோ...

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

படம்
ஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக  பட்ட பாடுகளையும்  நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே  குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும். ஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான்? அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலைப் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை? சில மாதங்களுக்கு முன்...

"a journey through a century" Documentary Film

படம்
"சிங்கம் சிங்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தரம் டிவியில அலறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலை, ஒரு ஆவணப் படத்துக்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியது இவங்களாத்தான் இருக்கும். குறுந்தட்டு வெளியீட்டிற்கு  இந்திய சினிமா ஆடியோ ரிலீஸ் போலவே ஐந்தடி உயரத்தில் கவர் மாதிரியுரு செய்திருந்தனர்.  Trailer பற்றி சொல்லவே தேவையில்லை. வழமைபோல் Music இல் சுகன்யன் பிரித்து மேய்ந்திருக்கிறார். இந்த ஆவணப் படமானது வடக்கின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான Himalaya Creations (Pvt) Ltd இனால் மிகவும் குறுகியகாலப்பகுதியில் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்க்கான இசையினை Thunderknight Music இனுடைய டைரக்டர் S sukanyan அமைத்துள்ளதோடு, யாழில் முதன் முறையாகபிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் College Hymn இற்கான Mastering இனை ஹாலிவுட்டின் பிரபல "Universal Mastering Studio" செய்திருக்கிறது.  உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள திறமையான வல்லுனர்களையும், தரமான நிறுவனங்களையும் ஈடு படுத்தியதநூடாக Himalaya Creations (Pvt) Ltd மிகத்தரமான படைப்பினை வழங்கியிருக...

கணக்கு வாத்தியார்

"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?" "ஒன்றுமில்லை சார்" "காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?" ........... "எனக்கிப்ப காரணம் தெரியோணும். அதுவரைக்கும் கிளாஸ் நடக்காது." ........... "நான் இத்தினை தரம் கேக்கிறன். ஒரு மாஸ்டர் எண்டு மரியாதையில்லாமல்.. எழும்பும் எழும்பும்.. எழும்பி வெளிய போய் நில்லும்." அவர் இப்போது கோபத்தின் உச்சியிலிருந்தார். ........... "இந்தப் பிள்ளை வெளிய போகாமல் நான் கிளாஸ் எடுக்க மாட்டன்." அதுவரை பேசாதிருந்தவள், கொப்பியை அடித்து மூடிவிட்டு எழுந்தாள். முன்னிருந்த நண்பியை மீண்டுமொருமுறை பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே தலையைக் குனிந்தபடி கொப்பியில் இல்லாத ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்தனர். கோபத்தில் இரத்தம் கொதித்தது. கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், நிற்காமல் வேகமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.  வகுப்பின் முதல் நாள் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன. உயர் தரத்தில் என்ன படிப்பது என்று வீட்டில் அம்மாவும் அப்பாவும் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க அவள்...