இடுகைகள்

கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு

படம்
On Nethra TV On Vasantham TV On IBC Tamil

மௌனங்கள் கலைகின்றன

படம்
நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக 'நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்' ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வினை ஆர்ப்பாட்டம் என்பதை விட கவனயீர்ப்பு அல்லது நினைவுகூரல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய தினம்.. நேரம் ஒரு மூன்று மணியிருக்கும் அப்போது தான் எனது கல்லூரியின் பழைய டைரக்டர் செல்லவிருக்கும் ஒரு நிகழ்வு சம்பந்தமாக FBயில் அறிகிறேன். அவர் ஒரு சிங்களவர் எனினும், தமிழர் நலனில் அதிக அக்கறையுள்ளவர். அரசியல் நிலைகள் என்பதினைத் தவிர்த்துப் பார்த்தால் 'ரோசி சேனநாயக' அவர்கள் என்னால் என்றுமே வியந்து பார்க்கப்படும் ஒருவர். அவரது ஆளுமை தன்னம்பிக்கை திடசங்கர்ல்பம் ஒவ்வோர் பெண்களுக்குமே இருந்துவிட்டால் நிச்சயமாக நாம் அரசியலில் முப்பது வீதமென்ன ஐம்பது வீத பிரதிநிதிதுவத்தினை கூட பெற்றுவிட முடியும் என்பது திண்ணம். நிற்க, இந்நிகழ்வு சம்பந்தமாக மேலதிக விபரங்களை தமிழ்வின் மூலம் அறிந்து கொண்டதன் பின்னர் புறப்படலாம் என்று முடிவெடுத்து வெளிக்கிடும்போது அம்மா வந்து கேட்டார் எங்கே போகிறேன் என்று. வழமையாய் வீட்டில் யா...

எல்லாமே பொய் என்று சொல்வாயா?

படம்
"அப்போ இனிமே பேசிறதில்லை எண்டு முடிவு பண்ணீட்டிங்க அப்படித்தானே?" அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவள் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று முன்புதான் போன் பண்ணியபோது ஏதோ நண்பனின் திருமணத்தில் இருப்பதாய் சொல்லியிருந்தான். இரவிரவாய் மணிக்கணக்கில் இருந்து சட் பண்ணிய நாட்கள் வெறும் கனவுபோல வந்து போனது. அவன் எதற்காய் அவளிடமிருந்து விலகிட நினைக்கிறான் என்று புரியவில்லை. என்னதான் அவர்கள் "No Emotions.. No Relationship.." என்று சொல்லிக்கொண்டாலுமே அவள் தன்னைக் காதலிப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அன்பில்லாமல் உடம்பை மட்டும் கொடுப்பதற்கு அவள் தெருவோர விபச்சாரியா என்ன..? சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவன் ஆன்லைனுக்கு வந்துவிட்டான். மனம் துள்ளியது. ஆனால் அடுத்த கணமே அவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற பயம் சிறிதே தொற்றிக்கொண்டது. முன்புபோல் இல்லாவிடினும் அப்பப்போ பேசிச்செல்லும் சில வார்த்தைகளைக் கூட நிறுத்திவிடுவானோ என்று பயமாக இருந்தது. 'பேசாவிட்டால் போகட்டும் ஆனால் இன்று ஒரு முடிவ...

Y.Ananthan (Quad CCIE #28365)

படம்
உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம்.  இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு மங்கள நாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவதாக பத்தாவது முறையாக முடிவெடுத்திருந்தனர். ஆனாலும் முந்தைய ஒன்பது முடிவுகளின் பின்னர் போல் இல்லாமல் இம்முறை கம்பஸ் முடிந்து விட்ட காரணத்தினால் இனிமேல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அரிது என்பதனால் சற்று அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் அவளுக்கு என்ன தோன்றியதோ திடீரென்று கேட்டாள். அவனின் வாழ்க்கையின் கனவு/லட்சியம் என்னன்னு.. இதற்க்கு முன்பும் பல தடவை கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஒவ்வோர் முறையும் ஒவ்வோர் பதிலை சொல்லியிருக்கிறான். ஆனால் எந்தப் பதிலும் அவளுக்கு திருப்பதி தரவில்லை. அதாவது அவனது ஆழ்மனது ஆசையாக அவளுக்குப் படவில்லை. ஏதோ வாழ்க்கையை சுமூகமாய் ஒட்டி கரை சேர்ப்பதற்குத் தேவையான வரையறைக்குள் மட்டுப்பட்டிருந்தது. இம்முறை அவள் இரண்டாவது, மூன்றாவது முறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்காமல் அசிரத்தையாக ஏதோ ஆழ்ந்த யோசனையில்...

