இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்கிரடிபிள் இந்தியா (Incredible India)

படம்
2013 பிறக்கும் வரை எதுவுமே எழுதுவதில்லை.. பதிவுலகத்துக்கு சற்று விடுமுறை கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அதையும் மீறி எழுதவைத்தது சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட டெல்லி மாணவியின் மரணம். கடந்த சில வாரங்களாகவே பல அரசியல் பிரமுகர்கள், செய்தி நிறுவனங்களை மட்டுமல்லாது பதிவுலகையுமே சற்றே கொந்தளிக்க வைத்த நிகழ்வு. பொதுவாகவே பாலியல் வல்லுறவு என்பது எவ்வளவு மிருகத்தனமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்க்கான அடிப்படைக்காரணி யாரோ எங்கேயோ ஓரிரண்டு மனித மிருகங்களில் மட்டுமே இருப்பதல்ல. ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளிருக்கும் இருக்கும் அரக்க குணத்தின் முற்றுமுழுதான வெளிப்பாடு ஒரு பெண்ணின்மீது காமம் கலந்து திணிக்கப்படுகையில் அது பாலியல் வல்லுறவாகிறது.  This Photo was Shared on Fb by some indian friends என்னடா இது சாதாரண மனிதர்களும் அந்த மிருகங்களும் ஒன்றா என்று கோபப்படுபவர்கள் சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கயவர்களையுமே நல்லவர்கள், அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கு என்று வாதிடுவதர்க்காய் நாலு பேர் இருக்கிறார்கள...

அன்புள்ள வாசகர்களுக்கு

படம்
சமீபத்தில் ரசிகையின் நீண்டநாள் வாசகர் ஒருவரை தற்செயலாய் சந்தித்திருந்தேன். அவரையே அன்று தான் முதன் முதலில் சந்திக்கிறேன். ஆனால் அவர் "உங்களுக்கு எல்லாத்தைப் பற்றியுமே தெரிந்திருக்கே" என்று வியந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். என்னடா இது நம்ம பாட்டுக்கு என்னமோ கிறுக்கிட்டு இருக்கிறம் அதை வைத்து எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க எண்டு. அவரிடமே கேட்டுவிட்டேன். "இல்லை.. பொதுவாகவே இசை நடனம் கதை கவிதை என்று எல்லாமே எழுதிறீங்களே. அதுதான். கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு." என்றார். இற்றைக்கு சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள். 1997/12 இருபத்தரோ இருபத்தேழோ என்று சரியாய் ஞாபகமில்லை. "கௌரி. New Yearக்கு BMICHல ஒரு ப்ரோக்ராம் இருக்கு. பாடுறத்துக்கு ஆக்கள் தேவை. வரமுடியுமா?" என்று சாதாரண தரம் சித்தியடைவதர்க்காக ஒரேயொரு கீர்த்தனையை மூன்று மாதம் கஷ்டப்பட்டு ஓரளவு சரியாகப் பாடக் கற்றுத்தந்த எனது சங்கீத ஆசிரியை மினக்கட்டு போன் பண்ணி கேட்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வயலினில் தத்தித் தத்தி எதோ சில நிகழ்ச்சிகள் செய்திருந்தாலுமே மேடையேறிப் பாட...

அன்பென்ற மழையிலே

படம்
"உனக்கு என்ன வேணும் சொல்லு?" காரை மெதுவாக பிளாட்டின் கீழே நிறுத்திவிடு அவள் பக்கம் திரும்பி ஆசையாய் கேட்டபோது அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  "தெரியலை" ப்ளேயரில்  Mariah Carey  மாறி இப்போ மின்சாரக்கனவில் பிரபுதேவா கஜோலைக் கலாய்த்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகாலை இரண்டு மணியிருக்கும். சிறு வயதிலிருந்தே வேத பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இயேசு பிறந்தது 24 இரவா இல்லை 25 இரவா என்ற குழப்பம் இன்னும் அவளுக்கு தீர்ந்தபாடில்லை. இப்பிடித்தான் கார்த்திகை தீபத்தையும் தீபாவளியையும் கூட அடிக்கடி போட்டு குழப்பிக் கொள்ளுவாள். அவ்வளவெல்லாம் எதுக்கு சாதாரணமாய் இடது வலது சொல்வதற்கே கொஞ்சநேரம் பிடிக்கும். அதான் எதோ DRDயோ BRDயோ எண்டு சொல்லுவாங்கள். அதில்கூட குழப்பம் அவளுக்கு. இதனால் தானோ என்னமோ நல்லகாலமாய் மெடிசின் படிக்கவில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள்ளுவாள். ஒருவேளை அப்பிடிப் படித்திருந்தால் இன்றைக்கு எத்தினை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்? ஹ்ம்ம்.. இப்ப மட்டும் என்னவாம்..? நீண்ட நெடிய பெருமூச்சொன்று வந்தது அவளிடமிருந்து...

