இடுகைகள்

எம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்

படம்
  உங்கள் பார்வைக்கு " எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. 'அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை" என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.  'ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?" என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!" என அண்ணன் சொன்ன உடனேயே, 'நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!" என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி அய்யா பேசுவது? "   - சீமான் : Oneindia Tamil "இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்"

Jaffna, The next silicon valley - நாளை உங்கள் நனவாவது காணீர்!

படம்
Click here to Vote for this logo on FB மணல்மீது மாளிகையமைக்க அலைவந்து அள்ளியதென்று - களி மண்ணெடுத்து நன் நீர்தனையூற்றி அரண் செய்கிறோம் நாள்பட நாலுபேர் பார்த்து நெற்றித் தோல் நெரிபட கோட்டை கட்டும் நோக்கில் - மனக் கோட்டையிதுவோவென யாது செப்பினும் நின்மனம் கலங் காது வழிநின்று ஞாலம் இரு பொழுதும் ஆதவன் சாயாது விழிமூடாது வளர்த்திட "Jaffna, The next silicon valley" இதுவெங்கள் கனவு நாளை உங்கள் நனவாவது காணீர்! "When the world insists you to build something, you must insist on doing it your own way!" Are you getting it? Yes.. people will call it "Yarl IT HUB!"

துரோகிகளும் தூங்கிப்போனோரும்

படம்
ஆளாளுக்கு என்னமோ காகிதக்கப்பல் விடுறதுபோல ஒவ்வொரு கதை (சத்தியமா கப்டனை ச் சொல்லவில்லை) சொல்லுறாங்கள். அதால நானும் இண்டைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேணும். நித்திரை வருமாப்போல இருப்பவர்கள் தயவுசெய்து இப்பவே உங்கடை கனவுதேசத்துக்கு ஓடிடுங்கோ. நம்ம கனவுதேசம் கொஞ்சம் Terrorஆ இருக்கப் போகுது. யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஏசுநாதரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். வெளியே அவரின் பரமசீடன் ஒருவன் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அபோது அருகிலிருந்தவன் கேட்கிறான், "உனக்கு அவரைத் தெரியுமா?" "இல்லை." சிறிது நேரம் செல்கிறது. "உன்னைப் பார்த்தால் அவர்களிலொருவன் போலவே இருக்கிறது." "சத்தியமா, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது." விடிவதற்கு இன்னும் சிலநிமிடங்களே இருக்கிறது. "இல்லை. இவன் பொய் சொல்கிறான். பிடித்து விசாரியுங்கள்." இப்போது அவனுக்கு பயம் தொறிக்கொண்டது. "ஐயோ. என்னை விட்டிடுங்கோ. நான் ஒரு அப்பாவி." எழுந்து விரைகிறான். சேவல் கூவுகிறது. "நாளை விடிவதற்குள் மூன்றுமுறை என்னைத் தெரியாத...

ஈழமும் கவிராயர்களும்

படம்
"கவிராயர் எனப்படுப்படுபவர் யாரெனில், தமிழ் மொழியில் கவி இயற்றவல்ல தமிழ் அறிஞர் ஆவார்." என்று விக்கி சொல்லுது. அப்பிடி என்னத்தைத் தான் எழுதுவாங்களோ எண்டு பாத்தா முதலில் வந்தது கலிங்கத்துப்பரணி .. வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை அவர்களின் விளக்கக் குறிப்புரையுடன் படித்தபோது,  கேழல் மேழிகலை யாளி வீணைசிலை   கெண்டை என்றினைய பல்கொடி தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த   னிப் பு லிக்கொடி த ழைக்கவே. யம்மா.. ஒவ்வொரு வார்த்தையும் வாசிக்கும் போது சும்மா உடம்பெல்லாம் சிலிர்க்குது.. எப்பிடித்தான் இப்படியெல்லாம் எழுதுறாங்களோ? சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ? ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கி ற துக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா? வந்தார் எங்கள் வைரமுத்து. ' சுதந்திரம் ' என்னவென்று சொல்றார் பாருங்கோ.. எழுத மை வேண்டும் வானத்தின் நீலத்தில் சில குடங்கள் கேட்டேன் மசியவில்லை  ஒ.. இவையெல்லாம் இன்னும் மை விட்டுத்தான் எழுதிட்டிருக்கினம் போல கிடக்குது. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வ...

