இடுகைகள்

மகளிர் தினம்

படம்
மகளிர் தினமாம் இன்று. வாழ்த்துக்கள் சொல்கின்றனர்.. ஆமா எதுக்கு..? பெண்ணியம் பேசும் பெண்களுடனும் சரி அடக்குமுறை பேசும் ஆண்களுடனும் சரி அதிகம் பேசுவதில்லை நான் எனவே அவர்கள் இதனை படிக்காதீர் தயவுசெய்து ஒருமுறை மிகவும் பொறுப்பான வேலையில் இருந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து "அழகான பெண்களிடம் அறிவு குறைவாக இருக்குமாமே உண்மையா?" அப்பிடின்னு கேட்டார். அவர் வயதில் என்னை விட மிகவும் பெரியவர். ஆனால் மிகவும் சாதாரண வேலையிலிருந்தார். அவரின் வயதிற்கு மதிப்புக் கொடுத்து நான் எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து "நீங்க ரொம்பவே அழகாக இருக்கிறீங்க" என்றார். அன்று வந்த கோபத்தில் அவரை துவைத்து எடுத்துவிட்டேன். பிறகு யோசித்தேன், ஒரு பெண்ணின் அறிவை எடைபோடத் தெரியாத அல்லது பொறாமைப்படுகின்ற மற்றும் புற அழகைப் பார்த்து மட்டுமே மயங்குகின்ற ஒரு முட்டாளிடம் போய் இத்தனை நேரம் மினக்கட்டோமே என்று.. இவ்வாறு இத்தனை வருடங்களில் பல சம்பவங்களை சொல்லலாம். அதற்காய் நான் ஒரு பெரிய மாமேதை, அறிவாளி அப்பிடின்லாம் சொல்லவரலை. ஆனால் என்னுடன் பேசுபவர்கள், முக்கியமாக ஆண்கள், புற ...

எண்ணெய் காவிகள்

படம்
பதினெட்டடி ஆழக்கிணறு பளிங்கு போன்ற நீர் பாதிக்கும் மேல் நிறைந்திருக்கும் அமிர்தம் இதுவோ என வியப்பர் யார் கண்பட்டதோ..? அன்றொரு நாள் தாகம் என்று வந்தவர்க்கு குடத்தில் நீர் கொடுத்தால் நம்ப மறுத்து செவ்விளனி நீரென்று வாதிடுகையில் கூட்டிச் சென்று துலா பிடித்து நீரள்ளி குடிக்கக் கொடுத்தோம் அதிசயித்தவர் காரணம் கேட்கையில் செல்லும் வழியில் எங்காவது நன்னீர்க் கிணறு இருப்பின் இரவோடு இரவாய் தூக்கிவந்துவிடுவோம் என்று நக்கலாய் சொன்னதை நம்பிச் சென்றவர் எம்மைப் பின் 'கிணறு காவிகள்' ஆக்கி விட்டார்.. அவர் இன்று வந்திருந்தால் பூரித்துப் போயிருப்பார் மத்திய கிழக்கிலிருந்து தூக்கிவந்துவிட்டதாய்.. Event Page:  https://www.facebook.com/events/756672027744407 Click here for the Full news on this issue  நம் ஊர்.. நம் கிணறு.. ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினைக்காக ஒன்றையும் செய்ய முடியவில்லை.. இது சம்பந்தமா ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தினை பல மாதங்களின் முன்பு முன்வைத்தேன். இருந்தும் சில பல அரசியல் காரணங்களால் கைகூடவில்...

பன்னாடைகள்

படம்
நேற்று முழுக்க முகப்புத்தகத்தில பன்னாடை.. பன்னாடை அப்பிடின்னு திட்டிடிருக்கிரன்களே? பன்னாடை அப்பிடின்னா என்ன? இது பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும். அருகிலுள்ள படத்தினைக் காண்க. அரிதட்டு போலவே இதுவும் கழிவுகளை வடிகட்ட பயன்படக்கூடிய மிகவும் உபயோகமான ஒரு பொருளாகும். என்ன ஒன்று நல்லதை விட்டுவிட்டு கழிவுகளை வடிகட்டி வெளியே வைத்திருப்பதனால், அதன் பயன்பாடுகளை மறந்த நமது நன்றி கெட்ட சமூகம் அதனை முட்டாள் என்கிறது.  சரி இதெல்லாம் இப்ப எதுக்கு எண்டு கேட்டீங்கன்னா முதல்ல கீழே தரப்பட்டிருக்கும் எனது நேற்றைய பதிவை படிங்க.  நாங்க தலைவர்ட பர்த்டேய கேக் வெட்டி கொண்டாட இருக்கோம். என்ன சொல்றீங்க? அது போன கிழமையே முடிஞ்சுதே? இல்லை பன்னிரெண்டாம் திகதி லிங்கா ரிலீஸ் அன்னிக்கே தியேட்டர்ல கொண்டாட arrange பண்ணியிருக்கிறாங்க.. ஒ அப்பிடியா..  தலைவர் என்பதன் அர்த்தம் எவ்வாறு அடுத்த தலைமுறையிடமிருந்து எப்படி படிப்படியாக அகற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதனை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது எமது தலைமுறை. அதற்க...