நீ தானே என் பொன்வசந்தம்

படம்
எல்லோருமே ஒண்டு சேந்தாப்பல ப்ளோக்ல, fbல எண்டு திட்டித் தீர்க்கிறான்களே.. அவ்ளோ மோசமாவா இருக்கும் என்ற பயத்துடன் தான் பார்க்கத் தொடங்கியது. முதல் பாட்டு "புடிக்கலை மாமு". தொடக்கமே சொதப்பல், முக்கியமாக சந்தானம் இந்தப்பாட்டில் வலுக்கட்டாயமாக சொருகப்பட்டது போன்றொரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை. வழமையாக படங்களில் சந்தானத்தினது காட்சிகள் கலகலப்பை உண்டுபண்ணும். இதில் என்னமோ அது மிஸ்ஸிங். ஒரு கட்டத்துக்குப் பின் விவேக்குக்கு நடந்ததுதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. Collegeஇல் சமந்தாவை ஜீவா பல வருடங்களின் பின்பு முதன்முதலாக பார்க்கும் காட்சிகள் (அசடு வழிவது முதல் கொண்டு) வசனங்கள் அனைத்தும் அருமை. படத்துக்கே " நீ தானே என் பொன்வசந்தம் " எண்டு பேரை வைச்சிட்டு அந்த அருமையான பாடலை அவ்ளோ சுமாரா பாடியிருக்க வேணாம். தவிர நீண்டநாள் அமுங்கியிருந்த உணர்வுகளை மீண்டும் எழுப்பிக் கொண்டுவருமளவுக்கு, காயத்துக்கு மருந்திடுமளவுக்கு அந்த குரலில் வசீகரம் இல்லை என்று தான் சொல்லவேணும். பல இடங்களில் பார்த்த மேடைக்காட்சி என்றாலும் என்னமோ விசேடமாக இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இ...

கமலின் விஸ்வரூபம்

படம்
விஸ்வரூபத்தில் ஒருபாடல். துப்பாக்கி எங்கள் தோளிலே .. கேட்கையில் தொண்ணூறுகளுக்கு எம்மையறியாமலே இழுத்துச்செல்கிறது.  போரை நாம் தேர்ந்தெடுக்கவில்லை போர்தான் எம்மை தேர்ந்தெடுத்துகொண்டது எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது அன்று கேட்க்கையில் புல்லரிக்கவைத்த வரிகள். இன்னும் எத்தனை முறை தான் என்று சலிக்க வைக்கிறது இப்போது.  ஊரைக்காக்கும் போரிற்க்கு ஒத்திகை செய்கின்றோம் சாவே எங்கள் வாழ்வு என்று சத்தியம் செய்கின்றோம். கண்ணீர் குளம்கட்டவில்லை. வெறுமை மனதை பிசையவில்லை. துக்கம் தொண்டைக்குழிக்குள் நின்று அழுத்தவில்லை.   துப்பாக்கி எங்கள் தோழனே தோழ் கொண்ட வீரன் தெய்வமே எப்போதும் எங்கள் கோப்பையில் தேநீர் பருகும் மரணமே   இதற்குமேல் கேட்டத் தோன்றவில்லை. சிறுவயதிலிருந்தே நமக்கு என்று இருந்த ஒரே துணை மௌனம். அதீத உணர்வுகள் அலை மோதும்போது மௌனத்துக்குள் முடங்கிக்கொள்வதில் இருக்கும் ஆறுதலே ஒருசுகம் தான். யாரினதும் அணைப்போ ஆறுதல் படுத்துதல்களோ தேவையிருப்பத...