இளையராஜாவின் சிவபுராணம்

படம்
என்ன திடீரென்று ஒரே பக்தி மயமா இருக்கே என்று நினைக்காதேங்கோ.. நாமெல்லாம் சுத்த(?) சைவாள் பரம்பரையாக்கும். இதற்காகவே அப்பா தன்ரை சின்ன வயசிலையே அசைவம் துறந்துவிட, அம்மாவுக்கு  எண்டை சின்னவயசிலைதான் திடீர் ஞானம்வந்து அதைத்தொடர.. நம்ம பாடு திண்டாடம்.. எண்டெல்லாம் சொல்லமுடியாது. ஏனென்டா நமக்கு எதோ பசிச்சா கிடைக்கிறதை தள்ளும் குணம்தான்.. அது சைவமெண்டா என்ன அசைவமெண்டா என்ன. ஆனா இனிக்கு சைவம் தான் எண்டு முடிவு பன்னிட்டனேண்டா முன்னால மூக்குப் பிடிக்க அசைவம் மணத்தாலும் தொடமாட்டன். மற்றபடி மூண்டு நேரமும் சாப்பாடுத்தட்டை நீட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து தப்புவது எப்படி என்ற கவலைதான் அதிகம். அப்பா வேற, "ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் எத்தினைசனம் கிடந்து சாகுது. உனக்கு நாங்கள் இப்பிடி கெஞ்சிக் கெஞ்சி சாப்பிட வைக்க வேண்டிக் கிடக்குது" எண்டு அன்னிலையிருந்து இன்னிவரை ஒரே புராணம். என்ன முந்தி கடிதத்திலை, இப்ப ஈமெயில்ல...  டெக்னாலஜி என்னமா முன்னேறிட்டுது பாருங்க.. சே.. திருவாசகத்தைப் பற்றித் தொடங்கிட்டு சாப்பாட்டைப் பத்திக் கதைச்சிட்டிருக்கிரன் பாருங்கோ.. இ...

Swan on the River Avon

படம்
இரெண்டன்னம் இணைபிரியாது வாழுமே ஒன்று சீவனாம் மற்றையது சிவனாம் சீவன் பேதலிக்குமே அலைந்தோடுமே சிவனோ அசையாது பார்த்திருக்குமே Swan on the River Avon

நந்தகுமார் : அறிமுகம்

மூன்றாவதுமுறை தொலைபேசி சிணுங்க  மூட்டே இல்லாமல் புரண்டு படுத்தான்  அவள் விட்டபாடில்லை   "ஹலோ.. என்ன?" "நீ இப்ப இங்கை வாரியா.. இல்லையா?" "எதுக்கெண்டு சொல்லு" "ஒ.. சொன்னாத்தான் வருவியா?" இவளோடை வாதிட்டு  எதுவும் ஆகிறதில்லை "டே.. நான் கொஞ்சம் உதிலை போட்டு வாரன்.." "என்னடா.. நித்தியாவே..?" கேட்டது குமார் "ஓமடா.. இண்டைக்கு என்னத்தை வைச்சிருக்கிறாளோ சண்டை பிடிக்கிறத்துக்கு.." சலித்துக்கொண்டு  சட்டையைப் போட்டுக்கொண்டு  வெளிக்கிட்டான்  நந்து  அவர்கள் காதலில்  தொண்ணூறாவதுநாள் தாண்டி  பலமாதங்களாகியிருந்தன.. *****  தொடரும்..