இடுகைகள்

யோ. அனந்தன் : பாகம் மூன்று : அம்பி குரூப்

படம்
"டேய்.. இங்க எழும்பி வாடா.." "என்ன சார்..?" சடார் படார் எண்டு கை, கால், தோள், தலை எண்டு கண்மண் தெரியாமல் அடிவிழுகிறது. "இவருக்கு.. இப்ப.. ஏன்.. அடிவிழுது.. எண்டால்..." பூசையை நிப்பாட்டாது.. "நீ என்ன பெரிய ரௌடியாடா..? " "இல்லை சார்.. நீங்க தான் அப்பிடி சொல்லுறியள்." "என்னையே எதிர்த்து கதைக்கிறியா..?" குருவானவரின் பூசை இப்போது அதி தீவிரமடைகிறது.. "நீ இப்ப என்ன செய்யிறாய் எண்டால் உண்ட அப்பாவையும் அம்மாவையும் சைக்கிள் ரிக்சாவில பின்னால ஏத்திக்கொண்டு 'சுன்னாகத்திலையே நான் தான் பெரிய ரவுடி' எண்டு கத்திக்கொண்டு போ.. " அடி இன்னும் நிற்கவில்லை இருந்தும், அந்த இக்கட்டான சூழலிலும் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு "நீங்க பெரிய ரவுடி எண்டு சொல்றத்துக்கு ஏன் சார் என்ர அம்மா அப்பாவை ஏத்திக்கொண்டு போகணும்?" ஒரு கணம் திகைத்த குருவானவர், உடனே சுதாகரித்துக்கொண்டு நாலாவது சாம பூசையை தொடங்குமுன் நம்மாள் எஸ்கேப். இது நடந்தது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரி, ஆண்டு ஆறு வகு...

குற்றவுணர்வு

படம்
கடந்த காலங்களின் நினைவுகளை  அழித்துவிட்டதாய் அவை தந்த ரணங்களை ஆற்றிவிட்டதாய்  ஆறுதல்கொள்ளும் ஒவ்வொருமுறையும்  ஏதோவோர் புகைப்படம்..  நினைவுகளை கிளறி விடலாம்  ரணங்களை மீண்டும் கிண்டிப் பார்க்கலாம்  ஏன் எதற்கு என்று அறியாத வலிகள்  ஏதோவோர் குற்றவுணர்வு  பாடசாலை விட்டுவரும் நேரங்களில் மிதிவண்டியில் லாவகமாக காவல்துறைக்குப் போக்குக்காட்டி  அருகருகே வரும் சில நிமிடங்களில்  பலவற்றை பேசியிருக்கிறோம்  எதுவும் நினைவிலில்லை  ஒன்றைத் தவிர.. போவது பற்றி விவாதிக்கையில்  உன் விருப்பம் உரைக்காமலே  நீ போய்விட்டாய்   நினைத்ததை முடிக்காமல்  நான் மட்டும் உயிருடன் இருக்கிறேன் நம் புகைப்படத்தைப் பார்த்தபடி  அழக்கூடத் தெம்பில்லாமல்..

புட்டும் தேங்காய்ப்பூவும்

படம்
எரியுற நெருப்பில எண்ணைய வாக்கிராப்போல இது தேவையா என்று ஒருக்கா தோணிச்சு. ஆனால் தற்போது இலங்கையின் பலபாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மிதவாத சிங்கள பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து ஏன் இன்னும் பலர் மௌனமாகவோ அல்லது அடக்கி வாசிக்கிறார்கள் என்றோ பலருக்கு தோன்றாமலில்லை. இன்னும் சிலரோ அதற்க்கும் மேலே போய், புட்டும் தேங்காய்ப்பூவும் போல இருக்கும் எமதருமை சகோதரர்களுக்கு  இது நல்லா வேணும் என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். எனது இந்தப் பதிவு கூட மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும், ஆனால் ஏதோ என்னால் முடிந்தவரை இரு தரப்பு மனோபாவங்களையும் எனக்குத் தெரிந்தளவில் சிறிதே அலச முயன்றிருக்கிறேன். கரணம் தப்பினால் மரணம் தான். சமீபத்தில் கூட ஒரு பிரபல பதிவர் இவ்வாறு முயன்று பல அவதூறுகளை வாங்கிக் கட்டியிருந்தார். அவரது நிறுவனமும் சம்பந்தமேயில்லாம தூற்றப்பட்டது. இருந்தும் விதி யாரை விட்டது..? பார்க்கலாம். மே 2009 நடுப்பகுதி. இறுதிக்கட்டப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். இணையப் போராளிகள் தீவிரமாக முகப்புத்தகத்த...