12.12.12

படம்
"புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்"  -'நியூயார்க் டைம்ஸ்' Photo Credit: Diraj சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது வரும் 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது. உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், இந்தப் பிறந்த நாளை தங்களால் முடிந்த அளவு சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமா உலகமும், ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நேரத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12+12+12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன! இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 5

படம்
"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார். மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை. அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று.   இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் ...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 4

படம்
வருடக்கடைசி நெருங்கிக்கொண்டிருக்கின்றது. FBயில் பலர் இப்போதே countdown தொடங்கிவிட்டார்கள். மாயன் காலண்டர் வேற உலகம் அழியப்போகுது என்று பெரும் பீதியக்கிளப்பிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஒரு போன்கால்.. "தம்பி.. 2013 பிறக்கப்போகுது, எனக்கு எங்கடை கரிகணன் காலண்டரை வைத்து ஒரு விளம்பரம் செய்ய வேணும்".  ஆறடி உயரமும் முகமேதெரியாதளவுக்கு தாடியுமாக சட்சாத் அவர் வேறுயாருமல்ல, முதன் முதலாய் நமது குறிக்கோள்களைப் புரிந்து பாராட்டி தூக்கிவிட்ட கரிகணன் பிரிண்டர்ஸ் முதலாளி திரு.ராஜ்குமார் அவர்கள் தான். என்னா ஒரு நம்பிக்கை.. தன்னம்பிக்கை..   நாளை நடக்கப் போகும் ஒன்றிற்காய் இன்று நமது முயற்ச்சியை கைவிட்டுவிட்டு சும்மாயிருப்பது சுத்த மடைத்தனம் அல்லவா? அந்தவகையில் 2013 பிறக்குதோ இல்லையோ அவர்களுடைய வேலை பெரிய பெரிய கம்பனிகளுக்கு ஆர்டர் எடுத்து கலண்டர், டயரி அடிப்பது. எமதுவேலை விளம்பரம் செய்வது.. யாரோ சொன்னார்கள் உலகம் அழியப்போகுதுதாம் என்றுவிட்டு வெறுமனே இருந்துவிடமுடியாது தானே? அதால..  ...

அடடே நாளைக்கு தீபாவளியில்ல?

படம்
ரசிகையின் முதல் பதிவு - புதன், அக்டோபர் 26, 2011  அடடே இன்னைக்கு தீபாவளியில்ல? அதுக்கு..  Thillakan  சொன்னது… இலவசம blog தாறன் எண்டதுக்ககாக 68 blog திறந்து வருசத்துக்கு ஒருக்க எழுதக்கூடாது ;) வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :) 11:01 pm, அக்டோபர் 26, 2011  உண்மைதான் இன்றுவரை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு ப்ளாக் திறந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக குறைந்தது மாதத்துக்கு ரெண்டு தடவையேனும் எழுத முடிந்தது இதில் மட்டும் தான். ஏனெனில் எழுதும்போது ஏனோ ஒருகட்டுக்குள் நின்று எழுதுவதென்பது என்னால் முடியாத காரியம். அந்த நேரத்தில் தோன்றுவது எதுவோ அதை அப்படியே எழுதி போட்டுவிடுவேன். திரும்பவும் பார்த்து திருத்துவதென்பது மிக மிகக் குறைவு.   ஒரு சிலர் சில பதிவுகளில் கேட்டிருக்கிறார்கள் 'இதன் மூலம் நீங்க என்ன சொல்லவாறீங்க' எண்டு. என்னதான் பேப்பர்ல போடும் அளவுக்கு ஏதோ கிறுக்கியிருந்தாலும்  சத்தியமா யாருக்கும் கருத்தோ அட்வைசோ என்று பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை.  அது மட்டுமல்லாது இங்கு எந்த இலக்...

காடு பாலைவனமாகிறது

படம்
படித்ததும் (பிடித்ததும் ?!) அறிவுக்கெட்டியதும்..  முதல்ல இதைப் படிங்க.. காடு  பாலைவன மாகிறது  திறந்து கிடக்கிறது  By JK. முதன் முதலாக ஒரு விஷப் பரீட்சை.. அட நீ எழுதத் தொடங்கினதே அதுதானே என்பவர்கள் மட்டும் தைரியமாக மேலே வாசிக்கலாம்.. மற்றவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.. “நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” சாதாரணமாகப் பார்த்தால் ஒரு மேலோட்டமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி. எங்கே தொடங்கியது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னும் எங்கே போய் முடியும் என்றெல்லாம் அறியமுடியாத கேள்வி இது. மேலும் மேலும் சிந்திதுகொண்டு போனால் 'சே நாம இத்தின்னாள் வரை பண்ணின்டிருன்தது காதலேயில்லை' என்றும் கூடத் தோன்றும். பின்பு காதல் பொய் என்று பேசவைக்கும். பின்பு திரும்ப 'அது காதலாய் இருக்ககூடாதா' என்று திடீரென அடிமனசில் ஓர் ஆசை கிளம்பும். சூடுகண்ட பூனை சற்றே யோசிக்கும். அடுப்பங்கரை கதகதப்பு சுகமாய் மீண்டும் ஓர் ஆனந்த சயனம், பின்பு திரும்பியும் சூடு வாங்கி.. வாங்கி.. சக்கரம் திரும்பவும் சுற்றுகையில்.. உணர்வுகள் படிப்பட...