'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul)

படம்
ஏனோ இதுவரை இங்கே நம்மைப்பற்றிய பயோ டேட்டா (நேரடியாக) எழுதவேண்டிய தேவை வரவில்லை. அப்படி வந்த சமயத்தில் 'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul) அப்பிடின்னு ஒற்றை வரியில் அமைதியா சொல்லிட்டுப்போற பக்குவம் / தெளிவு வந்திடிச்சு. இருந்தும் இந்த மாற்றம் வருவதற்குள் பல வருடங்களல்ல, பல பிறவிகள் சென்றிருந்தன. அதெப்பிடின்னு சின்னதா, அறுதியும் இறுதியுமா.. ஒரு trailer போட்டோம்ன்னா.. பல பிறவிகளின் சாரமாக.. இந்தப் பிறவியில், பதினைந்து வயதுவரை, சைவத் திருமுறைகள், ஆண்டாள் பாயிரங்கள், நாயன்மார் சரிதைகள், சைவ சித்தாந்தங்கள் என்று பக்தி மார்க்கத்தில் கடவுளைக் காதலித்த காலம் முதல் அத்வைதம், துவைதம், சென் தத்துவங்கள், ஓஷோவின் பார்வைகள் என்று பலவற்றை இருபத்தியைந்து வயதுவரை தத்துவார்த்த ரீதியிலும், எண்ண அலைகள், அல்பா, பீட்டா, டெல்டா, தீற்ரா, பிரைன்வேவ்ஸ் என காது கிழிய ஹெட்போனை மாட்டிட்டு முப்பது வயதுவரை விஞ்ஞான/பௌதீக ரீதியிலும் எதையோ கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து செய்த...

யோ. அனந்தன் : பாகம் மூன்று : அம்பி குரூப்

படம்
"டேய்.. இங்க எழும்பி வாடா.." "என்ன சார்..?" சடார் படார் எண்டு கை, கால், தோள், தலை எண்டு கண்மண் தெரியாமல் அடிவிழுகிறது. "இவருக்கு.. இப்ப.. ஏன்.. அடிவிழுது.. எண்டால்..." பூசையை நிப்பாட்டாது.. "நீ என்ன பெரிய ரௌடியாடா..? " "இல்லை சார்.. நீங்க தான் அப்பிடி சொல்லுறியள்." "என்னையே எதிர்த்து கதைக்கிறியா..?" குருவானவரின் பூசை இப்போது அதி தீவிரமடைகிறது.. "நீ இப்ப என்ன செய்யிறாய் எண்டால் உண்ட அப்பாவையும் அம்மாவையும் சைக்கிள் ரிக்சாவில பின்னால ஏத்திக்கொண்டு 'சுன்னாகத்திலையே நான் தான் பெரிய ரவுடி' எண்டு கத்திக்கொண்டு போ.. " அடி இன்னும் நிற்கவில்லை இருந்தும், அந்த இக்கட்டான சூழலிலும் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு "நீங்க பெரிய ரவுடி எண்டு சொல்றத்துக்கு ஏன் சார் என்ர அம்மா அப்பாவை ஏத்திக்கொண்டு போகணும்?" ஒரு கணம் திகைத்த குருவானவர், உடனே சுதாகரித்துக்கொண்டு நாலாவது சாம பூசையை தொடங்குமுன் நம்மாள் எஸ்கேப். இது நடந்தது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரி, ஆண்டு ஆறு வகு...

குற்றவுணர்வு

படம்
கடந்த காலங்களின் நினைவுகளை  அழித்துவிட்டதாய் அவை தந்த ரணங்களை ஆற்றிவிட்டதாய்  ஆறுதல்கொள்ளும் ஒவ்வொருமுறையும்  ஏதோவோர் புகைப்படம்..  நினைவுகளை கிளறி விடலாம்  ரணங்களை மீண்டும் கிண்டிப் பார்க்கலாம்  ஏன் எதற்கு என்று அறியாத வலிகள்  ஏதோவோர் குற்றவுணர்வு  பாடசாலை விட்டுவரும் நேரங்களில் மிதிவண்டியில் லாவகமாக காவல்துறைக்குப் போக்குக்காட்டி  அருகருகே வரும் சில நிமிடங்களில்  பலவற்றை பேசியிருக்கிறோம்  எதுவும் நினைவிலில்லை  ஒன்றைத் தவிர.. போவது பற்றி விவாதிக்கையில்  உன் விருப்பம் உரைக்காமலே  நீ போய்விட்டாய்   நினைத்ததை முடிக்காமல்  நான் மட்டும் உயிருடன் இருக்கிறேன் நம் புகைப்படத்தைப் பார்த்தபடி  அழக்கூடத் தெம்பில்லாமல்..

புட்டும் தேங்காய்ப்பூவும்

படம்
எரியுற நெருப்பில எண்ணைய வாக்கிராப்போல இது தேவையா என்று ஒருக்கா தோணிச்சு. ஆனால் தற்போது இலங்கையின் பலபாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மிதவாத சிங்கள பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து ஏன் இன்னும் பலர் மௌனமாகவோ அல்லது அடக்கி வாசிக்கிறார்கள் என்றோ பலருக்கு தோன்றாமலில்லை. இன்னும் சிலரோ அதற்க்கும் மேலே போய், புட்டும் தேங்காய்ப்பூவும் போல இருக்கும் எமதருமை சகோதரர்களுக்கு  இது நல்லா வேணும் என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். எனது இந்தப் பதிவு கூட மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும், ஆனால் ஏதோ என்னால் முடிந்தவரை இரு தரப்பு மனோபாவங்களையும் எனக்குத் தெரிந்தளவில் சிறிதே அலச முயன்றிருக்கிறேன். கரணம் தப்பினால் மரணம் தான். சமீபத்தில் கூட ஒரு பிரபல பதிவர் இவ்வாறு முயன்று பல அவதூறுகளை வாங்கிக் கட்டியிருந்தார். அவரது நிறுவனமும் சம்பந்தமேயில்லாம தூற்றப்பட்டது. இருந்தும் விதி யாரை விட்டது..? பார்க்கலாம். மே 2009 நடுப்பகுதி. இறுதிக்கட்டப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். இணையப் போராளிகள் தீவிரமாக முகப்புத்தகத்த...