முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

Behind the "BLIND LOVE" (குருட்டுக் காதலின் பின்னால் )

நேற்று முழுவதும் ஏனோ தூக்கம் வரவில்லை. ஹிமாலயா கிரியேசன்ஸ் இனது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்கள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையிலும் எதுவோ ஒன்று மனதுக்குள்ளிருந்து குடைந்து கொண்டிருந்தது.

வெற்றியடைந்ததர்க்கான காரணங்களைவிட தோல்வியடந்ததர்க்கான காரணங்களை அறிந்து வைத்திருப்பது மீண்டும் அந்தப் பிழையை விடாமல் அவதானமாயிருக்க உதவிசெய்யும் அல்லவா? அந்த வகையில் ஹிமாலயாவின் முதலாவது சொந்தப் படைப்பான "Blind Love" அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டினைப் பெற்றிருந்தும் ஏனோ நாம் நினைத்தளவுக்கு பெரும்பாலோனோரை இன்னும் சென்றடையவில்லை.


அதற்க்கு முக்கியமாய் நமது Marketing அணுகுமுறை சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்காக SunTV போல மூச்சுக்கு முந்நூறு தடவை விளம்பரம் போட முடியாது. குறைந்தது FB/YouTubeலயாவது pay பண்ணி promote பண்ணலாம். ஆனால் அவை எல்லாவற்றிட்க்கும் மேல் உண்மையான திறமைக்கு (இருந்தால்) கிடைக்கும் அங்கீகாரத்தினை முதலில் அறிந்துகொள்ள விரும்பினோம். அந்தவகையில் மைந்தன் சிவா, கவிஞர் அஸ்மின் போன்றவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவை. 


இன்னுமோர் ரசிகர் இவ்வாறு எழுதியிருந்தார்.

" Nobody in the world could believe that this Album was produced, directed, & performed with the native men from Jaffna, a war torn area for more than two decades without electricity, medicines, poor rations when Dhal was treated as a delicious cooking itinerary.

We are really amazed to see an Album like this superior quality produced from Jaffna as We are proud to be a native man from this wonderful land.

The hard works of the team is always commendable and the credit goes to himalaya creations and the parents of these youngsters. "

இபோதெல்லாம் நாம் எழுதிக் கொடுப்பது தான் பல இடங்களில் செய்தியாக்கப்படுகிறது. நடுநிலையான விமர்சனனகளை முன்வைப்பதற்கு பதிவர்களையும் ரசிகர்களையும் தவிர யாரும் முன்வருவதில்லை. அதனால் தான் JK யைக் கூட ஒரு விமர்சனம் எழுதும்படி கேட்டிருந்தேன். ஆனாலும் படலையில் போடுமளவுக்குக் கூட இதன் தரம் பத்தவில்லை போலும். சகோதர மொழிப் பதிவர் ஒருவர் மட்டும் தான் தனது யாழ் பயணம் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார். 


இத்தகைய சூழ்நிலையில் தான் தாமரையில் இன்று காலையில் படித்த ஓர் விமர்சனம் மனதை சற்றே நெகிழ வைத்துவிட்டது.

தவிர பல தளங்களிலும் இவ்வாறு போஸ்ட் பண்ணியிருந்தார்கள்.

‎"Blind Love - Addarkaaddil Thaane" is a new Tamil song that has been put together by a talented group based in Jaffna, Sri Lanka.

We love how they have managed to put together a moving visual for the song, even though they had access to limited resources! Watch it here: http://thamarai.com/news-details/450885450/blind-love-adarkaaddil-thaane-music-video.html



இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

யாழில் இருந்து தரமான படைப்பொன்று வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்கக் கூடியவாறு எப்படி செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது இருட்டில் spotlightsஐ மட்டுமே பயன்படுத்தி எடுக்கும் வகையில் ஷூட்டிங் ஸ்கிரிப்ட்ஐ ஒரே இரவில் தயார் செய்த நிஷாகரன் முதல் கொண்டு, Jesus இனது ரம்யமான மெலடிக்கு ஆடியோ மிக்ஷிங்க், mastering மூலம் மெருகூட்டிய சுகன்யன், மற்றும் சிறு சிறு ஒலி/ஒளி மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கணித்து இந்த படைப்பு நேர்த்தியுடன் முழுமை பெற முக்கிய காரணிகளில் ஒன்றாகவிருந்த எடிட்டர் துசிகரன், மெட்டுக்கேற்றவாறு கருத்து மாறாமல் பாட்டெழுதுவதிலுள்ள சிரமத்தை எனக்கு உணரவைத்த பாடலாசிரியர் துவாரகன் மற்றும் பல மொழியியல் வல்லுனர்களே கைவிட்ட நிலையில் தனது தொலைதூரப் பயணத்தின் நடுவிலும் ஒருசில மணித்துளிகள் எமக்காய் ஒதுக்கி அழகான முறையில் மொழிபெயர்ப்பைச் செய்துதவிய Sam Hensman, இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குள் இந்தப் பாடலின் காட்ச்சியமைப்பை எடுத்து முடிப்பதற்கு கூடநின்று உதவிய பிருந்தாவன், பிரணவன், Justin Jocks, Tony Thomson, James Ushan, Makeup Artist Andrew  மற்றும் நடனவமைப்பில் உதவிய வாகீசன், Himalaya Group of Dance வரை அனைவரினதும் இரவு பகல் பாராத கடுமையான உழைப்பில் வெளிவந்த ஒரு படைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.