அறுபடும் காலம்

படம்
ஓர் வெளியில் ஓடும் எண்ணங்கள் புத்தி பிரிக்கின்றது வேறுவேறாய்.. புரியாதபுதிர்கள் புரிபடத்தொடங்க பல்லாயிரம் புதிர்கள் பின்னிற்கின்றன சங்கிலித்தொடராய் அடிகொடுத்து அடிவாங்கி அலுத்து எதற்கும் அர்த்தமில்லாது இருந்தாலும் எடுபடாது எதிலும் பிடிபடாது எத்தனை பரிமாணங்களில் எண்ணங்களின் பரிணமிப்புக்கள் வியக்க வெறுக்க விரட்ட எதுவுமில்லாது நாகத்தின் கடைசித் தலையும் அறுபடும் காலம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோவன்றி விடுபடும் உறவுகள் இறுதியாய் வேறென்னவேண்டும்? விரட்டவிரட்ட ஓடிய காலம்போய் கால்தேய காலம் பின்னால் இழுபட்டுவருகையில் இன்னும் எத்தனை தூரமென்று அதற்க்கும் தெரியாது என்னைப்போலவே..!

ஹிமாலயா கிரியேசன்ஸ் 3

படம்
சில நிகழ்வுகள் எதற்காய் நடக்கின்றன என்பது பலசமயம் புரிவதில்லை. அதிலும் எறும்புகளாய் ஊர்ந்துகொண்டிருக்கும்போது முன்னாலிருக்கும் இரை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதுவே ஒரு பறவையாய் வானிலுயரப்பரக்கும்போது எல்லாப்புள்ளிகளும் ஒன்று சேர்ந்து ஓர் அழகிய ஓவியமாய்த் தெரியும். தெரிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதை சரியான முறையில் செதுக்கி எடுப்பதற்கு ஒரு திறமையான டீமும் தேவை. அதிலும் இந்த விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கான்செப்ட் (Concept) எடுப்பதென்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்தில் கான்செப்ட் இல்லாமலே செய்வோம் என்று முடிவெடுத்து rough-cut உம் முடித்தாயிற்று. அதைப்பார்த்துவிட்டு திருவாளர் அனந்தன் சொன்னவை, இனி இந்த ஜென்மத்தில் கான்செப்ட் இல்லாமல் செய்வோம் என்று ஒருபோதுமே எம்மை நினைக்க வைக்காது. கம்பெனி பெயரையும் குறையவிடக்கூடாது அதே சமயம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்பவும் கொடுக்க வேண்டும். அந்தவகையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இறுதியாய் ஒருவாறு முடித்து அனுப்பி தற்போது சிங்கப்பூர் Sony Entertainment Television இல் மிகவும் பிரபல்யமான...

கோழி வந்தாதா முதலில் முட்டை வந்தாதா..?

படம்
சமீபத்தில் "The Big Bang" பற்றிய கட்டுரை ஒன்று வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்த கேள்வி தான் இது.. யதார்த்தமாக பார்த்தால் இந்தக் கேள்விக்கு நான்கு பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. A) கோழி  B) முட்டை C) இரண்டுமே D) இரண்டுமேயில்லை. இதை தர்க்கரீதியாக ஆராய்ந்தால் " இரண்டுமேயில்லை" என்பது மட்டுமே பதிலாக அமைய முடியும். ஏனெனில் நித்தியம் என்பதில் ஆரம்பமோ இறுதியோ இருப்பதில்லை. இது வெறும் தர்க்க ரீதியான பதிலே தவிர கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் சார்ந்ததல்ல.  இக்கேள்வியை "காரணம் மற்றும் விளைவு" என்பதின் அடிப்படையில் பார்த்தால் எப்போதுமே ஒன்றின் விளைவுக்கு எதுவோ ஒன்று காரணமாக அமையும் போது அதன் உருவாக்கத்திற்க்கு வேறெதுவோ காரணமாக அமைந்திருக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒரு பேச்சுக்கு முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொண்டால், அப்போ முட்டை எங்கிருந்து வருகிறது? கோழியிலிருந்து தானே? இல்லை வேறேதாவது ஒரு உயிரினம் பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமமடைந்து கோழியினது முட்டையை போட்டது என்றால் அது உருவாகிய முட்டையை இன்னோர் உயிரினம் போட எத்தனை மில்லி...