காதலின் தற்கொலைகள்

"உங்கடை மகள் என்ன.. யாரோ ஒரு ....யப் பெடியனைக் காதலிக்குதாமே?" கேட்டதிலிருந்து அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அக்காவின் மகளின் காதல் (கலப்புத்) திருமணத்துக்குப் போகாதிருந்த காரணம் இன்று கண்முன்பு பூதாகரமாகி நிற்கிறது. இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை. "என்னப்பா இது சரிவருமே? உன்னட்டை ஏதும் இதப் பற்றி சொல்லியிருக்கிறாளே?" "எனக்கு ஒண்டும் தெரியாது. ஏதோ அவளின்டை பழைய சிநேகிதியிண்டை ஒன்றுவிட்ட அண்ணனோ மச்சான்காரனோ எண்டு சொன்னவள். வேறையொண்டும் சொல்லேலை. நீங்களே அவளோடை கதையுங்கோ.." இரவிரவா செல்லடிச்சா கூட எழும்பாதவளுக்கு யாரும் ரகசியம் கதைத்தால் மட்டும் தூக்கம் கலைந்துவிடும். அப்படி எழுந்தவள் கதை தன்னைப் பற்றித் தான் என்றுணர்ந்ததும் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கினாள். "யார் அந்த ...... ஊர்ப் பெட்டை தானே? அவை ...யர் எண்டு நீ தானே சொன்னது.." "எண்டுதான் நினைக்கிறன். நீங்களே அவளோடை கதையுங்கோ.." அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இத்தனை வருடங்களில் எத்தனை காதல்களை / காதல் என நம்பப் பட்டவைகள...

தமிழ் இனி.. 2

படம்
எனது  தமிழ் இனி..  பதிவுக்கு பலர் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தாலும் சில  காரசாரமான பதில்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. பொதுவாகவே தனிப்பட்ட பாராட்டுதல்களை இங்கே தனித்தனியே போட்டு நன்றி சொல்வது எனது வழக்கமல்ல. அதனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவாகவே நன்றியைக் கூறிக்கொண்டு, மற்றைய கருத்துக்களுக்குச் செல்வோம். முதலாவது கருத்து : கட்டுரையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் ஜெயமோகன் மீது எதிர்வினைகள். ஜெயமோகன் தமிழை அழிக்கும் நோக்குடனோ சிதைக்கும் நோக்குடனோ எதையும் கூறவில்லை. அவர் சொன்னது இதுதான் “ஒரே எழுத்துருவாக ஆக்கினால் அடுத்த தலைமுறை அதை எளிதில் வாசிக்கும்” என்று மட்டும்தான். ஆங்கில எழுத்துருவில் தமிழை வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்றோ, இப்போதே நூல்களை அப்படி வெளியிடமுடியும் என்றோ அவர் சொல்லவில்லை. ஜெயமோகன் அவருக்கு கிடைத்த எதிர்வினைக்கு சொன்ன விளக்கம் ஒரு பகுதி //“என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது ...

தமிழ் இனி..

படம்
சில தினங்களுக்கு முன்னர் நண்பியொருவர்  ஜனனி தமிழில் சரளமாக (நம்மளை மாதிரி தத்தக்க பித்தக்க தான்..) உரையாடுவதைப் பார்த்துவிட்டு அவர்களின் மகள் தமிழில் கதைக்கிறாளில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். அவர்களுக்கு நாம் தமிழில் கதைத்தால் விளங்கும். ஆனால் பதில் ஆங்கிலத்தில் தான் வரும். இன்றைய தமிழ் குழந்தைகளின் நிலை இதுதான். "இதற்க்கெல்லாம் போய் எதற்க்காய்க் கவலைப்பட வேண்டும்? வளர வளர சரியாயிடும்" என்று பாட்டி சொன்னார். "இல்லை. இப்ப இருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறகு எப்பவுமே  தமிழில் கதைக்க முயற்ச்சிக்க மாட்டாள்" என்றார் தந்தை. இவையெல்லாமே ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் நாம் எப்படி தமிழில் கதைக்கத் தொடங்கினோம்? எமது பெற்றோர் எந்த மொழியில் நம்முடன் கதைத்தார்களோ அதையே நாமும் பழகிக்கொண்டோம். யாரும் இதுதான் உனது தாய் மொழி, அதில் தான் பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்று எமக்கு மூன்று நான்கு வயதில் சொல்லித்தந்திருப்பார்களா என்றால் இல்லை. அப்போது ஆங்கிலத்தில் அடிப்படைக்கல்வி இல்லை என்பது ஒரு வாதம். ஆங்கிலத...

மீண்டும் விதையாய் ...

படம்
மனிதர்களைத் தொலைத்துவிட்டு மரங்களை நடுகின்றோம் அவைதான் எத்தனை அடிகளையும் தாங்குமே பூக்கும் பருவத்தில் முகர்ந்து பார்ப்பர் காய்ந்த மாடு கம்பில் விழுவது போல் உரசியும் பார்ப்பர் உணர்ச்சிகள் மீறினால் புணர்ந்துவிட்டு புயல் தான் வந்து சிதைத்ததென்று கூசாது பொய்யுரைப்பர் கனிதரும் வயதில் கைதொட விடாவிடின் பசுமைப் புரட்சிச் சட்டத்தின் கீழ் கைது செய்வர் புழுக்கள் உள்நுழையும் பூச்சிகள் சுற்றி மொய்க்கும் அணில் கூட வந்து கடித்துப் பார்க்கும் உன் அழுகை யாருக்கும் கேட்காது காய்த்த மரம்தான் கல்லடிபடும் காய்த்து உன்குற்றம் என்று ஐநாவைக் கூட ஏமாற்றுவர் கமேரூன் வந்து பார்ப்பார் கௌரவம் என நீ நினைப்பாய் கல்லைத் தேடி இவர்கள் கண்கள் செல்லும் மீண்டும் விதையாய் விழுவாய் இந்த மண்ணில் யார் கரங்களில் கதறி அழுவதற்கோ?