மகளிர் தினம்

படம்
மகளிர் தினமாம் இன்று. வாழ்த்துக்கள் சொல்கின்றனர்.. ஆமா எதுக்கு..? பெண்ணியம் பேசும் பெண்களுடனும் சரி அடக்குமுறை பேசும் ஆண்களுடனும் சரி அதிகம் பேசுவதில்லை நான் எனவே அவர்கள் இதனை படிக்காதீர் தயவுசெய்து ஒருமுறை மிகவும் பொறுப்பான வேலையில் இருந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து "அழகான பெண்களிடம் அறிவு குறைவாக இருக்குமாமே உண்மையா?" அப்பிடின்னு கேட்டார். அவர் வயதில் என்னை விட மிகவும் பெரியவர். ஆனால் மிகவும் சாதாரண வேலையிலிருந்தார். அவரின் வயதிற்கு மதிப்புக் கொடுத்து நான் எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து "நீங்க ரொம்பவே அழகாக இருக்கிறீங்க" என்றார். அன்று வந்த கோபத்தில் அவரை துவைத்து எடுத்துவிட்டேன். பிறகு யோசித்தேன், ஒரு பெண்ணின் அறிவை எடைபோடத் தெரியாத அல்லது பொறாமைப்படுகின்ற மற்றும் புற அழகைப் பார்த்து மட்டுமே மயங்குகின்ற ஒரு முட்டாளிடம் போய் இத்தனை நேரம் மினக்கட்டோமே என்று.. இவ்வாறு இத்தனை வருடங்களில் பல சம்பவங்களை சொல்லலாம். அதற்காய் நான் ஒரு பெரிய மாமேதை, அறிவாளி அப்பிடின்லாம் சொல்லவரலை. ஆனால் என்னுடன் பேசுபவர்கள், முக்கியமாக ஆண்கள், புற ...

எண்ணெய் காவிகள்

படம்
பதினெட்டடி ஆழக்கிணறு பளிங்கு போன்ற நீர் பாதிக்கும் மேல் நிறைந்திருக்கும் அமிர்தம் இதுவோ என வியப்பர் யார் கண்பட்டதோ..? அன்றொரு நாள் தாகம் என்று வந்தவர்க்கு குடத்தில் நீர் கொடுத்தால் நம்ப மறுத்து செவ்விளனி நீரென்று வாதிடுகையில் கூட்டிச் சென்று துலா பிடித்து நீரள்ளி குடிக்கக் கொடுத்தோம் அதிசயித்தவர் காரணம் கேட்கையில் செல்லும் வழியில் எங்காவது நன்னீர்க் கிணறு இருப்பின் இரவோடு இரவாய் தூக்கிவந்துவிடுவோம் என்று நக்கலாய் சொன்னதை நம்பிச் சென்றவர் எம்மைப் பின் 'கிணறு காவிகள்' ஆக்கி விட்டார்.. அவர் இன்று வந்திருந்தால் பூரித்துப் போயிருப்பார் மத்திய கிழக்கிலிருந்து தூக்கிவந்துவிட்டதாய்.. Event Page:  https://www.facebook.com/events/756672027744407 Click here for the Full news on this issue  நம் ஊர்.. நம் கிணறு.. ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினைக்காக ஒன்றையும் செய்ய முடியவில்லை.. இது சம்பந்தமா ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தினை பல மாதங்களின் முன்பு முன்வைத்தேன். இருந்தும் சில பல அரசியல் காரணங்களால் கைகூடவில்...

பன்னாடைகள்

படம்
நேற்று முழுக்க முகப்புத்தகத்தில பன்னாடை.. பன்னாடை அப்பிடின்னு திட்டிடிருக்கிரன்களே? பன்னாடை அப்பிடின்னா என்ன? இது பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும். அருகிலுள்ள படத்தினைக் காண்க. அரிதட்டு போலவே இதுவும் கழிவுகளை வடிகட்ட பயன்படக்கூடிய மிகவும் உபயோகமான ஒரு பொருளாகும். என்ன ஒன்று நல்லதை விட்டுவிட்டு கழிவுகளை வடிகட்டி வெளியே வைத்திருப்பதனால், அதன் பயன்பாடுகளை மறந்த நமது நன்றி கெட்ட சமூகம் அதனை முட்டாள் என்கிறது.  சரி இதெல்லாம் இப்ப எதுக்கு எண்டு கேட்டீங்கன்னா முதல்ல கீழே தரப்பட்டிருக்கும் எனது நேற்றைய பதிவை படிங்க.  நாங்க தலைவர்ட பர்த்டேய கேக் வெட்டி கொண்டாட இருக்கோம். என்ன சொல்றீங்க? அது போன கிழமையே முடிஞ்சுதே? இல்லை பன்னிரெண்டாம் திகதி லிங்கா ரிலீஸ் அன்னிக்கே தியேட்டர்ல கொண்டாட arrange பண்ணியிருக்கிறாங்க.. ஒ அப்பிடியா..  தலைவர் என்பதன் அர்த்தம் எவ்வாறு அடுத்த தலைமுறையிடமிருந்து எப்படி படிப்படியாக அகற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதனை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது எமது தலைமுறை. அதற்க...