Drink Bottle

படம்
"அப்பா எனக்கு Drink Bottle ஒண்டு வாங்க வேணும்" "ஹ்ம்ம்.." ஆறு மாதங்களின் பின்பு நேற்று தான் வந்திருந்தார். கொஞ்சநேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமேண்டால் அதற்குள் அவள் தன் நச்சரிப்பைத் தொடங்கி விட்டிருந்தாள். "ஒரு இருநூறு ரூபா வருமெண்டு நினைக்கிறன்.." முடிக்கவில்லை.. "இருநூறா.. அதெல்லாம் வேண்டாம். இப்ப கொண்டு போறதுக்கு என்ன வந்தது..? " அம்மா குசினியிளிருந்தவாறே தன் பல்லவியைத் தொடங்கி விட்டிருந்தார். "அது பாரமம்மா.. அதோடை திறந்து குடிக்கிரதேல்லாம் கரைச்சலா இருக்கு. இதிலைஎண்டா ஸ்ட்ரா மாதிரி இருக்கும். அப்பிடியே வைச்சு குடிக்கலாம்.." அவள் விடுவதாயில்லை. "உப்பிடித்தானே எத்தினை வாங்கி பழுதாக்கி வைச்சிருக்கிறே? உதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பிறகு பளுதாப்போடும்.." அவள் அம்மாவும் விடுவதாயில்லை. "இது வேறை மாதிரி.. கெதியிலை உடையாது. எண்டை friends எல்லாம் வங்கியிருக்குதுகள்.. எனக்கும் வேணும்.." சற்று அழுத்தமாகவே முடித்தாள். "சரி. சரி சண்டை பிடிக்காதேங்கோ. நாளைக்கு சுன்னாகத்துக்கு போறன். பாத்து வங்க...

Yarl Geek Challenge - Season 1

படம்
சனிக்கிழமை (13-10-2012) விழா எண்டு சொன்னாங்களே இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அடிக்கலையே எண்டு பாத்தா, கன்னங்கரேல் எண்டு ஒரு backgroundல வெள்ளையா எதோ கிறுக்கியிருந்துது. ஒரு கரையிலை பல்பு வேறை. ஒருவேளை எடிசென்களையும் இவங்கதான் உருவாக்கிறான்களோ? Mind, Vision, Imagination, Idea.. எண்டு வேறை நிறைய ஏதேதோ இங்கிலிஷ்ல கிறுக்கியிருந்துது. பாதி புரியாவிட்டாலும் எதோ நம்ம பசங்க விவரமான ஆளுங்கதானே இந்தமுறை என்ன வித்தியாசமா பண்ணப்போறாங்க எண்டு ஆர்வமா சயந்தனுக்கு கால் போட்டு ரெண்டு வரி சொல்லுங்களேன் எண்டு கேட்டா.. சார் ஜெயின் கமிசன் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை விட்டார். அதையெல்லாம் கிரகிச்சு நாம ஒரு article எழுதிரத்துக்குள்ள யாழ்ப்பாணம் நிஜமாகவே Silicon Valley ஆயிடும்.  நிற்க, வழமையா campus மாணவர்களையும் மற்றும் IT சார்ந்தோரையும் கூட்டி ரெண்டு மாசத்துக்கொருதடவை நடக்கும் ஒன்று கூடல் தானே.. இதிலை என்ன விசேசம் இருக்கப் போகுதெண்டு கேட்டீங்கன்னா.. இம்முறை சற்றே வித்தியாசமான பாணியிலமைந்த போட்டியொன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். அதென்னன்னா "அமெரிக்காவில"...... அட திரும்பவுமா எண்டு கேக்க...