இந்த சமயத்தில் நலன்விரும்பி நண்பர் ஒருவர் இந்தப் பாடலை தென்னிந்தியத் திரையுலகின் கவனத்திற்க்கு எடுத்துச் செல்வதற்காய் மேற்க்கொண்ட முயற்ச்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது. உங்கள் குரல் ச்சூ ச்வீட்.. உங்கட கூந்தல் ரொம்ப அழகாயிருக்கு.. என்று தம்மைப் பற்றி ரசிகர்கள் கூறும் இன்னோரன்ன செய்திகளை தேடிப்பிடித்து re-tweet செய்யும், இலங்கைத்தமிழர்கள் எமது கூடப்பிறந்த/பிறக்காத சகோதரர்கள் என்று மூச்சுக்கு ஆயிரம் முறை சொல்பவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களை மட்டுமே நம்பி படமெடுப்பவர்கள் என்று யாரினது கண்ணிலும் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடவில்லை. தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் கிரீஸ் மட்டுமே re-tweet பண்ணியிருந்தார். 

இதைச் சொன்னபோது அனந்தன் கேட்டுது "ஏன் அவர்களின் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?" என்று. உண்மைதான். இன்னும் சொல்லப் போனால் ஓரிரு வருடங்களில் நாம் வெளியிடவிருக்கும் திரைப்படத்திற்கான முன்னோட்டம் தான் இந்தப் பாடல். அதனால் இதற்க்கான வரவேற்ப்பை/விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள முடியும்.

இன்று வரைக்குமே ஈழத்திலிருந்து வரும் படைப்பு என்றால் அது சார்ந்த வலிகளையும் பதிவுசெய்தே ஆகவேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பு ஒருசாரர் மத்தியில் இன்னும் அழுத்தமாக குடிகொண்டிருக்கு. அதையெல்லாம் தாண்டிப்போய் ஒரு சிறந்த தரமான படைப்பைக் கொடுப்பதென்பது சாதாரணமான காரியமில்லை. 

தவிர, தனது பேருக்காகவும் புகழுக்காகவும் அல்லது அதீத கொள்கைப் பற்றிற்காவும் படமேடுப்போரைத்தவிர வேறு எந்தவொரு தயாரிப்பாளரும் இலாபத்தினை நோக்கமாகக் கொண்டே களத்தில் இறங்குவார்கள். அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் காட்டவேண்டியது நமது கடமை என்பது மட்டுமல்ல. இன்று பார்க்குமிடமெல்லாம் கண்களில் கனவுகளுடனும் கைகளில் காமேராவுடனும் வீதிகளில் திரிபவர்களின் எதிர்காலமும் கூட.

அவர்களுக்கு நீங்க ஏதாவது செய்ய விரும்பினால் பணத்தை வெறுமனே வாரியிறைப்பதை விட்டுவிட்டு அவர்களின் படைப்புகளுக்கு தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுங்கள். பிடிக்கவில்லையா? நாக்கைப் பிடுங்கிரமாதிரி நாலு கேள்வி கேளுங்கள். ஒரு ஆரோக்கியமான சினிமா நாளை யாழில் வளர இருப்பதும் / முளையிலேயே கருக்கப் படுவதும் / தவறான முன்னுதாரணங்களை நாளைய தலைமுறை ஏற்று வழிநடக்க இருப்பதும் உங்களது அனைவரினதும் கைகளிலே தான் இருக்கிறது.





கருத்துகள்

SR. Thusikaran இவ்வாறு கூறியுள்ளார்…
எங்களுடைய பல கனவுகள் குருட்டுக்காதலாகவே இருக்கிறது...
எப்போது எமது திறமைக்கு அங்கிகாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் திருப்தி....
எமது படைப்பு என்று மார்தட்டி சொல்லுவதில் மட்டற்ற மகிழ்ச்சி இப்போதுதான்...
நன்றி அக்கா....

பிரபலமான இடுகைகள்